மகாவிஷ்ணுவின் கையில் சுதர்சன சக்கரம் இருக்கும். இந்த சக்கரத்தை அருளியவர் சிவபெருமான் தான். பெருமாளுக்குரிய ஆயுதங்களில் ஒன்றாகவே சக்கரம் இருந்துவருகிறது.
ஆனால் திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ள திருவிற்குடி மயானேஸ்வரர் ஆலயத்தில், சக்கரம் ஏந்திய சிவபெருமானை தரிசிக்கலாம்.
இத்தலம் சிவபெருமானின் எட்டு வீரச்செயல்கள் நிகழ்த்தப்பட்ட, அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். இங்கு சலந்தராசுரன் என்பவனை,
இறைவன் சக்கரத்தால் அழித்தார். இறைவனின் பெயர் திருமயானேஸ்வரர் என்பதாகும். அம்பாள் பெயர் பரிமளநாயகி. இத்தல உற்சவரின் கையில் சக்கரம் உள்ளது.
No comments:
Post a Comment