Wednesday, January 31, 2018

கடவுள் இருக்கிறாரா..???

"கடவுள் ஏன் அவர் இருப்பதை வெளிப்படுத்துவதில்லை?'' சீடன் கேட்டான்.
குரு ஒரு கதை சொன்னார்:
"கடவுள் இருக்கிறார்" என்று நம்பிய ஒரு மனிதன் மெல்ல சொன்னான்,
'கடவுளே...!!! என்னோடு பேசுங்களேன்....!!!'
அப்போது குயில் ஒன்று பாடியது.
அதைக் காதில் வாங்காத அவன், உரத்த குரலில் கத்தினான்:
'கடவுளே, என்னோடு பேசுங்களேன்..!?!'
உடனே உரத்த இடியோசை, எழுந்தது
அதையும் பொருட்படுத்தாத அவன்,
'பேசாவிட்டாலும், உன் தரிசனமாவது தரக்கூடாதா..???' என்று இறைவனிடம் கேட்டான்.
சுடர்விட்டுப் பிரகாசித்த படி,
வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது
அதைக் கவனிக்காமல் அவன் கேட்டான்:
'ஏதாவது ஓர் அற்புதம் நிகழ்த்த மாட்டாயா..???'
கடவுள் மெல்ல கீழே இறங்கி, பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார்
அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியைகைகளால் தட்டிவிட்டு,
நடந்தபடி சொன்னான்.
'கடவுள் இல்லை..!!!
இருந்திருந்தால்என்னோடு பேசி இருக்கலாம்
பார்க்க முடிந்திருக்கும்
அற்புதமாவது நிகழ்ந்திருக்கும் எதுவுமே நடக்க-வில்லையே..!!!''
கதையைக் கேட்ட சீடன் சொன்னான்
"புரிந்தது குருவே..!!!
கடவுள், தான் இருப்பதை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்
நாம் தான் புரிந்து கொள்வதில்லை..!!!''
என்றான்
உண்மை தானே.

காஷ்மீரில் கடும் உறைய வைக்கும் பனியில் நம் தேசத்தை பாதுகாக்கும் நம் தமிழக ராணுவ வீரர்கள்...

சீனாவில் ஒரு கடையில் அந்தந்த நாட்டு தேசிய கொடியுடன் அந்த நாட்டு தேசிய மொழியில் வரவேற்பு (welcome) என்று எழுதப்பட்டிதருந்தது அதில் இந்திய நாட்டு கொடியும் இருந்தது இந்தியாவின் மொழியாக எழுதப்பட்டது என்ன மொழி என பாருங்கள்.
No automatic alt text available.

மனிதன் விட வேண்டிய 21 தீய குணங்கள்!

மனிதன் அன்றாட வாழ்வில் 21 தீய குணங்களை கண்டிப்பாக விட்டு விட வேண்டும் என்று கூறுகின்றனர்.
அவை…
1.தற்பெருமை கொள்ளுதல்
2.பிறரைக் கொடுமை செய்தல்
3.கோபப்படுதல்
4.பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு, அதற்கேற்ற பாவனை செய்தல்.
5.பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்
6.பொய் பேசுதல்
7.கெட்ட சொற்களைப் பேசுதல்
8.நல்லவர் போல் நடிக்கும் இரட்டை வேட மனப்பான்மை
9.புறம்பேசுதல்
10.தகாதவர்களுடன் சேருதலும், ஆதரவு கொடுத்தலும்
11.பாரபட்சமாக நடத்தல்
12.பொருத்தமற்றவர்களைப் புகழ்ந்து பேசுதல்
13.பொய்சாட்சி கூறுதல்
14.எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்
15.வாக்குறுதியை மீறுதல்
16.சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்
17.குறை கூறுதல்
18.வதந்தி பரப்புதல்
19.கோள் சொல்லுதல்
20.பொறாமைப்படுதல்
21.பெண்களை தீய நோக்குடன் பார்த்தல்.

கோவிலில் #கொடிமரம் இருப்பதன் #தத்துவம் என்ன ?


ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.
ஆலயம் புருஷாகாரம் என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. மனித உடலைப் போன்றது கோயில் என்பது இதன் பொருள்.
கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம்.
ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்.
#ஸ்ரீராமஜயம்
Image may contain: sky and outdoor

"எந்த இடத்தில் எந்த முயற்சி"

நடுக்கடலில் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய கப்பலின் என்ஜின் செயலிழந்ததால் அந்த கப்பல் அங்கிருந்து நகர முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் தகவலை அறிந்த கப்பலின் உரிமையாளர்கள் ஒரு சிறு படகில் ஏறி, பழுதாகி நிற்கும் கப்பலை வந்தடைந்தனர்.
கப்பல் இயந்திரங்களை பழுதுப் பார்ப்பதில் பிரசித்தி பெற்ற பல பிரபல பொறியாளர்களும், மெக்கானிக்குகளும் அங்கு வந்து சேர்ந்தனர். ஒருவர் மாற்றி, இருவர் அந்த என்ஜினை சீரமைக்க பல்வேறு கட்ட முயற்சிகளை செய்துப் பார்த்தனர். ‘ஊஹூம்’ அந்த என்ஜின் மூச்சு விடுவதாக இல்லை.

அவர்களின் முயற்சிகள் அத்தனையும் விழலுக்கு இறைத்த கானல் நீராகிப் போனது. இறுதியாக இதுபோல் ‘முரண்டுப் பிடிக்கும்’ என்ஜின்களை வழிக்கு கொண்டு வருவதில் வல்லவரான ஒரு வயதான அனுபவசாலி மெக்கானிக்கை தேடி கண்டுபிடித்து நடுக்கடலுக்கு அழைத்து வந்தனர்.
கப்பலுக்குள் சென்ற அவர், என்ஜினை ஒருமுறை முழுமையாக தனது எக்ஸ்ரே கண்களால் அலசினார். தன்னுடன் கொண்டு வந்திருந்த பெரிய கைப்பையை திறந்து அதில் கிடந்த கருவிகளில் ஏதோ ஒன்றை வெகு நேரமாக தேடினார்.
கப்பலின் உரிமையாளர்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாக நின்றவாறு, ‘இந்த வயதான முதியவர் என்ன செய்து கப்பலை இங்கிருந்து நகர்த்தப் போகிறார்?’ என்பதை ஆவலுடனும் ஆச்சரியத்துடனும் கண்காணித்து கொண்டிருந்தனர்.
தனது பையில் இருந்து ஒரு சிறிய சுத்தியலை எடுத்து, என்ஜினின் ஒரு பகுதியில் செல்லமாக ஒரேயொரு முறை லேசாக தட்டினார். இப்போது என்ஜினை கிளப்பிப் பாருங்கள் என்று கூறியவாறு தனது கருவிகளை எல்லாம் எடுத்து கைப்பையில் போட்டுக் கொண்டிருந்தபோதே, உயிர் பெற்ற அந்த கப்பலின் என்ஜின் ஆக்ரோஷமாக உறுமத் தொடங்கியது..
அவரது அபார திறமையைக் கண்டு வியந்துப்போன கப்பல் உரிமையாளர்கள் அவரது கையை பிடித்து குலுக்கியும், கட்டிப்பிடித்து பாராட்டியும் வழியனுப்பி வைத்தனர். சில நாட்கள் கழித்து அந்த முதியவரிடம் இருந்து கப்பல் உரிமையாளர்களுக்கு ஒரு கடிதம் வந்தது. கடிதத்துடன் கப்பலின் என்ஜினில் இருந்த பழுதை நீக்கியதற்கான பில்லும் இணைக்கப்பட்டிருந்தது.
பில்லில் குறிப்பிடப்பட்டிருந்த தொகையை கண்ட கப்பல் உரிமையாளர்கள் கதிகலங்கிப் போய் அதிர்ச்சியில் வாய் பிளந்தனர். தனது வேலைக்கு பத்தாயிரம் அமெரிக்க டாலர்களை (இன்றைய இந்திய மதிப்புக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய்) உடனடியாக அளிக்க வேண்டும் என்று தனது கடிதத்தில் அந்த மெக்கானிக் குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்டு கடுப்பாகிப்போன கப்பல் உரிமையாளர்கள், எங்கள் கப்பலை ஓட வைக்க நீங்கள் என்னென்ன ‘ஆணியைப் பிடுங்கினீர்கள்’? என்று தெளிவாக விபரமாக பட்டியலிட்டு தனியாக ஒரு பில்லை அனுப்பி வையுங்கள் என்று அவருக்கு பதில் கடிதம் அனுப்பினர்.
அடுத்த சில நாட்களில் அந்த மெக்கானிக்கிடம் இருந்து வந்த இரண்டாவது கடிதத்தில் அவர்கள் கேட்டிருந்த விபரம் முழுமையாக குறிப்பிடப்பட்டிருந்தது.
"சுத்தியலால் தட்டியதற்கு = 2 டாலர். எந்த இடத்தில் தட்ட வேண்டும் என்று தெரிந்து தட்டியதற்கு = 9,998 டாலர்கள்" என மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.
முதல் கடிதத்தால் வாய் பிளந்த கப்பல் உரிமையாளர்கள், இப்போது இந்த பதிலை கண்டதும் மூச்சுப் பேச்சில்லாமல் வாயடைத்துப் போய் பத்தாயிரம் டாலர்களை அந்த முதியவருக்கு அனுப்பி வைத்தனர்.
கருத்து :
விடாமுயற்சிகளும், பெருமுயற்சிகளும் சாதனைகளுக்கு முக்கியமானவைதான், ஆனால், "எந்த இடத்தில் எந்த முயற்சி" பலனளிக்கும் என்பதை அறிந்தும், உணர்ந்தும் செய்யப்படும் முயற்சிகள்தான் பெரும் வெற்றியையும் பலனையும் அளித்துள்ளன.

