Saturday, November 12, 2016

கர்ப்பக் கால நம்பிக்கைகள்! உண்மை எது? பொய் எது?

கருத்து: வயிறு பெரிதானால் பெண்குழந்தை?
உண்மை நிலை: வயிறு பெரிதாக இருந்தால் பெண் குழந்தை என்றும், சிறியதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவார்கள். வயிறு பெரிதாக தெரிவதற்கு, உடல் பருமன், குழந்தையின் எடை, அதன் அளவு, பனிக்குட நீரின் அளவு என, பல காரணங்கள் உள்ளன. கருவின் சருமத்தைப் பாதுகாக்கும் தன்மைகள் பனிக்குட நீரில் உள்ளன.இதனுடன் கருவின் சிறுநீரும் கலந்திருக்கும். சர்க்கரை நோய் இருக்கும் தாயின் வயிற்றில், பனிக்குட நீர் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால், வயிறும் பெரியதாகத் தெரியும். பெண், ஆண் என்ற பாலினத்தைவைத்து, வயிற்றின் அமைப்பு மாற வாய்ப்பு இல்லை. குழந்தையின் எடை இரண்டரை முதல் மூன்று கிலோ வரை இருக்கலாம். இதற்கு மேல் எடை இருந்தால், வயிறு நிச்சயம் பெரியதாகவே தெரியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...