Tuesday, January 23, 2018

ஆலயத்தில் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் ...



1.கோயிலில் இருக்கும் மரங்களிலிருந்து இலைகளையோ, பூக்களையோ பறித்து வந்து வீட்டு வழிபாட்டிற்கோ, ஆத்மார்த்த பூஜைக்கோ பயன்படுத்தக் கூடாது. .
2. சுவாமிகளுக்கு அபிஷேகம், நிவேதனம் நடக்கும்போது வீழ்ந்து வணங்கக் கூடாது.
3.பிறருடைய அன்னத்தைப் புசித்த தினத்தில் ஆலயத்தில் வந்து சேவிப்பது, அபச்சாரம்.(திதி ,திவசம்,)
4.பிறர் தந்த பொருளைக் கொண்டு சுவாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது.(மலர் ,கனிகள் ,உணவு பொருட்கள் )
5.ஒருவரைக் கெடுப்பதற்காகக் கோயிலுக்குச் செல்வதோ, அர்ச்சனை, அபிஷேகம் நடத்துவதோ அபச்சாரமாகும்,இவைகள் மிக பெரிய தோஷமாக மாறும் .
6.கறுப்பு ஆடை அணிந்து கொண்டு பூஜை செய்வதும் கோயிலுக்குச் செல்வதும் கூடாது.(இவைகள் மந்திரவாதிகள் செய்யும் பலிபூசைக்கு உடன்பட்டது ,ஐயப்ப மலைக்கு செல்லும் பொழுது சில கட்டுப்பாடுகளின் கீழ் இவைகள் செயலற்று போகும் ).
7.பூஜை செய்யும்பொழுது பிறருடன் பேசுவது தவறு.
8.இருட்டில் பகவானை வணங்குதல் ஆகாது. இருட்டில் பூஜை செய்யவும் கூடாது.
9.குளிக்காமலோ, கால் கழுவாமலோ, பாதுகையுடனோ ஆலயம் செல்வது குற்றம்.
10.ஏதேனும் பழம், தேங்காய், புஷ்பம் முதலியவை இல்லாமல் கோயிலுக்குச் செல்லக் கூடாது.
11.சாஸ்திரம் கூறாத இடத்தில் விழுந்து வணங்கினால் மற்ற மூர்த்திகளுக்கு எதிரில் காலை நீட்டிய குற்றம் உண்டாகும்.
12.கோபத்துடன் ஆலயம் செல்வது கூடாது,தரித்திரம் உண்டாகும் .
13.முறைப்படி குளிக்காமலோ , முறைப்படி வஸ்திரம் அணியாமலோ, நெற்றிக்கு திலகம் /திருநீர் /நாமம் அணியாமலோ செல்வது குற்றமாகும்.
14.பொதுவாகவே வீட்டில் புசித்து விட்டு அதன் பிறகு ஆலயம் செல்வது பலன் கிடைக்காது .
15.வீட்டில் செய்துவரும் நித்திய பூஜையை நிறுத்திவிட்டு ஆலயம் செல்லலாகாது.
நன்றி ...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...