அசத்தலான வீட்டுக் குறிப்புகள் !!!

1. வாழைக்காயை ப்ரிஜ்ஜில் வைக்கும் போது, அப்படியே வைக்காமல், இரண்டாக கட் பண்ணி வைத்தால் வாழைக்காய் கருப்பாகாமல் அப்படியே புதியது போல் இருக்கும்.
2. சப்பாத்திக்கு மாவு பிசையும் போது இரண்டு ஸ்பூன் நல்லெண்ணய்யை சூடு பண்ணி, மாவு பிசைந்தால் மிருதுவாக வரும்.
3. டீ தயாரிக்கும் பொழுது, அதனுடன் தேவையான சக்கரையைச் சேர்த்தால் டீ நல்ல நிறமுடன் இருக்கும்.
4. முருங்கைக்காய் குழம்பிற்கு துண்டு துண்டாய் நறுக்கும் போது ஒவ்வொரு துண்டிலும் கத்தியால் ஒரு கீறு கீறினால் அதன் உள்ளே குழம்பின் உப்பு காரம் இறங்கும்.
5. பிஞ்சுக் கத்தரிக்காய் ஸ்டப்புடு பொரியல் செய்யும் போது காம்பை வெட்டாமல் அதன் எதிர்பாகத்தில் நான்கு துண்டுகளாக வெட்டி உள்ளே பொடியை வைத்தால் நல்ல ருசியாக இருக்கும்.
6. தயிர்ச்சாதம் செய்வதற்கு குக்கரில் அரிசியுடன் தண்ணீர் சேர்க்கும் போது, அதனுடன் ஒரு டம்ளர் பால் சேர்த்து வைக்கும் போது நன்றாகக் குழைந்து வரும்.
7. துவரம் பருப்பு குக்கரில் வேக வைக்கும் போது, அதனுடன் இரண்டு சில்லு தேங்காய்ப் பத்தையை சேர்த்தால் நன்றாக பருப்பு வெந்து விடும்.
8. பாகற்காய் வறுவல் செய்யும் போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து பின்னர் உப்பு, காரம் போட்டால், கெடாமல் நாளைக்கு மொறுமொறுப்பாக இருக்கும்.
9. உள்ளிப் பூண்டை சீக்கிரம் உரிக்க, ஒரு வாணலியை நன்றாக காய்ந்ததும் உரிக்க வேண்டிய பூண்டை போட்டால் படபடவென தோல் எல்லம் வந்து விடும்.
10. வாழைக்காய் வறுவல் செய்யும்போது, ஒரு சிறிய ஸ்பூனில், நீர்மோரை எண்ணெய்யில் விட்டால் வாழைக்காய் கருக்காமல் வறுபடும்.
*********************×***************************
பயனுள்ள யோசனைகள் !!!
1. கம்பளி உடைகளின் மேல் பொடி செய்த படிகாரத்தை தூவி வைத்தால் பூச்சி அரிக்காமல் இருக்கும்.
2. கறுத்து மங்கலாகிப் போன அலுமினியப் பாத்திரங்களை எலுமிச்சை சாற்றினால் துடைத்தால், பளீர் என்று ஆகும்.
3. மாதவிலக்கு நேரங்களில் பெண்கள் கோதுமைக் கஞ்சி குடித்து வந்தால்,வயிற்று வலி வராது.
4. ஓமத்தை அரைத்து தலையில் தேய்த்து வெந்நீரில் குளித்தால் கடுமையான தலைவலி நீங்கும்.
5. வெந்தயக் கீரையை சாம்பார்,கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு குறையும்.
6. காலையில் வெறும் வயிற்றில் சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று,தண்ணீர் குடித்தால் உடல் சூடு தணியும்.
7. வாரம் ஒரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் மடிந்து விடும்.
8. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ,அடிக்கடி இளம் முருங்கக் கீரையை உண்டு வந்தால்,பால் அதிகம் சுரக்கும்.
9. சலித்த சப்பாத்தி மாவுக் கப்பியை,வீணாக்காமல் அடை மாவில் கலந்து அடை தயாரிக்கலாம்.
10. ஆம்லேட் மேல் உப்பு,மிளகுத் தூளுடன் சீரகப் பொடியையும் தூவினால்,சுவையாக இருக்கும்.
11. பாயசம் நீர்த்துப் போனால்,அதில் வாழைப் பழத்தை பிசைந்து போட்டு,சிறிது தேனும் கலந்து விட்டால் சுவையான பாயசம் தயார்.
12. நெல்லிக்காயை தேனில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால்,இளமையாக இருக்கலாம்.
13. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை, அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
14. வாழைப் பூவை நறுக்கிய பின் வினிகர் கரைத்த நீரில் கை கழுவினால்,கறை நீங்கி விடும்.
15. அசைவ உணவு சாப்பிட்ட பின் சிறு துண்டு வெல்லம் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்....

கார்ப்பொரேட்டுக்கு விலைபோன இன்றைய அரசுகளும்,அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் செவ்வனே செய்கின்றன.

ஏ.சி. ரூமில் உட்கார்ந்து கொண்டு (தொலைக்காட்சிகளில்) விவசாயம் செய்யும் மகா மேதாவிகளே:-
உண்மையிலயே #விவசாயிகள்_மீது அக்கரை இருக்குமானால்..?
இன்றைய பட்ஜெட்டிலாவது தானியங்களை விவசாயிகளிடமிருந்து செலவு கணக்கை கணக்கிட்டு #ஆதார_விலை_கொடுத்து வாங்கச் சொல்லி பேசுங்கள் பார்ப்போம்.(10 வருடத்திற்கு முன்பு கிடைத்த விலை கூட இப்பொழுது கிடைக்கவில்லை..என்று பேசுங்கள் பார்ப்போம்,10 வருடத்திற்கு முன்பு அரசு ஊழியர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இப்பொழுது அவர்களின் சம்பளம் எவ்வளவு? பேசுங்கள் பார்ப்போம்)
பேசமாட்டீர்கள். அப்படி பேசினால் உங்களை பேச அந்நிய பணத்தால் இயங்கும் தொலைக்காட்சிகள் பேசக் கூப்பிடாது.
ஆக, இந்தியாவில் #விவசாயிகளும்_விவசாய_நிலங்களும்இல்லாத நிலையை உருவாக்கத்தான்
கார்ப்பொரேட்டுக்கு விலைபோன இன்றைய அரசுகளும்,அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் செவ்வனே செய்கின்றன.
நீங்களும்அவங்க கொடுக்கிற ஓசி டீ பிஸ்கெட்டுக்காக நாடகமாடுகிறீர்கள் என்று தான் என்னத்தோணும்...உண்மை விவசாயிகளால்..

இந்தப் பதிவு யாரைப் பற்றியும் அல்ல. யாராவது உங்கள் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

எனக்கு தெரிந்த ஒருவர் சிறந்த ஆன்மீகவாதி. நித்திய பூஜையும், தினசரி கர்ம அனுஷ்டானங்களையும் முறையாக கடைபிடித்தவர். அவருக்கு 8 குழந்தைகள். தன்னுடைய எல்லா குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். நிறைய தான தர்மங்கள், அந்தணர்களுக்கு நிலம், (பூதானம்), கோதானம், இப்படி பல தானங்களை மனமுவந்து செய்து வந்தார். இறைவனும் அவருக்கு எந்த குறையும் வைக்காமல் நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் யோகா, காயத்ரி ஜெபம் செய்யத் தவறியதில்லை. தன்னுடைய வயதான காலத்தில் தன் பொறுப்புகளை தன் பிள்ளைகளிடம் ஒப்படைத்து ஆயாசமாக தன் பேரக்குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடி, நல்ல கதைகள், இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணங்கள், ஸ்லோகங்கள், நல்ல மந்திரங்கள் சொல்லிக் கொடுத்து அமைதியாக வாழ்ந்து வந்தார். முதுமையிலும் இளமை ததும்ப அவர் இருக்கக் காரணம் அவரது ஒழுக்கமான வாழ்க்கை, அவர் பூஜித்த தெய்வானுக்ரஹம் , காயத்ரி மந்திரம் என்று அனைவரும் செல்வார்கள்.
திடீரென்று ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, தனக்கு இறுதி காலம் வந்து விட்டதாகவும், இனிமேலும் இந்தப் பூமிக்கு பாரமாக நான் இருக்கக் கூடாது, எனவே எனது இறுதி காரியத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள் என்று சொன்னார். அனைவரும் அப்படி பேசாதீர்கள் என்று கண் கலங்கினர். அடுத்த 2 நாட்களுக்குள், மதியம் உணவருந்தி சாய்வு நாற்காலியில் சாய்ந்தார், கண்மூடி தூங்கினார், மீளாத்துயில் கொண்டார்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள், ஒவ்வொருவரும் அவரது குணத்தை, பக்தி சிரத்தையை . தயாள குணத்தை, அடுத்தவரிடம் அவர் பழகும் மாண்பை சிலாகித்ததோடு, சே... என்ன அருமையான சாவு? சாப்பிட்டு கண்மூடியவர், படுக்கையில் விழவில்லை, நோய் நொடின்னு ஒரு நாள் படுத்ததில்லை, பழுத்த இலை தானாக உதிர்வது போல் இயற்கை மரணம் வாய்ப்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தோடு, இந்த ஜென்மத்திலும் நிறைய பண்ணியிருக்கார். அதனால் தான் அவருக்கு இப்படி ஒரு நல்ல சாவு கிடைத்தது, கொடுத்து வைத்த புண்ணிய ஆத்மா என வாயார சொன்னது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மாறாக, இன்று சிலருக்கு நோய்வாய்ப்பட்டு, கேன்சர் கட்டி வந்து, தொண்டையில் ஓட்டை போட்டு, சிறுநீர் பையை கையில் தூக்கிக் கொண்டு அலைவது, பேச முடியாமல் போவது, பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்திருந்தாலும், அந்தப் பணத்தால் போன வாலிபம் திரும்ப வரல, போன பேச்சு திரும்ப வரல, போன எகத்தாளம் திரும்ப வரல, போன நடை திரும்ப வரல, போன பதவி திரும்ப வரல, எல்லாம் இருந்தும் எதுவுமே இல்ல. தான் விரும்பும் எமனும் கிட்ட வரல.
நரக வாழ்க்கை கிடையாது என்பவனுக்கு நரகம் என்றால் என்ன இங்கேயே அனுபவித்துப் பார் என்று சொல்லாமல் சொல்லி நடக்கிறது -
இதெல்லாம் பார்க்கும் போது,
தோன்றுகிறது
"கடவுள் இருக்கான்  "

