Wednesday, January 17, 2018

இதில் உங்கள் கருத்து என்ன?

காலை வணக்கம். வாழ்க வளமுடன்..
வெள்ளி கவசமும்.. தங்க கவசமும்..
நமது ஆலயங்களில் மூலவர் கற்களினால் ஆன திருமேனி.. நாம் சிறுவயது முதல் கறுப்பு நிறத்திலேயே பார்த்து பழகிப்போன இறைவன்..

சிற்ப சாஸ்த்திரப்படி.. சிற்பி அதை உருவாக்கும் போது இறைவன் உருவத்திற்கு கண் திறப்பது என்று நல்ல நேரம் பார்த்து திறப்பார்..
ஆலயப் பிரதிஷ்ட்டை செய்யும் போது.. அஷ்ட்டபந்தனம் செய்கிறோம்..
நம்மைப் பொறுத்தவரை அது சிலையல்ல..இறைவனேதான்..
அவருக்கு அபிஷேகம் செய்கிறோம்.. துடைத்து விடுகிறோம்.. விதவிதமான அலங்காரங்கள் செய்து அழகு பார்க்கிறோம்..ஷோடச உபசாரங்களில்.. விசிறி வீசுகிறோம்.. ஆண்டவனுக்கு வியர்க்குமே என்று..
வித விதமான பண்டங்களை வைத்து நைவேத்தியம்செய்து அமுது படைக்கிறோம்..
சந்நிதியில் நிற்கும் அனைவரும் இறைவா.. கண் திறந்து என் கஷ்ட்டங்களைப் போக்கக் கூடாதா என்று வேண்டிக் கொள்கிறோம்..
என் சிறுவயதில் கோவில்களில் சுவாமிசிலைக்கு வெள்ளிக் கவசம் சாற்றினால்.. முகத்தை விட்டுவிட்டு மற்ற அங்கங்களுக்குத்தான் சாற்றுவார்கள்.. திருமுகத்திற்கு மஞ்சள் காப்பு.. சந்தனக் காப்பு..விபூதியினால் அலங்காரங்கள் செய்து..இறைவன் நம்மைப் பார்ப்பது போல் இருக்கும்..
ஆனால் சமீப காலங்களில் தங்கத்திற்கும் வெள்ளிக்கும் ஆசைப்படும் மனிதன்.. அதை இறைவன் மீதும் திணித்து.. மூர்த்தி முழுவதையும் கவசத்தினால் மூடிவிடுகிறான்..
அந்த அருள் கனிந்த முகத்தைப் பார்க்க முடியாமல் செய்து விடுகிறது அந்த உலோகம்..
ஆகையால் முகம் தவிர்த்து கவசம் அணிவித்தால்.. இறைவனின் பார்வை நம்மீது படும் அல்லவா?..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...