திரு.சுதாகர் புல்லாங்குழல் கலைஞராக ராஜாவிடம் பணியாற்றவர், 'புத்தம் புது காலை' 'பொத்திவச்ச மல்லிக மொட்டு' போன்ற எண்ணற்ற பாடல்களுக்கு இவரின் மூச்சில் வெளிவந்த இசை தான் இப்போதும் நாம் கேட்பது, இவருக்கு இன்னொரு பெயரும் உண்டு
"முதல்
மரி
யாதை" புகழ் சுதாகர் என்று.. காரணம் முதல் மரியாதை படத்தில் தனது புல்லாங்குழலில், குயிலின் குரலை கொண்டுவந்தவர் இந்த மகாகலைஞன்.
இவர் வெறும் புல்லாங்குழல் விற்பன்னர் மட்டுமல்ல, ராஜாவின் அனேக பாடல்களில் மூதாட்டியை போல் பேசுவதும் இவரே, உதாரணத்திற்கு "பொண்ணு ஊருக்கு புதுசு" படத்தில் 'ஓரம்போ ஓரம்போ' பாடலின் இடையே வரும் மூதாட்டியின் குரலும் இவருடையதே.. அதுமட்டுமல்ல 'மெல்ல திறந்த கதவு' படத்தில் இடம்பெற்ற 'சக்கரக்கட்டிக்கு சித்திரக்குட்டிக்கு' பாடலில் வரும் மூதாட்டியின் குரலும் இவருடையதே... இசைஞானியின் 'நத்திங் பட் விண்ட்' என்ற ஆல்பத்தில் சில துணுக்குகளை வாசித்தவரும் இவரே..
ராஜாவின் சிஷ்யர் திரு.ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது முதல் படமான் 'ரோஜா' வில் இடம்பெற்ற "ருக்குமணியே ருக்குமணியே' என்ற பாடலுக்கு மூதாட்டியின் குரலுக்கு நாடியது இவரையே.......!!!
No comments:
Post a Comment