Tuesday, November 15, 2016

இசையமைக்க எந்த ஒரு போராட்டம் இல்லாமல் இசை அருவியாக கொட்டுகிறது.



ஹேராம் படத்திற்கு இசைஞானி இசையமைக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்த படத்திற்கான இசைக்குறிப்பை எழுத ஆரம்பித்தார் ராஜா, அதில் சென்னையில் பதிவு செய்யவேண்டிய குறிப்பு மற்றும் புடாபெஸ்ட்டில் பதிவு செய்ய வேண்டிய 110 நிமிட இசைக்குறிப்பையும் எழுதி முடித்தார்.
"ஹேராம்" படத்திற்கு புடாபெஸ்ட்டில் பதிவு செய்ய வேண்டிய குறிப்பை சோதனை செய்யவதற்காக நடத்துனர் (conductor) திரு.லேஸ்லோ கோவாச் அவர்களை வரவழைத்து இசைக்கான பேச்சுவார்த்ததை நடத்திவிட்டால் வேலையை சுலபமாக முடித்துவிடலாம் என்று அவரை சென்னைக்கு வரவழைத்தார் இசைஞானி.
அதன் பிறகு ராஜா சார் இசையமைத்த சில துணுக்குகளை லேஸ்லோவிற்கு போட்டுக்காட்டினார், அதன் பின் இந்த படத்திற்கு முதலில் இசையமைத்து வயலின் வித்வான் திரு.எல்.சுப்ரமணியம் என்றும் அதன்பிறகு ராஜா எப்படி இந்த படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டார் என்பதையும் அவரிடம் சொன்னார். "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி" இந்த பாடலுக்கு சுப்ரமணியம் இசையமைத்த பாடலையும், அதே காட்சிக்கு ராஜா இசையமைத்த இசைதொகுப்பையும் போட்டுக்காட்டினார்.
லேஸ்லோவின் எண்ணத்தை அறிய விரும்பினார் ராஜா, ஆனால் அவர் எதும் சொல்வில்லை, பிறகு ராஜாவே அவரிடம் கேட்டார், இந்த பாடலை பற்றி நீங்கள் எதுவும் சொல்லவேயில்லையே, இது நல்லா இருக்கிறதா? எனக்கு உங்களுடைய உண்மையான எண்ணத்தை தெரிந்து கொள்ள வேண்டும், உங்களுக்கு பிடிக்கவில்லை என்றாலும் பரவயில்லை சொல்லுங்கள் என்றார்.
அப்போது லேஸ்லோ சொன்னது...
இல்லை அப்படி அல்ல ராஜா, நான் உலகம் முழுக்க சுற்றியவன், நான் இசை படித்தும், மிகப்பெரிய மேதைகளின் இசைக்கு கூட நடத்துனராக பணியாற்றி இருக்கிறேன், ஆனால் உங்கள் இசைபோல் நான் பார்த்ததில்லை, நீங்கள் இசையமைக்க எந்த ஒரு போராட்டம் இல்லாமல் இசை அருவியாக கொட்டுகிறது.
எனக்கு நிச்சயம் தெரியும் "இசை உலகின் நீங்கள் ஒரு மிகச்சிறந்த கம்போஸர்", அதுமட்டுமல்ல "பீத்தோவன் குறிப்பில் கூட தவறு இருந்தால் கண்டுபிடித்து மறுபடியும் திருத்திப் பதிக்க சொல்லி அனுப்பிவிடுவேன், ஆனால் உங்கள் குறிப்பில் தவறே இல்லையே என்று.
திரு.லேஸ்லோவைப் பற்றி ஒரு சிறிய தகவல்...
இசை வடிவத்தை பார்த்தவுடன் ஆர்கெஸ்ட்ராவில் என்ன மாதிரியான இசை ஒலி வரும் என்பதை எள்ளளவும் பிசகின்றி மனச்செவியில் கேட்கக் கூடிய அளவுக்கு இசையில் தேர்ச்சி பெற்றவர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...