Tuesday, November 29, 2016

நல்லரசு???????????????????

மக்களுக்கான அரசு ..!!
நான் வாங்கும் பெட்ரோலுக்கு வரி
நான் வாங்கும் அரிசி பருப்புக்கு வரி
நான் வாங்கும் துணிகளுக்கு வரி
நான் வாங்கும் செருப்புக்கு வரி
பொழுது போக்க பூங்காக்கள் தியேட்டர்கள் சென்றால் அதற்கு தனியாக கேளிக்கை வரி
நான் வாங்கும் சோப்பு சீப்பு பேஸ்ட் உள்பட அனைத்துக்கும் வரி
நான் வாங்கும் பிஸ்கட் சாக்லெட்களுக்கும் வரி
நான் வைத்திருக்கும் வாகனம் ரோட்டில் செல்ல வரி
நான் வாங்கும் வாகனத்திற்கும் தனியாக வரி
நான் வாங்கும் மின் சாதன பொருட்களுக்கும் வரி
நான் வாங்கும் வீட்டு உபயோக பொருட்கள் அனைத்திற்கும் வரி
நான் பயணிக்க இரயிலில் முன் பதிவு செய்தால் அதற்கும் வரி
ஹோட்டல்களில் சாப்பிடும் உணவுப்பொருட்களுக்கும் வரி
என் வீட்டிற்கு வரும் குடிநீருக்கும் வரி
நான் குடியிருக்கும் வீட்டிற்கும் வரி
இப்படி அனைத்து வகைகளிலும் வரி என்ற பெயரில் என்னிடம் இருந்து அரசாங்கம் பிடுங்கிக்கொண்டு ....
குடிக்கும் தண்ணீர் ..
படிக்கும் படிப்பு ...
நோய்க்கு வைத்தியம் ...
இவற்றைக்கூட இலவசமாக தர வக்கில்லாத அரசாங்கம்தான் ..
இன்றைக்கு ...
நான் வியர்வை சிந்தி சம்பாதித்து சிறுக சிறுக ...
சேர்த்து வைத்த பணத்தை கருப்புப்பணம் என முத்திரை குத்தி ....
அந்தப்பணத்திலும் பாதியை வரி என்ற பெயரில் பிடுங்கிக்கொண்டு ...
மீதியை நான்கு வருடங்கள் கழித்து தருவதாக சொல்கிறது ....!!
இதுதானே மக்களுக்கான நல்லரசு???????????????????

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...