சினிமாவில் "கோரஸ்" பாடுபவர் எங்கிற ஒரு பிரிவு உண்டு. ஒவ்வொரு இசைக் குழுவிலும் கோரஸ் பாடுபவர்கள் இருப்பார்கள், இவர்களில் மிக சீனியர் கமலாம்மா. இளையராஜா வந்த காலம் முதல் யுவன் வரை அத்தனை இசையமைப்பாளர்களிடமும் கோரஸ் பாடியிருப்பவர்.
அவர் கூறியது...
இளையராஜா சாரின் சிம்பொனி திருவாசகத்துக்கு கோரஸ் பாடப்போயிருந்தேன், அப்போது இளையராஜா என்னை காட்டி, "அக்கா தான் என் முதல் பாடகி", நான் கம்போஸ் பண்ணின முதல் பாடலை பாடினவங்க, அக்காவை மறக்கவே முடியாதுனு சொல்லி எல்லோருக்கும் அறிமுகப் படுத்தினார். எனக்கு மனசு
நிறைஞ்சு போச்சி, எவ்வளவு பெரிய மனுஷன், இன்னும் பழசை மறக்காமல் அவ்வளவு பேருக்கும் மத்தியில் எனக்கு பெரிய கௌரவத்தை பண்ணிட்டார்...
நிறைஞ்சு போச்சி, எவ்வளவு பெரிய மனுஷன், இன்னும் பழசை மறக்காமல் அவ்வளவு பேருக்கும் மத்தியில் எனக்கு பெரிய கௌரவத்தை பண்ணிட்டார்...
சுமார் 40 வருடத்திற்கு முன்பு ஒருநாள் சங்கிலி முருகனும், நாடக நடிகர் எல்.கே.சுந்தரும் வெடவெடனு மூணு பசங்களை அழைச்சிட்டு வந்தார், இவங்க மதுரை பக்கத்துல இருந்து வந்திருக்காங்க, இசையில ஆர்வம் அதிகம், ஏதாவது மியூசிக் ட்ரூப்ல சேர்த்து விடுங்கனு கேட்டாங்க, அந்த மூணு பசங்க தான் பாஸ்கர், ராஜா, கங்கை அமரன். அவர்களை அப்போ தேவர் நாடக கம்பெனில சேர்த்துவிட்டேன். அங்கிருந்து தான் அவங்களோட வாழ்க்கை ஆரம்பமானது.."என்று தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்துக் காெண்டார் கமலாம்மா.
No comments:
Post a Comment