Sunday, November 20, 2016

சிறுவியாபாரிகள்??????????????

//வங்கிகள் கார்ப்பரேட் மற்றும் சொத்துக்களுக்கு ஈடாக இந்த ரெண்டு தவிற நடுத்தர சிறுவியாபாரிகள் என யாருக்குமே கடன் தருவதில்லை. வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் மட்டுமல்லாமல் இப்படி சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் கூட சாக வேண்டியதுதான்.
இங்கே நாயம் பேசுபவர்கள் போனமாசம் அதானிக்குத் தள்ளுபடி செய்த 400 கோடி பற்றியும் நேற்று அம்பானிக்குத் தள்ளுபடி செய்த 10,400 கோடி பற்றியும் வாயே திறக்க மாட்டார்கள்
சேஃப் ஷோனில் உட்கார்ந்து கொண்டு நாயம் பேசுபவர்களுக்கு கேஸ்லஸ் எக்கானமி மூலம் லேமென் ப்ரதர்ஸ் சம்பவம் போலவே ஒரு ஆப்பை உணரவேண்டும் என்கிற சைக்கோத்தனமான ஆசை வருகிறது.//
- இப்படி ஒரு ஆள் உளறிக் கொட்ட அதற்கு ‘சூப்பர்’ போட்டு பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அடேய்களா... சம்பாதிக்கிற பணத்தை ஒழுங்கா வங்கிகள் வழியா பரிமாற்றம் செஞ்சு, வரி கட்டி வாழ்க்கை நடத்தினீன்னா எந்த வங்கியிலே உனக்கு கடன் தர மாட்டேன்னு சொல்லுறான்?
பண்ணுறது ஃப்ராடுத்தனம்.. பிக்காளித்தனம்.. கோடி கோடியா சம்பாதிச்சாலும் அரசாங்கத்து கண்ணிலே காட்ட மாட்டேன்.. ஆனா வங்கிகள்கிட்ட கடன் கேப்பேன். கொடுக்கணுமுன்னா நீ பதுக்கி வெச்சு தொழில் நடத்துறது அவனுக்கு எப்படிய்யா தெரியும்?
நீ முதல்லே சம்பாதிக்கிற பிசாத்து காசுக்கு வரியைக்கட்டுடா.. அப்புறம் ஆயிரம் கோடி, பத்தாயிரம் கோடி தள்ளுபடியைப் பத்தியெல்லாம் பேசலாம்.
ஸேஃப் ஸோனில் ஒருத்தன் உட்கார்ந்திருக்கிறான் என்றால் அவன் ஒழுங்காக வரி கட்டிக் கொண்டு நீதியாக, நேர்மையாக நடக்கிறான் என்று அர்த்தம். அவன் எந்தக் காலத்திலேயும் எதற்கும் கவலைப்படத்தேவை இல்லை.
இன்னொன்னு தெரியுமா.. இப்போ ஆப்பு விழுந்திருக்கிறதே உனக்கு தான்... முதல்லே அதிலேருந்து எப்படி ஒழுங்கா வரியைக் கட்டி தப்பிக்கலாமுன்னு பாரு. நல்லவனா திருந்தி வாழு. அதை விட்டுட்டு ஒழுங்கா இருக்கிறவன் நாசமாப் போனுமுன்னு சைக்கோத்தனமா ஆசைப்பட்டா இன்னும் நீ நாசமாத்தான் போவே! #கடவுளிருக்காண்டாகொமாரு............

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...