
தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்
தினை-யில் கேசரி அடிக்கடி செய்து பெண்கள் சாப்பிட்டு வந்தால்
பெண்களின் உடல் அழகு மேம்பட பல்வகை இயற்கை சார்ந்த உணவுகள் நிறைய
உண்டு. அந்த வரிசையில் இந்த தினை-க்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. இப்போது தினையில் கேசரி எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.
தினை கேசரி (Millet Kesari) செய்ய தேவையானவை:

நாட்டுச் சர்க்கரை – அரை கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – கால் கப்
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்

முந்திரி தலா – 10
கேசரி கலர் – 1 சிட்டிகை
செய்முறை:
வாணலியில் நெய்விட்டுச்சூடாக்கி, உலர் திராட்சை, முந்திரியை வறுத்துத் தனி
யா க வைக்கவும். அதே நெய்யில் தினையை வறுக்கவும். பிறகு ஆறவிட்டு, மிக்ஸி யில் ரவை போல் அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, தினை ரவையைச்சேர்த்து வேகவிடவும் . வெந்ததும் நாட்டுச் சர்க்கரை, கேசரி கலர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை கிளறவும் (இடையிடையே நெய் சேர்த்துக் கிளறவும்). இறுகியதும், ஏலக்கா ய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.

தினை கொழுப்பைக் குறைத்து, உடல் எடை குறைக்க உதவுகிற து. தினையில் நிறைந்துள்ள புரதச்சத்து உடலை வலுவாக்கும். வாயுக் கோளாறைப் போக்கும். பசியை உண்டாக்கும். மற்ற தானியங்களை விட தினையில் இரும்புச்சத்து அதிகம்
இந்த தினை கேசரியை ஆண்களும் சாப்பிடலாம்.
No comments:
Post a Comment