Friday, November 25, 2016

முற்றிலும் தவறானது................



வீட்டிற்கு அருகில் உள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சேர்த்து தங்களுடைய குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று எண்ணாமல்,
சில குறிப்பிட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தான் தங்களுடைய குழந்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று எல்லோருமே விரும்புகின்றனர்.
இதற்குக் காரணம் 
அந்தப் பள்ளிகளில்தான்
நன்றாகச் சொல்லிக் கொடுக்கிறார்கள் என்பது இல்லை,
அந்தப் பள்ளிகளில் படிப்பது தான் நாகரிகமாகக் கருதப்படுகிறது.
இது போன்ற தவறான கருத்தால்
குறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட அவர்களுடைய குழந்தைகளை
அது போன்ற பள்ளிகளில் சேர்த்துக் குழந்தைகளின் மேல் படிப்புக்கு மிகவும் உதவியாக இருக்கக் கூடிய பணத்தை அதிக அளவில் வீணடிக்கின்றனர்.
இந்த மனநிலை முற்றிலும் தவறானது.
குழந்தைகளை உங்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள ஏதாவது ஒரு பள்ளியில் சேருங்கள்.
உங்களுக்குப் போதிய அவகாசமும்
கல்வித் தகுதியும் இருந்தால் ,
குழந்தைகள் பள்ளியில் இருந்து திரும்பியதும் ,
அவர்களுக்கு நீங்களே சிறிது நேரம் பாடம் சொல்லிக் கொடுங்கள்.
உங்களால் அது இயலாது எனில்
குழந்தைகள் பள்ளியிலிருந்து திரும்பியதும்
வீட்டில் அவர்கள் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம்
அன்றாடப் பாடங்களைப் படிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அது போதும்.
வீணாக அலட்டிக் கொள்வது உண்மையாகப் படிப்பது ஆகாது.
அது தங்களையும் மற்றவர்களையும் ஏமாற்றிக் கொள்ளும் ஒரு நடவடிக்கைதான்.
நாமங்கள் சொல்லி
நன்மைகள் பல பெற்று
நலமுடன் வாழ்ந்திட
இனிய காலை வணக்கங்கள்.
மீண்டும் நாளை சந்திப்போம்!!!!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...