ஒரு ஓட்டல் முதலாளியின் கதை :

தன்னுடைய கடையில் சேரும் முருகனான என்னை அவர் ஒரு நிபந்தனையுடன் சேர்த்து கொள்கிறார் .
அத்தியாவசியம் தவிர வேறு எந்த செலவுக்கும் நீ காசு கேட்க கூடாது என கண்டித்து சொன்னார்.
உனக்கு தேவையான நேரத்தில் நானே மொத்தமாக கொடுப்பேன் என்றும் சொன்னார்.
பசியால் வாடி வதங்கியிருந்த அவனுக்கு அப்பொழுது உணவு மட்டுமே தேவையாயிருந்தது .
அவனும் சரியன்று ஒத்துக்கொண்டான்.
அதற்கு பிறகு அவன் தன்னை முழுமையாக வேலையில் ஈடுபடுத்திக் கொண்டான் .
அந்த முருக பவனை தனது பவனாக நினைத்து முழுமையாக உழைத்தான்.
இடையில் ஊருக்கு போகவேண்டும் என்று அவன் எவ்வளவு பணம் கேட்டும் அவர் தரவில்லை .
ஒருவேளை சோறு போடக் கூட வழியின்றி உன்னை விரட்டியடித்த ஊருக்கு நீ ஏன் செல்கிறாய் என்று அவனை அடக்கி அமைதியாக இருக்க வைத்தார்.
சில வருடங்கள் ஓடியது .
அவனுக்கும் அவரின் அன்பும் கண்டிப்பும் பிடித்துப் போனது .
எதைப்பற்றியும் கேட்பதில்லை.
கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் அவனை பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள் ,சில விடுமுறை தினங்களில் ....முதலாளிக்கு தெரியாமல்....
ஓட்டல் கடையில் வேலை செய்பவருக்கு பெண்ணை தர முடியாது என்று பல இடங்களில் மறுத்துவிட்டனர் .
அதை எல்லாம் முதலாளி கண்டும் காணாமலும் இருந்தார் .
அவனை ஏதும் கேட்கவும் இல்லை. அவன் மேல் பரிதாபப்படவும் இல்லை.
இன்றோடு வேலைக்கு சேர்ந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது .
ஒரு நாள் முதலாளி அவனை அழைத்தார்.
அதிக ஓட்டல் இல்லாத ,ஆனால் பரபரப்பு நிறைந்த ஒரு இடத்திற்குக் கூட்டிச் சென்று புதிய கடையை பார்த்தார் .
முருகா இந்த இடத்தில் கடையை வைத்தால் ஓடுமா என்று என்னிடம் கேட்டார் ..
நானும் ஆமாங்க முதலாளி இந்த இடம் நல்ல இடம் நல்ல வியாபாரம் ஆகும் என்றேன் .
கடைக்கு முன் பணம் கொடுத்தார் .
அந்த கடைக்கு தேவையான எல்லாத் தட்டு முட்டு சாமான்களையும் வாங்குதற்கு என்னையே அனுப்பி வைத்தார் .
என்னோடு இணக்கமாக இருந்த சக தோழர்களையும் என்னோடு பணிக்கு ஒத்தாசை செய்யச் சொன்னார்.
கடை ஆரம்பமாக நாள் குறிக்கப்பட்டது. ஐந்து நாள் முன் அவர் என்னை அழைத்தார் .
கடை வேலை எல்லாம் சரியாக செல்கிறதா முருகா என கேட்டார்.
பின்னர் கடை சாவியை என்னிடம் கொடுத்து ,
நீதான் முருகா கடைக்கு சொந்தக்காரன் என்றார் .
முதலாளி என்ன இது திடீரென்று இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டேன்.
உன்னுடைய பணம்தான் முருகா ...
அதில் எனது பங்கும் கொஞ்சம் இருக்கிறது. அது உன் மேல் நான் வைத்திருக்கும் அன்பின் சிறிது சன்மானம் அவ்வளவே...
நீ உன்னுடைய உறவுக்காரர்களை கடை திறப்பு விழாவிற்கு தற்பொழுது அழைத்து உபசரி....
பிறகு தானாக எல்லாம் நடக்கும் என்றார்.
அப்படியே கடை திறப்பு விழாவும் தடபுடலாக இருந்தது .
சாப்பாடு போடாமல் விரட்டியடித்த உறவினர்கள் கடை அருமை, சாப்பாடும் அருமை என சொன்னார்கள் .
பிறகு எனது தூரத்து மாமா ,வசதியான மாமா அவர்களே தனது பெண்ணை அளிக்க முன்வந்தார் .
பிறகு எனது முதலாளியின் தலைமையில் மாமா பெண்ணை திருமணம் செய்து மிகவும் வசதியாக வாழ்ந்து வருகிறேன் .
Image may contain: one or more people, food and indoor
ஆனால் அவர் சொன்ன ஒரு தாரக மந்திரம் அது இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது .
அதை நான் இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன்
உனக்காக மட்டும் வாழாதே....
உன்னை நம்பி இருக்கும் அனைவரையும் வாழ வை ....
என்றதை இன்றுவரை நான் கடைபிடித்து வருகிறேன் .
அவரின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட உறவினர்களை காட்டிலும் ,
அவரால் வளர்த்துக் உருவாக்கப்பட்ட மனிதர்களின் அழுகையே அதிகமாக இருந்தது என்னையும் சேர்த்து ....
சில மனிதர்களின் சாதனைகள் வெளியில் தெரிவதில்லை ஆனால் அவர்களது இறுதி ஊர்வலத்தில் தெரியும் என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன் எனது முதலாளி இறுதி ஊர்வலத்தில்.....

இதையும்￰ கொஞ்சம் படிங்க தெரிந்து_கொள்ளுங்கள்.

1. உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"
2. உடலின் மிக வலிமையான சதைப்பகுதி "நாக்கு"
3. ஆங்கில கீபோர்டில் ஒரேவரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படும் ஒரு சொல் "TYPEWRITER"
4. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"
5. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் ஜீவராசி - ”கொசு”
6. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"
7. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல்
(111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.
8. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"
9. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற்கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்பட்டது.
10. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி".

மனைவியை மடக்க சில யோசனைகள்....

1. மாமியார் விரதம் இருக்கும் போது ”உங்க அம்மா ஏன் அடிக்கடி விரதம் இருந்து உடம்ப வருத்திக்கிறாங்க?”னு அக்கரையா கோவப்படணும் (கொஞ்சம் நடிங்க பாஸ்..)
2. டீவியில நகைகடை விளம்பரம் போகும் போது அந்த டிசைன்ல ஒரு செயின் உனக்கு ஒன்னு வாங்கணும்னு அவுத்து விடணும்
3. நண்பர்கள் போன் பண்ணி டீரிட்க்கு கூப்டாங்கன்னா ”இல்லடா ஈவ்னிங் என் வெய்ஃப் கூட கோவிலுக்கு போறேன் என்னால வர முடியாது” ன்னு அவங்க காதுல கேக்கர மாதிரி சத்தமா சொல்லணும்...
4. உங்க வீட்டுக்கு போயிட்டு வரணும்.. மாமா அத்தைய பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அப்படினு குழந்தை மாதிரி சோகமா பேசணும்.
5. அடிக்கடி எப்படி நீ இவ்வளவு அழகா பொறந்தன்னு சொல்லனும்.
6. மனைவி முன்னாடி மச்சினி கிட்ட அவங்க படிப்பு கேரியர் பத்தி பேசனும்.(படிப்ப பத்தி மட்டும் தான் )
7. செல்போன்ல வால்பேப்பரா மனைவி போட்டோ வச்சிகணும் ... (வேற வழி இல்ல)
8 . அதிகாலைல எந்திரிச்சு அவங்க முகத்த பார்க்கும் போது மனசா திடமா வச்சிகணும், பயத்துல ”அய்யோ அம்மா" ன்னு பதறினீங்கனா போச்சு. மொத்தமா போச்சு.
9. அவங்க சமைத்த சாப்பாடு சாப்பிடும் போது முகம் மலர்ந்து சாப்பிடணும்.. மறந்து கூட முகத்த சுளிக்க கூடாது.
10 . கோவமா பூரி கட்டையால அடிச்சாங்கனா முதல் அடியிலே சுருண்டு விழுந்து துடிக்கனும், மீறி ஸ்பர்டன் வீரன் மாதிரி வீரமா நின்னா பேஸ் ப்ரஷ்ஷா ஆயிடும்..!
ஆண்களின் நலன் கருதி வெளியிடுப்படுகிறது. தனியாக ஆலோசனை கேட்பவர்கள் ரூ 1000/ செலுத்தி முன்பதிவு செய்யலாம்....

