Sunday, January 14, 2018

இஸ்ரோ தலைவரான முதல் தமிழர்!

நாட்டின் கவுரவம் வாய்ந்த பொறுப்புகளில் ஒன்றாக கருதப்படும் இஸ்ரோ தலைவர் பதவியை அலங்கரிக்கவுள்ள முதல் தமிழர் சிவன். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
2015 ஜனவரி 12ம் தேதி முதல் இஸ்ரோவின் தலைவராக உள்ள கிரன்குமாரின் பதவிக்காலம் ஜனவரி 14-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதால் புதிய தலைவராக சிவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எம்.ஐ.டி (MIT) எனப்படும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஏரோனாடிகல் இன்ஜினியரிங் படித்த சிவன், 1982ம் ஆண்டு இஸ்ரோவில் நுழைந்து பி.எஸ்.எல்.வி (PSLV) உள்ளிட்ட ராக்கெட் திட்டங்களில் பணியாற்றியவர். தற்போது கேரளாவில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் தலைவராக பயணியாற்றி வருகிறார்.
ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைப் படைக்க காரணமாக இருந்தது ராக்கெட் ஸ்பெசலிஸ்டான சிவனின் சாதனையாகவே பரவலாக பேசப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சாதனைகளை இஸ்ரோ நிகழ்த்த தமிழரான சிவனின் பங்களிப்பு முக்கியக் காரணமாகும்.
விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் இயக்குநராக சிவன் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் சிறப்பு மிக்க கிரையோஜெனிக் எஞ்ஜின் தயாரிக்கப்பட்டது. மிகக்குறைந்த வெப்பநிலையில் திரவமாக்கப்பட்ட எரிவாயுக்களைக் கொண்டு இயங்கக் கூடியது கிரையோஜெனிக் எஞ்ஜின்.
இந்தியாவின் 3 செயற்கைக்கோள்கள் உட்பட 31 செயற்கைக் கோள்களை (பிற நாடுகளின் 28 செயற்கைக்கோள்கள்) இஸ்ரோ விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரோ தலைவராக தேர்வாகியுள்ள சிவன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில், தற்போது தனது முழு மனதும் அடுத்து விண்ணில் ஏவப்படவுள்ள ராக்கெட் குறித்துதான் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த முறை ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வியில் முடிந்ததால், இந்த முறை அதிக கவனம் செலுத்தி வெற்றியை நோக்கி உழைத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
விக்ரம் சாராபாய், சதிஷ் தவான், யு.ஆர்.ராவ் உள்ளிட்ட மாமேதைகள் தலைமையேற்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை ஏற்பது மிகப்பெரிய கடப்பாடு நிறைந்தது என்றும் சிவன் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...