Saturday, November 12, 2016

வாட்ஸ் ஆப்பில் நண்பர் ஒருவரின் கேள்வி.......!

500 / 1000 நோட்டுகளை தடை செய்தால் கறுப்புப் பணம் ஒழிவதாகவே ஒரு வாதத்துக்கு ஒத்துக் கொள்கிறேன். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்
1 ) இந்தியாவின் Organized Vs Unorganized துறைகளின் விகிதமென்ன ?
2 ) Unorganized துறைகளில் தான் அதிக பேர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய சம்பளம், சிறு வணிகம் எல்லாமே பணப்பரிமாற்றத்தில் நடக்கிறது. ஒரு லோடு முட்டை வாங்கினால் குறைந்தபட்சம் 25,000 - 40,000 ஆகலாம். அதை அவர் பணமாக தான் வைத்திருப்பார். அவரை எல்லாவற்றையும் 100ரூ நோட்டுகளாக மாற்றி வைக்க சொல்வீர்களா ? ஒரு வேளை அவரிடத்தில் 500 / 1000 தாள்கள் இருந்தால் அவருடைய ‘உழைத்த பணத்திற்கு’ ‘உங்களிடம் கணக்குக் காட்டி’ உங்களுடைய தயவில் தாள்களை மாற்றுவீர்களா ?
3 ) சென்னையை விடுங்கள். அரவக்குறிச்சியிலும், பொன்னமராவதியிலும் அறுவடைப் பணத்தினை எப்படி வாங்குவீர்கள் ? எல்லோரும் RTGS / IMPS செய்யப் போகிறார்களா ?
4 ) Organized துறை என்று சொல்லப்பட்ட பங்குச்சந்தைத் துறையிலேயே உங்களால் கறுப்புப் பணத்தினைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 500 / 1000 செல்லாது என்று சொன்னவுடன் ஊரில் இருக்கும் எல்லா கறுப்புப் பண ஆட்களும் உங்கள் முன் மண்டியிடப் போகிறார்களா ?
5 ) அதிகமான 500 / 1000 தாள்கள் தான் புழக்கத்தில் இருக்கிறது என்று தரவுகள் சொல்கிறது. இருக்க தானே செய்யும். ஒரு நாட்டில் unorganized, non-banked மக்களும், வேலைகளும், சாத்தியங்களும் அதிகமாக இருந்தால் அங்கே பணப்புழக்கம் அதிகமாக தானே இருக்க முடியும். பணப்புழக்கம் அதிகமாக இருப்பதாலேயே அதை கறுப்புப் பணம் என்று சொல்வீர்களா ?
6 ) நாளைக்கு காலையில் ஆந்திராவிலிருந்து வரும் தக்காளி லோடினை கோயம்பேட்டில் இறக்க வேண்டுமென்றால், வட்டிக்கு வாங்கி அதிகாலை 3 மணிக்கு 2 இலட்ச ரூபாயோடு காத்துக் கொண்டிருக்க வேண்டும். இதை நீங்கள் முதலில் ரெகுலரைஸ் செய்து விட்டீர்களா ? செய்யாத பட்சத்தில் 2 இலட்ச ரூபாயை அந்த வியாபாரி எப்படி வைத்திருப்பார் - 500 / 1000 தாள்களாய் தானே ?
7 ) சம்பளம் வாங்கி செலவழித்து விடக்கூடாது என்று 500 / 1000 தாள்களாய் வைத்திருக்கும் ஆட்கள், வீட்டு சேமிப்பினை 500 ரூபாய் தாளாக துவரம் பருப்பு டப்பாவில் போட்டிருக்கும் இல்லத்தரசிகள், சீட்டுக்கு காசு கட்ட கடைகளில் ஒதுக்கி வைத்திருக்கும் 1000 ரூபாய் தாள்கள் - இவர்களெல்லாம் என்ன கிரிமினல்களா ? எவனோ கோடி கோடியாய் கொள்ளையடித்து சேர்த்ததற்கு இவர்கள் கியுவில் நின்று தான் வைத்திருப்பது தன் பணம் தான் என்று சொல்லி அரசாங்கத்திடம் மன்றாட வேண்டுமா ?
குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் ஆட்களை வரிசையாக நிற்க வைத்து அடையாளம் காட்ட சொல்லும். உங்களுக்கு வக்கில்லாமல் கறுப்புப் பண முதலைகளைப் பிடிக்காமல் போனதற்கு ஒட்டு மொத்த தேசமும் குற்றவாளிகளைப் போல நீங்கள் சொல்லுமிடங்களில் போய் நிற்க வேண்டுமா ?
ஜனநாயகத்தை இதை விட யாரும் காலுக்கு கீழேப் போட்டு மிதிக்க முடியாது. உங்களால் உள்ளூர் கறுப்புப் பணத்தை நீங்கள் அறிவித்த IDS திட்டத்தின் கீழ் சேர்க்க முடியாமல் போனதற்கு மக்கள் அனுபவிக்க வேண்டுமா ?
ஒத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டை ஆள்வதற்கான தகுதி கிடையாது என்பதையும்,.. இதன் பொருளாதாரத்தை சீர்படுத்த உங்களுக்கு துப்பில்லை என்பதையும் ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...