Tuesday, January 30, 2018

வாழுகின்ற வார்த்தைகள். . *vs* வீழுகின்ற வார்த்தைகள்.

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
மருத்துவர் ஒரு பெண்மணிக்கு சில மருந்துகளை பரிந்துரைத்து விட்டு,
"நீங்கள் இதை விடாமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும் " என்கிறார்..
"எவ்வளவு காலம் டாக்டர், நான் சாகும் வரை இதெல்லாம் சாப்பிடணுமா?" என்று கேட்கிறார் அந்த பெண்மணி
டாக்டர் கூறுகிறார், "நீங்கள் வாழும் வரை" என்று..
*சாகும் வரை, வாழும் வரை* என்ற இருவாக்கியங்களும் ஒரு பொருளைத்தான் குறிக்கின்றன. ஆனால் *சாகும் வரை* என்பதில் அதிருப்தி, அச்சம் தரும் ஓர் *எதிர்மறை எண்ணம்* எழுகிறது. ஆனால் *வாழும் வரை* என்ற சொற்களில் ஆறுதல் தரும் *நேர்மறை எண்ணம்* ஏற்படுகிறது.
சொற்களில் என்ன இருக்கிறது, அது புரிந்து கொள்வதில் தானே இருக்கிறது, என்றுU வாதாடலாம். ஆனால்....
சில வார்த்தைகள் ரணப்படுத்தும்...
சில வார்த்தைகள் குணப்படுத்தும்...
அடுத்தவரை "ஊக்குவிக்கும்" வார்த்தைகளாக பேசலாம்.
அடுத்தவரை "சோர்ந்துபோகச் செய்யும்" வார்த்தைகளை தவிர்க்கலாம்.
*Every word has its power choose them carefully.*
உடலுக்கு *#Insulin* எவ்வளவு முக்கியமோ,
மனதுக்கு *#இன்சொலும்* அவ்வளவு முக்கியம்.

இந்துக்களும் தமிழர்களும் வேறு வேறு .! எங்க.? இப்ப சொல்லு....

1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.*
2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்கள்* இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த *63 நாயன்மாரும் இருந்தது தமிழ்நாட்டில்.*
4. வைணவம் வளர்த்த *12 ஆழ்வார்களும்* இருந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் *சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.*
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான *திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.*
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. *பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10.அது மட்டுமா *பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,*
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.
*குறிஞ்சிமுருகன்*
முல்லை👉🏻 திருமால்
*மருதம்  இந்திரன்*
நெய்தல் 👉🏻வருண்ன்
*பாலைகொற்றவை*
*தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி*
தமிழர்களின் பூமி
MEMORY SKILLS FOR STUDENTS.
Now it's time for Board exams. Many children struggle with recall from memory. Few techniques even in the last month if practiced it will fetch them high marks more than their expectations. I thought I will write a few articles which will help students.
Learning thinking remembering all have to done with periodic reviews. MEMORY enhances by connections and associations. So if review or revision is not done he will be at disadvantage. Each time he approaches new subject his recall of previous knowledge will be at a very low ebb, connections should be made. The past knowledge has to be green and live then it will digest more knowledge easily and recall store will be very active. The process is much like snowball rolling, where the snowball gets rapidly bigger the more it rolls and eventually continues rolling under its own momentum.

விழப்போகிறோம் என்று தெரிந்ததும்...

ஒரு ராஜாவுக்கு இரண்டு பஞ்சவர்ண கிளிக் குஞ்சுகள் வெகுமதியாக வந்தன.
ராஜா அந்த ரெண்டையும் பறக்க வைத்து பேசப் பயிற்சி கொடுக்கச் சொன்னாரு.
அதுல ஒரு கிளி நல்லா பறந்து வார்த்தைகளும் கத்துக்க ஆரம்பிச்சது.
ஆனா இன்னொரு கிளி பறக்க கூடத் தெரியாம ஒரு கிளையில உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருந்தது.
ராஜா பெரிய அமைச்சர்கள், ஆலோசகர்கள் எல்லோரையும் விட்டு பயிற்சி கொடுக்க வச்சும் கிளி பறக்கல.
இதைக் கேள்விப்பட்டு ஒரு வயசான விவசாயக் குடிமகன் வந்து "நான் பறக்க வைக்கிறேன்"னு சொன்னார் .
அடுத்த நாள் காலை ராஜா கண் விழிக்கும்போது, பறக்காத அந்த பஞ்சவர்ணக்கிளி மரத்தைச் சுற்றி அங்கும் இங்கும் பறந்து சுத்திகிட்டிருப்பதைப் பார்த்தார்.
அவருக்கு ஒரே சந்தோஷம். "இந்த அற்புதத்தை எப்படி செய்தீங்க?"ன்னு கேட்க,
அதுக்கு அந்த விவசாயி பணிவோட, "அது ரொம்ப சுலபமான காரியம் அரசே!
மரத்தில் ஏறி அந்த பறவை உட்கார்ந்திருந்த கிளையை நான் வெட்டி விட்டேன்.கீழே விழப்போகிறோம் என்று தெரிந்ததும்
கிளி தட்டுத்தடுமாறி பறக்க பழகிவிட்டது,என்றார்.....
இப்படித்தான் நாமும் பல சமயங்கள்ல நமது சக்தியை உணராம ஒரே இடத்தில் அமர்ந்துட்டு பழக்கப்பட்ட வேலைகளை மட்டுமே, அதுதான் நம்மால் முடியும்னு கருதி செய்யறோம். ஆனால் நாம சாதிக்க கூடியவை எண்ணற்றவை
சாதிக்க முடிந்தவை முடிவற்றவை.
வாழ்க்கைப்பாதையில் நடந்துபாருங்கள்
எட்டிவிடும் தூரத்தில் தான் வெற்றி என்ற ஊருக்கு செல்லும் வழி இருக்கிறது..

