Saturday, November 19, 2016

ஒழுக்கம் ................

ஒழுக்கத்தில் இருப்பதற்கும், ஒழுக்கமுடையவராய் ஆவதற்கும் வேறுபாடு இருக்கிறது.
ஒழுக்கத்தில் இருப்பது என்பது உள்ளதை விளங்கிக் கொள்வதன் மூலம் வருகிறது.
அனால், ஒழுக்கமுடையவராய் ஆவது என்பது தள்ளிப் போடுவதும், உள்ளதை, நீங்கள்
என்னவாக விரும்புகிறீர்களோ, அதைக் கொண்டு மறைப்பதும் ஆகும்.
ஒழுக்கம் என்பது எது இல்லையோ அதுவாக மாறுவதல்ல. ஒழுக்கம் என்பது எது உள்ளதோ
அதை விளங்கிக் கொண்டு, அதிலிருந்துவிடுதலை பெறுவதாகும். அந்த நடைமுறையை
விளங்கிக் கொள்ள எது உள்ளதோ அதைத் தெரிந்து கொள்ளும் நோக்கம் வேண்டும். அதன்
எல்லாவிதச் சிந்தனை, உணர்வு, செயல் ஆகியவற்றைப் பின் தொடருவதற்கான நோக்கம்
வேண்டும். உள்ளதை விளங்கிக் கொள்வது என்பது மிக மிகக் கடினமானதொன்று. ஏனெனில்
அது எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. உள்ளதை விளங்கிக் கொள்ள
விழிப்புணர்வும், எச்சரிக்கையும், விரைவும் உள்ள மனம் தேவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...