Saturday, January 20, 2018

தந்தி டிவி ஆய்த எழுத்து நிகழ்ச்சி ஒரு சிறிய கற்பனை...

நெறியாளர்: வணக்கம் இன்று பேருந்து கட்டண உயர்வுக்கு காரணம் மாநில அரசின் நிதிச்சுமையா அல்லது மத்திய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வா விவாதிக்கலாம். நம்மிடையே பா ஜ க வை சேர்ந்த திரு நாராயணன் அவராகளும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யை சேர்ந்த திரு அருணனும் அதிமுக வை சேர்ந்த திரு செல்வராஜ் அவர்களும் இணைகிறார்கள். இது மட்டுமல்லாது சாமானயனாக (அநேகமாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் அல்லது ஏதாவது பிரிவினை இயக்கத்தில் இருப்பவர்) திரு சுரேஷ் அவர்கள் இணைகிறார்கள். நான் முதலில் சுரேஷ் கிட்ட கேட்க விரும்பறேன். சொல்லுங்க இந்த பஸ் கட்டண உயர்வை எப்படி பார்க்கிறீர்கள்?
சாமான்யன சுரேஷ் :இது வெறும் மாநில அரசின் முடிவல்ல. இன்றைக்கு பா ஜ க அரசின் கைப்பாவையாக செயல்படும் கையலாகாத அதிமுக அரசின் முடிவு. பெட்ரோல் டீசல் விலை உயர்வை பற்றி எதிர்த்து கேட்காததன் விளைவு இது.
நெறியாளர்: நன்றி நான் திரு அருணன் கிட்ட கேட்க விரும்பறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி உங்க இயக்கதோட பங்களிப்போட போக்குவரத்து தொழிலாளர்கள் வேவை நிறுத்தம் நடந்தது. அவர்களுக்க வழங்க வேண்டிய ஊதிய உயர்வு காரணமாகத்தான் இந்த கட்டண உயர்வு சொல்லபடுதே இது பற்றி உங்கள் கருத்து
அருணன்: தவறான தகவல் இது முழுக்க முழுக்க வகுப்பு வாத மதவாத அரசியல் நடத்தும் பா ஜ க வின் கைகூலி கையலாகாத மாநில அதிமுக அரசின் முடிவு. இதை எதிர்த்து நாங்கள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்துவோம்.
நெறியாளர்: நன்றி. திரு நாராயணன் நான் உங்ககிட்ட கேட்க விரும்புறேன். இந்த கட்டண உயர்வு வெறும் மாநில அரசோட பொறுப்புனு நீங்க சொல்ல முடியாது. பஸ் ஓடறதுக்கு டீசல் தேவைஅதனால டீசல் விலை உயர்வாலத்தான் இந்த பஸ் கட்டண உயர்வு அப்படி னு பொதுமக்கள் கிட்ட ஒரு கருத்து இருக்குது. இதுபற்றி நீங்க என்ன சொல்றீங்க?
நாராயணன்: வணக்கம். அதாவது நான் என்ன சொல்றேன்னா மாநில அரசுகள் கிட்ட பெட்ரோல் டீசல் கான வரிவிதிப்பை குறைக்க சொல்லி கேட்ருக்கோம். ஒரு சில பா ஜ க ஆளும் மாநிலங்களில் இதை அமல்படுத்தியும் இருக்கோம்.
நெறியானர் இடைமறித்து திரு நாராயணன் நாம இது பற்றி வேற ஒரு ஆய்த எழுத்து நிகழ்ச்சி ல பேசுவோம். இப்ப ஒரு சிறிய இடைவேளை.
இப்படி த்தான் எல்லா ஊடகங்களிலும் நிகழ்ச்சி நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...