Tuesday, November 29, 2016

EGo.................................

முல்லா ஒருமுறை தன் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக ஒரு கடிகாரம் வாங்கினார்.சுவரில் மாட்ட ஆணி அடிக்க சுத்தியலைத் தேடினார்..கிடைக்கவில்லை..பக்கத்து வீட்டு காரரிடம் இரவல் வாங்கலாம்னு நினைத்தார்.
ஆனால் ராத்திரி நேரமாச்சே .சரி காலையில் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
காலைல பக்கத்து வீட்டுக்கு கிளம்பும் போது "ச்சே காலங்கார்த்தால இரவல் கேக்க வந்துட்டானே" ந்னு நெனச்சுட்டா என்ன செய்வது .சரி அப்புறம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்..
இப்படியே ஒவ்வொரு நாளும் "விளக்கு வெக்குற நேரத்துல சுத்தியல் கேட்டு வந்துட்டான் பார்"
"வெள்ளிக் கிழமை அதுவுமா இரவல் கேக்கறானே"
பக்கத்து வீட்டு காரன் இப்படி எதையாவது சொல்லி விட்டால் அவமானமாகி விடுமே என்ற தயக்கத்திலேயே பல நாட்கள சுத்தியலைக் கேக்காமல் விட்டு விட்டார் முல்லா..
மாட்டப்படாத கடிகாரம் அவர் கண்ணில் பட்டுக்கொண்டே அவரை வெறுப்பேத்தியது..
ஒரு நாள் விருட்டுனு பக்கத்து வீட்டுக்கு போய்" யோவ் போய்யா உன் சுத்தியும் வேணாம் ஒண்ணும் வேணாம் நீயே வெச்சுக்கோ" ந்னு சத்தம் போட ஆரம்பித்து விட்டார்..பக்கத்து வீட்டு காரருக்கோ ஒண்ணுமே புரியல..
இந்த கதை மாதிரி தான் அடுத்தவரிடம் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசாமல் நாமாகவே அவர் இப்படி சொல்லுவாரோ அப்படி சொல்லுவாரோ என்று மாட்டப் படாத கடிகாரத்தை போல்,நன்கு பழகியவர்களிடம் பிரச்சனைகளை தீர்வு செய்யாமல் பகைமையை வளர்த்துக் கொண்டு அந்நியமாக்கி கொள்கிறோம்.
நெருக்கமான இருவருக்குள் ப்ரச்சனைகள் வருவதற்கு மூன்றே காரணங்கள் தான் இருக்கின்றன.
ஒன்று ஒருவர் சொல்லும் காரணம்
இன்னொன்று இன்னொருவர் சொல்லும் காரணம்
மூன்று உண்மையான காரணம்
இந்த உண்மையான காரணம் என்ன என்று இருவரும் உட்கார்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும்..தங்களுக்குள் சண்டையும் சச்சரவும் வர என்ன காரணம் என்று தெரிந்து கொண்டால் அதற்கு என்ன தீர்வு என்று கண்டு பிடிக்க முடியும்..
பரம வைரிகளான இந்தியா பாகிஸ்தான் இருநாடுகளே சமரச பேச உட்காரும் போது
இருவர்..(அவர்கள் கணவன் மனைவியோ ,அப்பா பிள்ளையோ அண்ணன் தம்பியோ அல்லது இரு நண்பர்களோ) உட்கார்ந்து சமரசம் பண்ண முடியாதா என்ன?.. நிச்சயமாக முடியும்.
நமக்குள் இருக்கும் EGo வை போகசொன்னாலே போதும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...