பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் பல்வீந்தர் சிங், டாக்சி டிரைவர். இவருக்கு ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா வங்கியில் கணக்கு உள்ளது. கடந்த நவம்பர் மாதம் இவரது வங்கி கணக்கில் 98,05,9510,231 ரூபாய் கணக்கு வரவு வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் மறு நாளே அவர் கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இது குறித்து பல்வீந்தர் சிங் பலமுறை வங்கியில் சென்று கேட்டும் எந்த பதிலும் இல்லை.தற்போது இது தொடர்பாக வருமான வரிசோதனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பல்வீந்தர் சிங் கூறியதாவது:-
நான் பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் அடிப்படையில் கணக்கு தொடங்கினேன். எனது கணக்கில் மொத்தம் ரூ.3 ஆயிரம் இருந்தது.எனது கணக்கில் ரூ.9806 கோடி வரவு வைக்கபட்டது தொடர்பாக பல முறை வங்கிக்கு சென்றேன் ஆனால் யாரும் எந்தவித பதிலும் சொல்ல வில்லை.அதே சமயம் எனது பழைய பாஸ் புக்கை வாங்கி கொண்டு 7 ந்தேதி புதிய பாஸ் புக் வழங்கினார்கள்.ஆனால் அதில் ஏற்கனவே எனது கணக்கில் வரவு வைக்கபட்ட 9806 கோடி கணக்கு விவரம் எதுவும் இல்லை.
வங்கியின் கிளை மேலாளர் ரவீந்தர் குமார் எந்த வித தகவலும் என்னிடம் கூற மறுத்து வந்தார்.இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வங்கியின் மேலாளர் குறிப்பிடும் போது இது தவறுதலாக பதிவு செய்யபட்டு உள்ளது. மறுநாள் அது சரிசெய்யப்பட்டு விட்டது..
No comments:
Post a Comment