“பாரதிராஜா சார்கிட்ட அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணப்போ, எனக்கு இளையராஜாவோட சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைச்சது. கம்போஸிங் சமயத்திலே கண்ணதாசன் வந்து உட்கார்ந்தது, நாங்கள் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொண்டது எல்லாமே இன்றுவரை மறக்க முடியாத அனுபவங்கள். 'இளையராஜா என்னப் பாட்டு போடப் போறாரோ…?' என்ற ஆர்வமும், எதிர்பார்ப்பும் பெருசா இருக்கும். ‘புதிய வார்ப்புகள்’ படத்திலே ஒர்க் பண்றப்போ இளையராஜா என்கிட்ட, ‘என்னப்பா! உங்க டைரக்டருக்கு என்ன பாட்டுதான் வேணும்? எந்த டியூன் போட்டாலும் ‘பிடிக்கலே… பிடிக்கலேன்னே சொல்றாரு’ன்னு கேட்டாரு. இந்தப் பாடல் காதலோட உச்சக்கட்ட பாடல்ங்கறதால, ஸ்லோகம் பாட்டு ‘ஐங்கிரி… நந்தினி…’ங்கற மாதிரி இருந்தா நல்லா இருக்கும்னு சொன்னேன். அப்ப போட்டதுதான் ‘தந்தன தந்தன தாளம் வரும்…’ பாட்டு. அதுக்குப் பிறகு, ‘நிறம் மாறாத பூக்கள்’, ‘கல்லுக்குள் ஈரம்’ன்னு அவரோடதான் பயணம். ரீரிக்கார்டிங்குன்னா முதல் ஆளா நான்தான் ஆஜராவேன்.
அவருக்கு இந்தி பாடல்கள் கேட்பதுன்னா ரொம்ப பிடிக்கும். நவ்ஷத் மாதிரியான ஜாம்பவான்கள் பாடல்களை எல்லாம் விரும்பிக்கேட்டு, மகிழ்ச்சியா இருப்பாரு. அந்த சமயத்திலே, ‘இந்த அளவுக்கு நாம வளரலையே’ என்ற ஆதங்கம் அவருக்கு இருந்தது. அப்ப நான் அவர்கிட்ட, ‘நீங்க அதையும் தாண்டி வளர்ந்துட்டீங்க’ன்னு சொல்லுவேன். நான், சுந்தர்ராஜன், ரங்கராஜன், மணிவண்ணன் என நாலு பேர், தெலுங்கு டைரக்டர்ஸ், தமிழ் டைரக்டர்ஸ்ன்னு எல்லா பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாருமே அவருக்காகக் காத்திருந்தோம். இந்த கொடுப்பிணை வேறு எந்த மியூசிக் டைரக்டர்ஸுக்குமே கிடைக்கலே; இனிமேலும் கிடைக்காது. அவருடைய ‘உதிரிப்பூக்கள்’ல இருந்த பாட்டை வச்சுத்தான் நானும் ஆர்.வி. உதயகுமாரும் ‘கிழக்கு வாசல்’ படம் பண்ணினோம். இளையராஜாவின் ஒவ்வொரு படத்தோட பாடலும் வேறொரு கதைக்கு அஸ்திவாரமா அமைஞ்சிருக்கு என்பது அவர்கிட்ட இருக்கிற பிளஸ்!”என்றார்.
No comments:
Post a Comment