நாட்டில் புழக்கத்தில் இருந்த 85% பயன்படுத்த முடியாமல் போய்விட்டது.
மீதம் உள்ள 15% பணமான 100 ரூபாய், 50 ரூபாய், 20 ரூபாய், 10 ரூபாய் , 5 ரூபாயைத்தான் பயன்படுத்த வேண்டும்.
தற்போது வங்கிளுக்கு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் மட்டும்தான் வருகிறதே தவிர மற்ற ரூபாய் நோட்டுகளை பெரும்பாலும் யாரும் வங்கிகளில் போடவில்லை.
2000 ரூபாய் புது நோட்டை வாங்கியவர்களின் நிலையும் நாய் பெற்ற தெங்கம்பழம் நிலைதான். 2000 ரூபாய் நோட்டிற்கு சில்லறை கிடைக்காததால் அதை சிறு சிறு செலவுகளுக்கு பயன்படுத்த முடியாது. அதாவது இருந்தும் இல்லாத நிலை.

தற்போதைய சூழலில் சில்லறை தட்டுப்பாட்டை போக்கி பண புழக்கத்தை சகஜ நிலைக்கு கொண்டுவரும் ஒரே நிவாரணி 500 ரூபாய் நோட்டுதான்.
ஆனால் அந்த புது 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்திற்கு நவம்பர் 25ம் தேதிதான் (வெள்ளிக்கிழமை) வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்னும் 70% ATMகள் வேலை செய்யவில்லை.
ஆனால் அந்த புது 500 ரூபாய் நோட்டுகள் தமிழகத்திற்கு நவம்பர் 25ம் தேதிதான் (வெள்ளிக்கிழமை) வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இன்னும் 70% ATMகள் வேலை செய்யவில்லை.
November 27 முதல் Family pension, ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஓய்வூதியம் , மத்திய & மாநில அரசு ஊழியர்கள் ஊதியம் மற்றும் பென்ஷன் எல்லாம் வங்கி கணக்கில் வரத் தொடங்கும். பல தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளமும் வங்கிக்கு வரும்.
அவர்களுக்கெல்லாம் கொடுக்க எங்கிருக்கிறது பணம்? அதற்குள் அனைத்து ATMகளையும் சரி செய்துவிட்டாலும் ATMகளில் நிரப்ப பணம் வேண்டுமே?
சென்னையில் செயல்படும் ஒருசில ATMகளும் பணம் தீர்ந்ததும் நின்றுவிடுகின்றன. மீண்டும் ATMகளில் நிரப்ப பணம் இல்லை.
நல்லவேளை பிரதமர் நவம்பர் 8ம் தேதி இதை அறிவித்தார்.
நல்லவேளை பிரதமர் நவம்பர் 8ம் தேதி இதை அறிவித்தார்.
ஏனென்றால் மாத சம்பளம் வாங்கும் பலர் மாதத்தின் முதல் 5 தேதிக்குள்ளேயே தங்கள் பணத்தில் 80% பணத்தை வங்கியிலிருந்து எடுத்துவிடுவார்கள். அதனால் நவம்பர் 8 முதல் இந்த பிரச்சினை வந்தபோதும் மாத சம்பளக்காரர்களால் இதை ஓரளவு சமாளிக்க முடிந்தது. ஆனால் நவம்பர் கடைசி வாரம் முதல் பணம் எடுப்பது மிகப்பெரிய தலைவலியாகப் போகிறது.
வங்கிகள் விடுமுறையே இல்லாமல் இயங்கினாலும், ATMகள் 24 மணி நேரமும் இயங்கினாலும் பிரச்சினை பெரிதாக தீராது.
காரணம் போதிய பணம் வங்கிகளின் கைவசம் இல்லை. அதை யூகித்துதான் திருமணத்திற்கு தகுந்த ஆவணங்கள் காட்டி 2.5 லட்சம்வரை பணம் எடுக்கலாம் என சொன்னவர்கள் தற்போது அது முடியாது என சொல்லி நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

85% பணத்தை தகுந்த முன்னேற்பாடுகள் , திட்டமிடல் இல்லாமல் முடக்கிவிட்டு அதை 50 நாட்களுக்குள் சரி செய்துவிடுவோம் என சொல்வதே பக்கா ஏமாற்று வேலை. நடக்கப்போவதை அனுபவிப்பது ஒன்றுதான் தற்போது உள்ள ஒரே வழி.
No comments:
Post a Comment