*"உரை மருந்து" மறந்துட்டோமே*

*குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் அருமையான பல பாரம்பர்ய முறைகள்* நம்மிடம் இருந்தன. இவை, தற்போது `வேக்ஸின்’களின் வருகையால் ஒட்டுமொத்தமாக மலையேறிவிட்டன. குழந்தைகள் நல மருத்துவர்கள் இந்தப் பாரம்பர்யப் புரிதலை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் இந்த முறைகள் தொலைந்துபோவதற்கு முக்கியமான காரணமாகிவிட்டது.
கிட்டத்தட்ட *16 வகையான வேக்ஸின்களை* வலியுறுத்தும் மருத்துவச் சமூகம், நம்மிடையே இருந்த *23 நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளை* அதன் ஆழத்தையும், மருத்துவக் குணத்தையும் புரிந்துகொள்ளாமல், மறக்கச் செய்துவிட்டது.
*மறந்துட்டோமே "உரை மருந்து"*
இந்தக்கால தாய்மார்கள் பலருக்கு இந்த வார்த்தை புதிதாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உங்கள் அம்மாவிடமோ அல்லது பாட்டியிடமோ இதை பற்றி கேட்டால், அவர்கள் சொல்வது இதுவாக தான் இருக்கும்," ஆம் அந்தக்காலத்தில் நாங்கள் உரை மருந்து கொடுக்காமல் குழந்தைகளை வளர்த்ததில்லை". இந்த அறிய பொக்கிஷத்தை மூடநம்பிக்கை, நேரமின்மை, சரியான புரிதல் இன்மை மற்றும் நம் முன்னோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள் என்று நினைப்பது இப்படி பல காரணங்களால் மறந்துவிட்டோம். நாங்கள் நீங்கள் இதை செய்தே ஆகவேண்டும் என்று உங்களை வற்புறுத்தவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் குழந்தையின் நன்மைக்காக இந்த மருத்துவ முறை பற்றி சிறிது ஆராய்ந்து பின்னர் முடிவு எடுங்கள்.
*அந்தக்காலத்தில் மருத்துமனைக்கு குழந்தைகளை தூக்கி சென்றதே இல்லை என்ற நிலை தற்போது மாறி இருப்பதை பற்றி சிந்தித்து பாருங்கள்.*
*உரை மருந்து என்றால் என்ன?*
இயற்கை மருந்துகள் சிலவற்றை உரைகல்லில் உரைத்து குழந்தைகளுக்கு புகட்டுவது.
*எவை எவை உரை மருந்தாகிறது?*
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4.சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
*மஞ்சள்(தேவை என்றால்)
*எப்படி உபயோகப்படுத்துவது?*
முதலில் மேற்கூறப்பட்டுள்ள மருத்துகளை ஒரு கப் தண்ணீர் அல்லது தாய்பால் விட்டு கொதிக்க விடவும். பிறகு ஒரு கப் தண்ணீர் அரை கப் அளவான உடன், தண்ணீரை வடிகட்டி விட்டு மருந்துகளை நிழலில் உலர்த்தி காற்று புகாத மூடி போட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு மருந்துகளை உரைகல்லில் தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு உரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரைக்கலாம்.(வசம்பை தவிர)
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் சிறிது தாய்பால் அல்லது தண்ணீர் விட்டு குழந்தைக்கு புகட்ட வேண்டும்.
*எப்போது கொடுக்க வேண்டும்?*
குழந்தையை குளிக்க வைத்தவுடன் இந்த மருந்தை கொடுப்பது வழக்கம்.
ஒரு நாள் விட்டு மறுநாள் கொடுக்கலாம்.
குழந்தையின் இரண்டு மாதம் முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம்.
*உரை மருந்துக்கான மூலப் பொருட்களும் அவற்றை சுத்தப்படுத்தும் முறைகளும், அவற்றின் மருத்துவ பயன்களும்*
கடுக்காய், சித்தரத்தை, சுக்கு, ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு என்ற ஆறு கடைச்சரக்குகள்.
நெல்லைப் புழுக்குவதற்கு வேக வைக்கும்போது நெல்லுடன் இவற்றை அப்படியே வெள்ளைத்துணியில் முடித்து வைத்துவிடவும்.
அல்லது (2கிலோ நெல் வாங்கி வந்து தனியாக அவிக்கவும்.)
அரை வேக்காடு ஏற்பட்டதும் (காய்களை அழுத்தினால் அழுந்தும் பதம் வந்தவுடன்) எடுத்து நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளவும். உரை மருந்து தயார்.
கை அகலத்திலுள்ள உரைகல் ஒன்று தேவை.
அதில் வெந்நீர், வெற்றிலைச் சாறு, துளசிச் சாறு, ஓமகஷாயம், இஞ்சிச் சாறு இவற்றில் ஒன்றைவிட்டு ஒவ்வொன்றையும் வயதிற்கேற்றபடி 2 அல்லது 5 தடவை உரைத்து வந்த விழுதைத் தேன் அல்லது சர்க்கரை சேர்த்துக் கொடுக்கவும்.
வாயு, சளி -வெந்நீர்; சளி, மப்பு -வெற்றிலைச்சாறு, துளசிச் சாறு, தேன்; வயிறு மந்தம், வயிற்றுப்போக்கு-ஓமகஷாயம், தேன். மப்பு, ஜூரம், வாந்தி -இஞ்சிச்சாறு, தேன் என்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.
*கடுக்காய்:*
நல்ல ஜீரண சக்தி, பசி தரும். மலத்தை இளக்கும். புளிப்பு(வயிற்றில்) அதிகமாவதைத் தடுக்கும். அஜீரண பேதியைத் தடுக்கும். குடல், இரைப்பை, கல்லீரல் சரியே இயங்கச் செய்யும்.
*சுக்கு:*
வயிற்றில் வாயு சேர விடாது. வயிறு உப்புசம், மலஜலம் சரியாக வெளியேறாதிருத்தல், மப்பால் வயிற்றுவலி, அஜீரணம், வாந்தி இவற்றைப் போக்கும். ஆனால் வயிற்றில் அழற்சி, கடுப்புடன் சீதத்துடன் மலம் வெளியாதல் ரத்தப்போக்கு போன்றவை இருந்தால் சுக்கை உரைத்துக் கொடுக்கக்கூடாது.
*சித்தரத்தை:*
தொண்டை மார்பு இவற்றில் கபக்கட்டு, உடலில் கடுப்பு வலி இவற்றில் நல்லது. எண்ணெய் தேய்த்தால் ஜூரம் சளி பிடிக்கும் என்ற நிலையில் இதனைத் தொடர்ந்து கொடுக்கலாம். தொண்டை-வாய்ப்புண், வறட்டிருமல், வயிற்று வேக்காளம் உள்ள நிலையில் சித்தரத்தையைக் கொடுக்கக்கூடாது. கபக்கட்டுள்ள நிலையில் இதனையும், சுக்கையும் அதிகம் உபயோகிக்கலாம்.
*ஜாதிக்காய்:*
இரைப்பையை நன்கு தூண்டி, ருசி சுவை கூட்டி பசி ஜீரண சக்தி தரும். சிடுசிடுப்பு, பரபரப்பு, காரணம் புரியாத அழுகை முதலியதைக் குறைத்து அமைதியாகத் தூக்கம் வரச் செய்யும். இளகிச் சூட்டுடன் அடிக்கடி மலம் போவதை இது தடுக்கும்.
*மாசிக்காய்:*
வேக்காளத்தைக் குறைக்கும். வாய்ப்புண், இரைப்பைப் புண், குடல் புண் இவற்றைக் குறைக்கும். பற்களைக் கெட்டியாக அழகாக வளரச் செய்யும். உடலில் விஷசக்தி பரவாமல் தடுக்கும். சிறுநீர் தாராளமாக வெளியாகும். தொண்டைச் சதை வளர்ச்சி, உள்நாக்கு வளர்ச்சி, சீத ரத்தத்துடன் மலப்போக்கு, வாயில் உமிழ்நீர் அதிகம் பெருகுதல் இவற்றைக் கட்டுப்படுத்தும்.
*வசம்பு 
இதுவும் கடுக்காயும், பிள்ளை வளர்ப்பான் என்ற பெயர் பெற்றவை. பசியின்மை, சுறுசுறுப்பின்மை, ருசியின்மை இவற்றைப் போக்கும். பரபரப்பு, சிடுசிடுப்பு, அமைதியின்மை இதனைச் சீராக்கும். பால் ஜீரணமாகாமல் வெளுத்து மலம் போவது, கீரிப்பூச்சி, உப்புசம், வயிற்றுவலி, மார்பில் கபச்சேர்வை இவற்றைப் போக்கும். உடல் சீராக வளர உதவும்.
*கார மருந்து* என இதற்குப் பெயர்.
அதனால் உரைத்த மருந்தை சிறுகச் சிறுக புகட்ட வேண்டும். தேன் சர்க்கரை சேர்த்து இனியதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். சிறு சிசுவிற்கு 10 – 15 உரைப்பு வரை தேவைப்படும். மூளைக்கும் குடலுக்கும் நல்ல செயல் திறனைத் தரும் இம்மருந்தை குழந்தைகளுக்கு ஏழு அல்லது எட்டு வயது முடியும் வரை தொடர்ந்து கொடுத்து வரலாம்.

“ தைப்பூசத் திருநாள் ‘

” பூசத்தின் நாயகனே ! பூவுலகம் காப்பாயாக
புள்ளிமயில் ஏறிவரும் வடிவழகா
தைமாத ஓரத்திலே தங்கரதம் கண்டவரே !
காவடியில் உன் முகம் காண்போம் கதிர்காமா
செந்தூர்க் கடலிலும் பரங்குன்றத் தரையினிலும் 
பழமுதிர்ச் சோலையிலும் பழநிமலை மீதினிலும்
தணிகைமலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும் சுவாமிமலை அருளினிலும்
அரங்கேற்ற வந்தவரே ! ஓம் முருகா “ .
இந்த தைப்பூசத் திருநாளிலே தாங்கள் தொடங்கும் செயல்கள் யாவும் தொய்வின்றி இனிதே நிறைவேறிடவும் .. வளநலம் பெருகிடவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன்
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
தைப்பூச நன்னாளில் அதிகாலையில்
கிழக்கில் - சூரியனும் ..
மேற்கில் - முழுநிலவும்
ஞானசபையில் இருந்து அக்னியான ஜோதியும் காண்பிக்கப்படும் .. இவை ஒரே நேர்கோட்டில் அமையும் .. இந்த அதிசயம் தைப்பூசத்தில் மட்டுமே நிகழும் ..
சந்திரன் என்பது - மன அறிவு
சூரியன் என்பது - ஜீவ அறிவு
அக்னி என்பது - ஆன்ம அறிவு ..
சந்திரன் சூரியனில் அடங்கி .. சூரியன் அக்னியில் அடங்கி .. அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே
“ தைபூசம் “
மனம் ஜீவனில் அடங்கி ..
ஜீவன் ஆன்மாவில் அடங்கி ..
ஆன்மா சிவத்துடன் கலந்துவிடும் .. மேலும் அதிகாலை ஜோதி தரிசனம் மட்டும் உண்மைத் தத்துவமாக வள்ளல் பெருமானால் விளக்கப்பட்டது ..
” அருட்பெருஞ்சோதி ! தனிப் பெருங்கருணை “ எனும் மகாமந்திரத்தை உலகுக்கு தந்த வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் ஆன்மீக உண்மையை உலகுக்கு உணர்த்தி ஒரு தைமாத புனர்பூச நட்சத்திரத்தன்று தான் இறைவனுடன் இரண்டறக்கலந்தார் ..
“ ஓம் ஜெய ஜெய மகாவீர பகவான் ஸ்ரீஸ்கந்தா நமோ நமஹ ! ஓம் ஜெய ஜெய மகாஜோதி சக்தி சரவணபவாயி நமோ நமஹ “
எனும் மந்திரத்தை சொல்லி தைப்பூசத்தில் ஷண்முகியாம் வேலாகிய ஜோதியை வழிபட்டால் வாழ்வில் ஏற்றம் காணலாம் .. வேல்வழிபாடு முருகன்வழிபாடு மட்டுமல்ல ஜோதிவழிபாடும் சக்திவழிபாடும் ஆகும் ..
சூரனை வதம் செய்வதற்காக தன் அன்னை சக்தியிடம் பிரார்த்தனை செய்த முருகனுக்கு தன் ஞானசக்தியால் பழனிமலையில் வேல் வழங்கி ஆசிவழங்கினாள் .. அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
Image may contain: 1 person
வேல் என்பதும் ஜோதி என்பதும் வேறல்ல .. பார்வதிதேவியின் சக்தியிலிருந்து அவதரித்ததால் அந்த வேலாகிய ஜோதி முருகனுக்குத் தங்கையாகிற வேல் .. பிரம்ம வித்யா சொரூபமானது .. சக்தியின் வடிவாய் சக்தியிடமே உருவான வேல் .. கந்தனின் தங்கை என்றும் .. அந்த வேலைத் தோற்றுவித்து அன்னை அளித்த திருநாள்
“ தைப்பூசத் திருநாள் ‘ என்றும் போற்றி வழிபடுகிறார்கள் ..
முருகனையும் ஜோதியையும் (வேல்) எப்போதும் பிரிக்கமுடியாது .. எனவேதான் புராணங்களில் ஜோதியாகிய சக்திவேலை “ ஷண்முகி “ என்றும் போற்றுகின்றன .. இந்த வேல்தான் சூரப்த்மனை இரண்டாகப் பிளந்து ஞானத்தை அளித்தது .. எனவே ஞானத்தின் அம்சம் வேல் ! அந்த வேலைத் தாங்குகின்ற முருகப்பெருமானாக ஞானவேல் முருகன் என்று போற்றுகின்றன ஆகமங்கள் ..
முருகனைப் போற்றுவோம் ! சகல சௌபாக்கியங்களையும் பெற்றிடுவோமாக !
“ சரணம் சரணம் சரவணபவ ஓம் ! சரணம் சரணம் ஷண்முகா சரணம் “

