'தேசியகீதம்', 'மாயக்கண்ணாடி' என இரண்டு படங்களில் இளையராஜா சாரோடு இணைந்து பணியாற்றி ருக்கிறேன். இந்த இரண்டு படங்களுமே அவருக்கான ஸ்கோப் உள்ள படங்கள்னு சொல்ல முடியாது. ஆனாலும், அவர் அதில் பண்ணிய பிஜிஎம், எனக்கு பேக்ரவுண்ட் ஸ்டோரி கத்துக்க ரொம்ப உதவியா இருந்துச்சு. அதுதான் இளையராஜா!
இளையராஜா சாரின் இசை நம்ம படத்துக்குக் கிடைக்கிறது கடவுள் கிருபைதான். சில சமயங்களில் உடனே கிடைச்சுடும்; சில சமயங்களில், நாம தேடிக்கிட்டே இருக்கணும். அவர்கிட்ட நாமா போறது, சாமிகிட்ட போறமாதிரிதான். சாமி நமக்கு நன்மையைத் தருவார்னு நம்பிப் போறோம்ல, அதுமாதிரி அவர்கிட்டயும் நாம நம்பிப் போகலாம்; நல்ல பாடல்கள் நிச்சயம் கிடைக்கும்.
இப்ப எடுக்கிற படங்கள்ல எல்லாம், ‘கம்போஸிங்குக்கு ஒரு வாரம் ஆச்சு, ஒரு மாசம் ஆச்சு. பாடல் கம்போஸிங்குக்காக ஆஸ்திரேலியா போறோம், ஆப்பிரிக்கா போறோம்’னு சொல்றாங்க. எனக்கு அவ்வளவு நாள் எல்லாம் ஆகல, இரண்டு படத்துக்கும் அவரோட ஸ்டுடியோவிலேயே அதிகபட்சமா ரெண்டு நாட்கள்ல எல்லா பாடல்களுக்குமே மியூசிக் போட்டுக் கொடுத்துட்டார். இளையராஜா சார் கிட்ட டைரக்டரோட கற்பனைக்கேற்ற பாடல்கள் கிடைச்சிடும். நாம நம்பி உட்காரலாம். படத்துல ஒரு காட்சியை நாம எடுக்குறோம்னா, அதுக்கு உயிரு கொடுக்கிற விஷயம்தான் இசை. இளையராஜா சாரைப் பொறுத்தவரை, நமக்கு அது உடனே கிடைச்சுடும்.
இளையராஜா சாரோட பாடல்களை நாம எல்லோருமே இளம் வயதுல இருந்து கேட்டே வளர்ந்து வந்திருப்போம். அந்த ஆசையிலேயே இந்தத் துறையை தேர்ந்தெடுத்தவன் நான். எங்க ஊர்ல எந்த திருவிழா நடந்தாலும் இளையராஜாவோட பாடல்களைப் போட்டுக் கேட்டுக்கிட்டே இருப்போம். எம்.எஸ்.விக்கு அப்புறம் மக்களை கவர்ந்தவர். அவர்கூட உட்கார்ந்து கம்போஸ் பண்ணினேன் என்பதே, எனக்கு வாழ்க்கையில கிடைச்ச வரம். கையில ஒரு கீ போர்டை வச்சிருக்கிறவங்க எல்லோருமே இசையமைப்பாளரா உருவாகிட முடியாது. வரம் கிடைத்தவர்கள் மட்டுமே இசையமைப்பாளராக முடியும். இதுல ஞானம், வரம் என அனைத்தையும் முழுமையா பெற்றவர், இசைஞானி இளையராஜா. அவரோட உட்கார்ந்து ஒரு பாடல் கம்போஸ் பண்றோம் என்பதே எங்களுக்கெல்லாம் பெரிய பாக்கியம்’ என்று சிலிர்க்கிறார் சேரன்.
No comments:
Post a Comment