சினிமா இசையைப் பொறுத்தவரை, பாட்டைக் கேட்பவர்கள் பாட்டைக்கேட்டவுடன் ‘ரிப்பீட்’ பண்ணணும். கேட்டவுடன் தாளம் போடணும். படத்தில் வரும் அந்த சிச்சுவேஷனுக்குத் தகுந்த மாதிரி ‘ரியாக்ட்’ பண்ண வைக்கணும். படத்தில் சோகமான காட்சியா? பார்க்கிறவங்களையும் சோகத்தில் ஆழ்த்தணும். இப்படி நான் நினைத்ததையெல்லாம் செய்திருக்கிறறேன் இந்த இடத்தில் பாட்டு முடிந்ததும் ரசிகர்கள் கை தட்டலேன்னா, நான் இசையமைக்கிறதையே விட்டுடுறேன்னு சொல்லி, அப்படியே நிறைய படங்களில் செய்திருக்கிறேன்.
அந்த இடங்களில் கை தட்டல் வந்திருக்கு. இது என்னோட திறமைன்னு நான் சொல்ல வரலே. எல்லாம் தானாகவே வருது.
ஒரே சமயத்தில் பல படங்களுக்கு இசை அமைப்பதால் நிச்சயமா தரம் பாதிக்கப்படாது. இசையமைப்புக்குன்னு ஒரு சில விதி முறைகளை (ரூல்ஸ்) வைச்சிக்கிட்டு அப்படியே ‘பாலோ’ பண்ணுகிற இசையமைப்பாளர்களுக்குத்தான் இந்தப் பிரச்சினையெல்லாம் வரும். எனக்கு அப்படியெல்லாம் கிடையாது. நான் எந்த விதிமுறைகளையும் பாலோ பண்றது இல்லை. இசையில் இயற்கையா என்ன வருதோ அதன் இஷ்டம். இப்படி நான் இசையின் மேலேயே பாரத்தைப்போட்டு விட்டு வேலை செய்கிறேனே தவிர என்னை நானே பெரிசா சார்ந்திருக்கிறதில்லே. இசையில் எந்த ராகம் வந்தாலும் சரி, எனக்கொண்ணும் கவலையே கிடையாது.
உதாரணமா ஒரு மகிழ்ச்சியான சீன் (காட்சி) வருதுன்னு வைச்சுக்கங்க. அதில் ஒரு பாட்டு, அந்தப்பாட்டுக்கு நான் ட்யூன் போடுறப்ப சுபபந்துவராளிராகம் வருதுன்னு வைச்சுக்கங்க. இது துக்கமான ராகமாச்சேன்னு நான் கட்டுப்பாடு எதையும் விதிக்கிறதில்லே.அந்த நேரத்தில் எது வருதோ அதுதான் ராகம். அதுதான் தாளம் ,அது தான்மியூசிக், நான் வந்து மண்டையை உடைச்சிக்கிட்டோ, முடியைப்பிச்சிக்கிட்டோ மியூசிக் அமைக்கிறதே இல்லை. வந்து கேட்சிறவங்களுக்குப்பிடிக்குதா வச்சுக்கோ.பிடிக்கலியா, விட்டுடு அவ்வளவுதான். கேட்கிறவங்களுக்குப்பிடிக்குது பிடிக்காமப் போகுதுங்கிறதைப் பற்றி எனக்குக்கவலையே இல்லை.
முதல்ல நான் படத்தை முழுமையைாப் பார்க்கிறேன். அப்ப எந்த ஐடியாவும் வராது. அப்புறம் ரிக்கார்டிங் தியேட்டர்லே நாற்பது, ஐம்பது மியூசிஸியன்கள் காத்திருக்க மியூசிக் போடுவதற்காக ஒவ்வொரு ரீலா போட்டுக் காட்டுறப்ப மியூசிக்கை எங்கே ஸ்டார்ட் பண்ணலாம். எங்கே பினிஷ் பண்ணலாம் என்று அந்த நேரத்தில் செய்த கொள்கிறேன். அந்தப் படத்துக்கு என்ன தேவையோ, அதை மட்டுமே நான் பார்க்கிறேன். படத்தில வர்ற கேரக்டர் அந்த இடத்தில என்ன சொல்றான்..... அவனோட உள்மன உணர்வு என்ன.... அந்த இடத்தில பிக்சர் ட்ராக் ஆகுது....கொஞ்சம் வேகம் ஏற்படுத்தித்தரணும்....இல்லாட்டி போரடிக்கும். இப்படி பார்ம் பண்ணிக்கொள்கிறேன்.
இங்கே கம்போஸ் பண்ணுகிற மற்ற இசையமைப்பாளர்களும் இந்த மாதிரி இடங்களில் மியூசிக் தருவார்கள். நான் மியூசிக் தரமாட்டேன். அப்படியே மியூசிக் வேண்டும் என்ற நிலை இருந்தால் அவர்கள் அந்த இடத்தில் பயன்படுத்துகின்ற இசைக்கருவி என்னவாக இருக்கும்னு யோசிப்பேன். அது உடனே என் ‘மைண்டில்’ வரும். நான் அதைப்பயன்படுத்த மாட்டேன். இப்படிஇருக்கும் விதிகளை நான் மீறுகிறேன். புதிய இசைக்கருவியைப்பயன்படுத்துகிறேன். அதுவே புதுமையாகி விடும்... இசைக்கு ராஜா ராஜாதானே!
No comments:
Post a Comment