" தைப்பூச "அர்ச்சனை நாயகரே !

உலக
உதயத்தின் "முழு முதல் " மூலவரே !
அழகுக்கு 
அழகு சேர்க்கும் பழனி ஆண்டவரே!
பரமேஸ்வரனின் புத்திரரே!
தேவ சேனைகளின்
போர்படைத் " தலைவரே! "
தேவயானையின்
"மனம் கவர் " மன்னவரே !
தாருகாசுர சம்ஹார மூர்த்தியே!
தைபூச நன்நாளில் ...
எங்கள் மனங்களில் நடக்குது
உங்கள் ஆட்சியே !
உமது
அருள் வேண்டி
உம்மிடம்
அடைக்கலம் "உம் பாதம் "தொட்டு..
எம் பாவங்களும்....
வேதனைகளும்......
சோகங்களும்..........
விலகி ஓடிடுமே எங்களைவிட்டு...
கட்டு கட்டு
ஓம் முருகாவென .....எங்களை
அண்டவரும் ரோகங்களை கட்டு கட்டு
விட்டு விட்டு
எங்களின் பாவங்கள்
ஓடிடுமே.....
ஓம் முருகரின் " கடைக்கண் "
பார்வை பட்டு பட்டு....
தட்டு தட்டு
ஐயன் முருகரின் பாடல்களுக்கு
மனமுவந்து........அகம் மகிழ்ந்து...உன்
இரண்டு கைகளையும் தட்டு தட்டு.......
கவி.மரு.ஜெயக்குமார் பலராமன் 💐💐

Monday, January 29, 2018

"அவர்கள் காரணமில்லை, நீங்கள்தான் "

ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் பிடிக்கப் பழகினான்.
பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான்.
தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான்.
அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால் பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.
இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்.
கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது..தூக்கிற்கு முன்தினம் கடைசி ஆசை கேட்கப்பட்டது.பெற்றோரைச் சந்திக்க விரும்பினான்.பெற்றோரும் வந்தனர்.கதறினர்.போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,
மகன் அமைதியாகச் சொன்னான். "அவர்கள் காரணமில்லை, நீங்கள்தான் " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது ஆசிரியர் என்னை கண்டித்து அடித்தார்.வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும் அடித்து மிரட்டி போலீசிலும் புகார் கொடுத்தீர்கள்.
அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் தூக்கு மேடை வரை வந்திருக்கிறது. எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..

இந்து தர்மத்திற்கு ஆதரவாக பேசினால் சில பேர் பார்ப்பன அடிமை என பட்டம் கட்டுகின்றனர்.

இந்த வார்த்தையை யார் கூறுகிறார்கள் என பார்த்தால் 6 வகைகளில் ஏதாவது ஒன்றில் அவர்கள் வருவார்கள். அவரவர்களுக்கு ஏற்றபடி விளக்கவே இந்த பதிவு.
1. திமுக: இந்த கட்சியில் உள்ளவர்கள் கருணாவின் அடிமைகளே. எங்கள் கட்சி ஒன்றும் சங்கர மடமல்ல என்று சொல்லிக் கொண்டே கலைஞரின் வாரிசுகளை தவிர மற்றவர்கள் யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல் செய்த கட்சி. எல்லோரும் கருணா குடும்பத்தின் அடிமைகள்.
2. பெரியார் திக: தலைவர் வீரமணி, தேர்தல் வந்தால் கோபாலபுரத்துக்கும் போயஸ் தோட்டத்திற்கும் நடையா நடந்த கதை ஊருக்கே தெரியும். தனது சொத்துக்களை பெருக்கவே நேரம் போதவில்லை. ஈவேரா வின் படைப்புகளை கூட. வெளிவர விடாமல் தடுத்து நிறுத்த கருணாவுடன் சேர்ந்து சதிவேலைகளை் செய்த கருணாநிதியின் அடிமை திக வீரமணி. உங்கள் கொள்கைகளான சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு, பெண்விடுதலை எல்லாம் உலுத்து போனது. சாதி ஒழிப்பு என கூறிக் கொண்டு பிராமினர்களை மட்டும் ஒழிப்பதே உங்கள் லட்சியம். கடவுள் மறுப்பு என கூறிக் கொண்டு இந்து மதத்தில் உள்ள கடவுளை மட்டும் இழிவுபடுத்துவதே உங்கள் நோக்கம். மற்ற மதத்தில் உள்ளதை நீங்கள் பேச நினைத்தாலே ஒரே வெட்டு தான் உங்கள் வாயில். அமைதியானவர்கள் இந்துக்கள் மட்டும் தானே. பெண் அடிமை ஒழிக்கும் போர்வையில் தமிழக கலாச்சாரமான கற்பு நெறியுள்ள பெண்களின் வாழ்க்கை முறையை கேலிக்கூத்தாக்கும் உங்கள் நடவடிக்கைகள் எல்லாமே ஈவேரா என்ற ஆங்கிலேய அடிமையின் தொடர்ச்சியே.
3.சீமான்/திருமுருகன் காந்தி: அன்னிய நாட்டின் கைகூலிகள் இவர்கள். யாருக்கு அடிமை என சொல்ல தேவையில்லை. வாங்கிய காசுக்கு தங்கள் விசுவாசத்தை காட்டும் அடிமைகள்.
4.கிருஸ்துவ/இஸ்லாமியர்கள்(பிரிவினையை ஆதரிப்பவர்களை மட்டும் குறிப்பிடுகிறேன்): ஆங்கிலேய மற்றும் அரேபிய அடிமைகளாக தான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்கும் சதிகார கும்பல்கள். இவர்கள் மனதளவில் இன்னும் அவர்களுக்கே அடிமைகளாகவே உள்ளனர்.
5. கம்யூனிஸ்டுகள்: அடிமை விசுவாசம் என்றாலே அது கம்மிகள் தான். முன்பு ரஸ்யா இப்போது சீன அடிமைகள்.
6. நடுநிலைகள்: மதில் மேல் பூனையும் நடுநிலைகளும் ஒண்ணு. இவர்களால் என்ன பயன்?? உ.ம்.நான் இந்து, ஆனா விஜயேந்திரர் செய்தது தப்பு தான், நான் இந்து, ஆனா ஜீயர் பேசுனது தப்பு தான். ஐயா நடுசென்டர்களே இவர்கள் யாரும் தீவிரவாதிகள் இல்லை. நம் தர்மத்தை அழிக்க துடிக்கும் அயோக்கியர்களுக்கு நடுவே இவர்கள் நம் மதத்தை காக்க போராடுகின்றனர். 'கத்தி யார் வெட்டினாலும் வெட்டும் 'னு சினிமாவில் சொன்னா கை தட்டி ரசிக்கும் நாம் ஏனோ உண்மையாக தர்மத்தை காக்கும் மக்களை தீவிரவாதி போல நினைக்கிறோம். மதத்தின் பேரில் தீவிரவாதம் செய்யும் இஸ்லாமியர்கள் , மதமாற்றம் செய்யும் கிருஸ்துவர்கள்-அவர்கள் மதத்தவரை விட்டுக்கொடுப்பது இல்லை. கேட்டால் தீவிரவாதத்திற்கு மதமில்லை என முட்டு கொடுப்பான். கிருஸ்துவ கைகூலிகளின் அட்டகாசங்களை எழுத ஒரு பதிவு பத்தாது. நாம் என்ன அவர்கள் போல மனசாட்சி இல்லாதவர்களா??
அதர்மத்திற்கே அவ்வளவு முட்டு கொடுக்கிறார்கள் என்றால் அறத்தை, தர்மத்தை மட்டும் போதிக்கும் இந்து மதம் மற்றும் அதனை காப்பவர்களுக்கு முட்டுக் கொடுப்பதில் எள்ளளவும் தவறில்லை. ஆம் 'முட்டு கொடுப்போம் - தர்மத்திற்கு முட்டு கொடுப்போம்'. அது ஜீயர் என்றாலும் சரி விஜயேந்திரர் என்றாலும் சரி.
எங்கள் மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் பார்ப்பன அடிமை என நீங்கள் கூறினால் நான் நிச்சயமாக வெட்கபடாமல் கூறுவேன் ஆமாம்
1.என் இந்து தர்மத்தை காப்பவர்கள் பார்ப்பனர்கள்.
2.அவர்களை பற்றி எத்தனையோ மாக்கள் மேடையில் அவதூறாக பேசினாலும் திருப்பி தாக்காமல் அமைதி காப்பவர்கள் பார்ப்பனர்கள்.
3.நேர்மை நாணயத்துக்கு கட்டுபட்டு வாழ்பவர்கள் பார்ப்பனர்கள்.
4. சாதி கலவரத்தில் ஒருத்தரை ஒருத்தர் வெட்டிக் கொல்லாதவர்கள் பார்ப்பனர்கள்.
5. தமிழ் மொழியை காத்த திரு.உவேச ஐயர் பார்ப்பனர்
6. அனைவரும் ஆலய பிரவேசம் செய்யலாம் என புரட்சி ஏற்படுத்திய திரு.வைத்தியநாத ஐயர் பார்ப்பனர்
7. காக்கை குருவி எங்கள் சாதி, சாதிகள் இல்லையடி பாப்பா குலம் தாழ்த்தி உயர்வு சொல்லல் பாவம் என பாடிய மகாகவி பாரதியார் பார்ப்பனர்
8. அந்த காலத்தில் தாழ்த்தபட்ட மக்களுக்காக போராடிய இராமானுஜர் என்ற மகான் பார்ப்பனர்.
இன்னும் எத்தனையோ சொல்லலாம். ஆனால் பதிவின் நீளம் கருதி குறிப்பிடவில்லை.
அமைதிமயாக சகோதரர்களாக இலங்கையில் வாழ்ந்து கொண்டிருந்த சிங்களர்களும்,தமிழர்களும் அடித்துக் கொண்டு இன்று அங்கு நடந்த இன அழிப்புக்கு வித்திட்டதே கிருஸ்துவ மிஷனரிகள்.
அந்த கிருஸ்துவ கைகூலிகள் தான் இங்கு பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதவர்களுக்கும் பகையை மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
No automatic alt text available.
எங்கள் இந்து மதத்திற்கு எதிராக உங்களுடைய சதிவேலைகளை சுட்டி காட்டினால் (அல்லது) எங்கள் தர்மத்தை காக்க போராடும் இந்துக்களையும் நீங்கள் பார்ப்பன அடிமை என கூறினால் அதர்மத்திற்கு துணை போகும் மேற் சொன்ன அடிமைகளை விட
நாங்கள் பார்ப்பன அடிமை தான் என சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறோம்.

தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாங்கள் இந்துக்கள் என்று...
தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாம் எமது சமயத்திற்கு பங்கம் விளைவித்தவர்களின் தலையை கொய்த மன்னர்களின் பரம்பரையில் வந்த வீர தமிழர்கள் என்று...
தலைநிமிர்ந்து சொல்லுங்கள் நாம் பக்தியால் கடவுளை அடைந்த நாயன்மார்களின் குருகுல வழித்தோன்றல்கள் என்று............

*பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்*

1 திருநெல்வேலி பாளையங்கோட்டைஅருகே திருச்செந்தூா் சாலையில் உள்ள சிரட்டை பிள்ளையாா் கோவிலில் விநாயகருக்கு விடலை போடும்போது சிரட்டையும், தேங்காயும் பிரிந்து சிதறுகிறது.
2 ஸ்ரீரங்கம் கோவிலில் ஸ்ரீராமானுஜரின் உடல் 1000 வருடங்களாக கெடாமல் அப்படியே உள்ளது
3 தஞ்சைபிரகதீஸ்வரர் கோவிலில் 72 டன் கல் கோபுர உச்சியில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை குளிர்காலத்தில் வெப்பமாகவும் வெயில் காலத்தில் குளிராகவும் இருக்கிறது.
4 தாராபுரம் ஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள இசைப்படிகளில் தட்டினால் சரிகமபதநிச என்ற இசை வருகிறது.
5 கடலுக்கு 3500 அடி உயரத்தில் வெள்ளியங்கிரி மலையில் சிவனின் பஞ்சவாத்ய ஒலி கேட்கிறது
6 கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கோட்டையூரில் 
நூற்றி ஒன்று சாமிமலை குகையில் ஓரடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கில் இளநீர் விட்டு தீபமேற்றினால் பிரகாசமாக எரியும் அதிசயம் நடக்கிறது.
7 சென்னை வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயிலில் தினமும் சூரிய ஒளி மூலவா் மீது விழுகிறது. (காலை மதியம் மாலை என மும்முறை ) 
8 சுசிந்திரம் சிவன் கோவிலில் ஒரு சிற்பத்தின் காதில் குச்சியை நுழைத்தால் மறு காதுவழியாக வருகிறது.
9 திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த மாதத்தில் இந்தந்த வடிவத்தில் இந்த விதமான Positions-ல் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 
10 செங்கம் ஊரில் உள்ள, ஸ்ரீ அனுபாம்பிகை உடனுறை ரிஷபேஸ்வரர் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை, பங்குனி மாதம் மூன்றாம் நாள், மாலை சூரிய அஸ்தமனத்தின் பொழுது, நந்தியம் பெருமான் மீது சூரிய ஒளி விழும் பொழுது, அவர் தங்க நிறத்தில் ஜொலிப்பார்
11 வட சென்னையில் ஐயாயிரம் ஆண்டுகள்.பழமையான வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழுகிறது
12 ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது
13 ஈரோடு காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவில் குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபூதி தோன்றுகிறது
14 மதுரை மீனாட்சி அம்மன்கோவில் தெப்பகுளத்தில் மீன்கள் வளராது.
16 சேலம் தாரமங்கலம் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமா் சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து வாலி சிற்பம் இருப்பதை பாா்க்க முடியும். ஆனால் வாலி சிற்பம் இருக்கும் இடத்திலிருந்து ஸ்ரீராமரைப் பாா்க்க முடியாத வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
17 சென்னை முகப்போில் காிவரதராஜப்பெருமாள் கோவிலில் விளக்குகளை அணைத்துவிட்டால் பெருமாள் நம்மை நோில் பாா்ப்பது போல் இருக்கிறது.
18 தென்காசி அருகில் புளியங்குடியில் சுயம்பு நீரூற்று வற்றி தண்ணீா் இல்லாமல் இருக்கும்போது பிராா்த்தனை செய்து பால் அல்லது இளநீா் விட்டால் மறுநாள் ஊற்றில் நீர் வந்துவிடுகிறது
19 தூத்துக்குடி மாவட்டம் செட்டியாபத்து கிராமத்தில் பொியசாமி கோவிலில் கோவிலுக்கு நோ்ந்துவிடப்படும் பன்றி கொடை விழாவின்போது அங்குள்ள நீருள்ள தொட்டிக் குள் தலையை தானாகவே மூழ்கி இறந்துவிடுகிறது.
20 குளித்தலை அருகில் ரத்தினகிாி மலை மேல் காகங்கள் பறப்பதில்லை
21 தேனி அருகில் உள்ள சிவன்கோவிலில் அவரவா் உயரத்தில் சிவலிங்கம் காட்சி தருகிறது.
22 தூத்துக்குடி மாவட்டம் வீரபாண்டியபுரத்தில் அம்மன்கோவில் கொடை விழாவின்போது மண்பாணையில் வைக்கப்படும் கத்தி சாமி கோவிலை வலம் வந்து சேரும் வரை செங்குத்தாக நிற்கிறது.
23 விருதுநகாில் மகான் திருப்புகழ்சாமி கோவில் திருவிழாவின்போது சுவாமிக்கு படைக்கப்பட்ட சாதத்தில் வேல் வைத்து பூஜை செய்கின்றனா். அதன் பின் எவ்வளவு பக்தா்கள் வந்தாலும் உணவு குறையாமல் வந்துகொண்டே இருக்கிறது. (வேலை எடுத்தவுடன் குறைந்து காலியாகிவிடும்) இதுபோல் உணவு தட்டாமல் வருவது அத்திாி மலையிலும் நடைபெறுகிறது. 
24 திருமந்திரநகா் (தூத்துக்குடி) சிவன்கோவிலில் சித்திரைத் தோ்த்திருவிழாவின்போது தோ் ஓடும் ரதவீதி மட்டும் சுடுவதில்லை
25 சென்னி மலை முருகனுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிா் புளிப்பதில்லை
26 திருப்புவனம் (சிவகங்கை மாவட்டம்) அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையாா் கோவிலில் மீனாட்சி அம்மன் 2 மாதங்களுக்கு ஒரு முறை நிறம் மாறுகிறது.
27 திருநெல்வேலி கடையநல்லூர் அருகில் சுந்தரேஸ்வரபுரம் சுந்தரேஸ்வரர் கோவிலில் பிரகாரத்தில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டால் வெளியே உள்ள ஒளி மூலவர் மீது விழுவதைக் காணலாம்.
28 ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவராத்திரியன்று கொதிக்கும் எண்ணெயில் கையைவிட்டு வடை சுடுகிறார் ஒரு பாட்டி.
29 திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில் சிவலிங்கம் 6 நாழிகைக்கு ஒரு வர்ணத்திற்கு மாறுகிறது. 
30 காசியில் கருடன் பறப்பதில்லை. மாடு முட்டுவதில்லை. பிணம் எரிந்தால் நாற்றம் எடுப்பதில்லை. பூக்கள் மணம் வீசுவதில்லை. 
31 சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகில் கல்லுமடை திருநாகேஸ்வரமுடையார் கோவிலில் மீனாட்சிஅம்மன் 2 மாதங்களுக்கு ஒருமுறை நிறம் மாறுகிறது. 
32 திண்டுக்கல் அருகே திருமலைக்கேணி முருகன் கோவிலில் அருகருகே உள்ள தெய்வானை சுனையின் நீர் எப்போதும் குளிர்ந்த நீராகவும், வள்ளிசுனையின் நீர் இரவுபகல் எந்நேரமும் வெந்நீராகவும் இருக்கிறது. 
33 திருக்கழுக்குன்றத்தில் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயம் நடைபெற்றது
34 திருநாகேஸ்வரம் சிவன் கோவிலில் ராகுகாலத்தில் மட்டும் சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேக பால் நீலநிறமாகிறது. 
35 சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் சூரசம்ஹாரத்திற்காக முருகன் அம்பிகையிடம் வேல்வாங்கும்போது முருகனின் திருமேனி முழுவதும் வியர்வை பெருகுகிறது. அா்ச்சகா் பட்டுத்துணியால் ஒற்றி எடுக்க துணி தொப்பலாக நனைந்துவிடுகிறது.
36 நாகர்கோவில் கேரளபுரம் சிவன் கோவிலில் உள்ள ஒரு விநாயகர் ஆறுமாதகாலம் கருப்பாகவும், ஆறுமாதம் வெண்மைநிறமாகவும் காட்சி தருகிறார். அது சமயம் நாகா்கோவில் நாகராஜா கோவிலில் கொடுக்கப்படும் மண் கருப்பாகவோ வெள்ளையாகவோ இருக்கிறது.

