Sunday, November 27, 2016

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது ?



சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது;
வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது;
வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது;
அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது;
அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது;
வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது;
வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது;
உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது;
தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது;
அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது;
தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது;
சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது;
விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது;
அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது;
குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது;
கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது;
நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் எனஅளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது;
அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...