புரை தீர்ந்த நன்மை பயக்குமென்றால் பொய்மையும் வாய்மை இடத்தில் தானே?

மகாபாரதத்தில் இந்தக் காட்சியைப் பாருங்கள். குருஷேத்திரப் போர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரம். துரோணாச்சாரியார் பொழிந்த அம்புகளின் மழையில், பாண்டவர்களின் படைகளுக்குப் பலத்த சேதம்! துரியோதனனுக்கும் கவுரவர்களுக்கும் கை ஓங்கும் நிலை! துரோணர் ஒருவராகவே, பாண்டவப் படைகளின் பாதி பலத்தைக் குறைத்து விடுவார் என்கிற ஆபத்தான கட்டம்!
இதைப் பார்த்த கிருஷ்ணர் யோசித்தார். உடனே பீமனிடம் சென்றார். `பீமா! நம் படைகளை அசுவத்தாமன் என்ற கவுரவர்களின் யானை அடித்து நொறுக்குகிறது பார். அதன் தலையை உன் கதையால் பிளந்து விடு' எனக் கட்டளையிட்டார்.
பராக்கிரமசாலியான பீமன் யானையின் தலையில் தன் கதையால் பறந்து, பறந்து அடிக்க அசுவத்தாமன் சுருண்டு உயிரை விட்டது!
கிருஷ்ணர் இப்போது தர்மரிடம் வந்தார். ‘நம் படைகளை வதம் செய்த அசுவத்தாமன் என்ற யானையை பீமன் கொன்று விட்டான். அசுவத்தாமன் இறந்தான் என்று துரோணருக்குச் சொல்லுங்கள் ' என்றார்!
`அசுவத்தாமன் என்ற யானை இறந்துவிட்டது என்பதற்குப் பதிலாக, அசுவத்தாமன் என்ற தனது மகன் தான் போர்க்களத்தில் இறந்து விட்டான் என்று துரோணர் நினைத்துக் கொண்டு விடலாமே? 'எனத் தர்மத்தின் மறு உருவான யுதிஷ்டிரர் கவலையுற்றார். ஆனால் பின்னர் கிருஷ்ணரின் வற்புறுத்தலின்படி ‘அசுவத்தாம யானையை பீமன் கொன்றுவிட்டான்,' என்று துரோணரை நோக்கி உரக்கக் கூறினார்!
அந்தச் சமயம் பார்த்து கிருஷ்ணர் சங்கை எடுத்து ஊதினார்! ‘தருமரே! என்ன சொல்கீறிர்கள்? சரியாகக் கேட்கவில்லை,' என துரோணர் கேட்க, சரியான நேரத்தில் இடையில் புகுந்து `அசுவத்தாமனை, பீமன் கொன்று விட்டானாம்' என்று சொல்லி விட்டார் கிருஷ்ணர்!
பதைபதைத்த துரோணர், தருமரைப் பார்த்து அது உண்மையா எனக் கேட்டார்! ஆனால் தருமர் மௌனமாக இருந்து விட்டார்! மவுனம், சம்மதத்தின் அறிகுறி என்று நினைத்த துரோணர் தனது அன்பு மகன் அசுவத்தாமன் கொல்லப்பட்டதாகப் புரிந்து கொண்டு நிலை குலைந்தார்! பின்னர் கொல்லவும் பட்டார்!
ஐயா, பஞ்ச பாண்டவர்கள் நல்லவர்கள். துரியோதனனால் வஞ்சிக்கப் பட்டு நாட்டை இழந்தவர்கள். அவர்களுக்கு உதவ எண்ணினார் பகவான் கிருஷ்ணர். அதற்கு அந்த அநியாயக்காரர்கள் பக்கம் நின்ற துரோணர் எனும் பராக்கிரமசாலியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் அந்த சூட்சுமதாரிக்கு! ஒரு நல்லது நடப்பதற்காக ஆனானப்பட்ட தர்மரையே தர்மத்தை விட்டுக் கொடுக்க வைத்து விட்டார் அவர்! ஐயன் வள்ளுவர் சொல்லியது போல, புரை தீர்ந்த நன்மை பயக்குமென்றால் பொய்மையும் வாய்மை இடத்தில் தானே?
ஐயா, எப்பவும் அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வது தானே முக்கியம்? அவ்வப்பொழுது சூழ்நிலைக்கேற்றவாறு அணுகுமுறையில் மாற்றங்களை செய்து கொள்வது தானே கெட்டிக்காரத்தனம்?
கீனிச்சி ஒஹ்மே எனும் ஜப்பானியர் உலகில் மிகவும் மதிக்கப்படும் Strategic Business Consultant களில் ஒருவர். ‘The mind of the stragesist' எனும் அவரது நூலில், அவர் வர்த்தகப்போட்டிகள் நாடுகளுக்கிடையே நடைபெறும் போர் போன்றவையே என்கிறார்!
எதிராளியை எந்தச் சமயத்தில் தாக்குவது, எப்பொழுது பின்வாங்குவது, என்பவை இவ்விரண்டு இடங்களிலுமே முக்கியமல்லவா? நடப்பவைகளை வேகமாகப் புரிந்து கொண்டு அவற்றுக்கேற்றவாறு உடனுக்குடன் எதிர் நடவடிக்கைகளை, மாற்று நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான Intellectual Elasticity குறித்துப் பேசுகிறது அப்புத்தகம்!
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று சொல்லிக் கொண்டிருக்காமல் நடப்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார்ப் போல் தமது அணுகுமுறையை, செயல் திட்டங்களை மாற்றிக் கொள்பவர்களால் தானே வாழ்க்கையில், வர்த்தகத்தில் வெற்றி பெற முடியும்.
தம்பி, 1970களில் இந்தியாவில் எத்தனை வகையான கார்கள் இருந்தன தெரியுமா?
உள் நாட்டில் மூன்றே மூன்று வகை தானப்பா! 1980களில் இந்தியாவிற்கு ஜப்பானின் சுசூகி வந்த பின் தானே இங்கே எல்லாம் மாறியது? இன்று இந்தியாவின் மொத்த கார் உற்பத்தியில் பாதி கார்கள் மாருதி நிறுவனத்தினுடையதுதானாம்! ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் கார்கள்! ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட 125 நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்கிறார்களாம்! அவர்கள் வந்து இறங்கிய உடனேயே, இந்தியாவிலும் தங்கள் ஜப்பான் அரசாங்கத்தின் வேகத்தையும், அந்நாட்டு உபரி பாகங்களின் தரத்தையும், அவர்களின் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டையும் எதிர் பார்த்திருந்தால், நடைமுறைப்படுத்த முயன்றிருந்தால் என்னவாகியிருக்கும்?
`நாங்கள்அப்படியாக்கும், நீங்களும் உடனே மாறுங்கள்' என்று சொல்லியிருந்தால் திரும்பித் தான் போயிருக்கணும்! கொஞ்சம் வளைந்து கொடுத்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக பலவற்றை சீரமைத்தார்கள். வெற்றி கிடைத்தது!
‘உங்களது அணுகுமுறையில் பிடிவாதமாக இருக்காதீர்கள். விட்டுப் பிடியுங்கள். காட்டில் நேரான மரங்கள் வெட்டப்படும். ஆனால் வளைந்து நெளிந்த மரங்கள் தப்பித்து விடும்!'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...