Saturday, January 20, 2018

திராவிட இயக்கம் அதின் முன்னோடியான நீதி கட்சியும் சாதித்தது என்ன????

தமிழகத்தின் இன்றைய வளர்ச்சியில் பெரும்பங்கு திராவிட இயக்கத்தையே சாரும். ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மற்றவர்களை அடிமைகளாக நடத்திக்கொண்டிருந்த நிலையை மாற்றி, 3% சதவீதம் இருந்த மக்கள்ளே 95% வேலைகள் & படிப்புகளை ஆக்கிரமிப்பு செய்திருந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவு மக்களும் உரிமையுடன் வாழ்ந்திட வழிவகுத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம் (முத்தையா முதலியார்), கோவில் பணத்தை, சொத்துக்களை குறிப்பிட்ட சிலர் மட்டுமே அனுபவித்து, கொள்ளையடித்து வந்ததை தடுக்கு இந்து அறநிலைய சட்டம் (பனகல் அரசர்), ஆங்கில மருத்துவக் கல்விக்கு கட்டாயம் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கியது (பனகல் அரசர்), பெண்ணடிமைத்தனத்தை ஊக்குவித்த தேவதாசி முறை ஒழிப்பு..
குலக்கல்வி ஒழிப்பு, எல்லா சிறுவர்களுக்கும் பாடசாலைகள், மதிய உணவு (நீதிக்கட்சி, காமராஜர் ) தமிழகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் (காமராஜர்,கலைஞர் ), பிற்படுத்தப்பட்ட & மிக பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை பாதுகாத்த முதல் அரசியல் சட்ட திருத்தம் (தந்தை பெரியார்), பொதுவீதிகளில் அனைத்து ஜாதியினரும் நடக்க உரிமை (தந்தை பெரியார்), சமபந்தி போஜனம், தலித் ஆலயப்பிரவேசம் (தந்தை பெரியார்), திருக்குறள் மாநாடுகள் நடத்தி பரணிலிருந்த திருக்குறளை மக்களிடையே பிரபலப்படுத்தியது (தந்தை பெரியார்), தமிழ் எழுத்து சீர்திருத்தம் (தந்தை பெரியார்), தெலுங்கு கீர்த்தனைகளக்கு மாற்றாக தமிழிசைக்கு மேடை அமைத்தது, சுயமரியாதை திருமணத்திற்ரு சட்ட ஏற்பு, மெட்ராஸ் பிரசிடன்சியை தமிழ்நாடாக மாற்றியது (அறிஞர் அண்ணா).
கைரிக்ஷா ஒழிப்பு, கண்ணொளித்திட்டம், இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை நீக்க வைத்தது, தமிழக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பல அமைப்புகள் (வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை, பூம்புகார்), வடக்கு வாழ்ந்து தெற்கு தேய்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றி தெற்கையும் மத்திய அரசில் இடம்பெற வைத்து பல தொழிற்சாலைகளை கொண்டுவந்தது, கோயில்களில் தமிழ் மொழியில் அர்ச்சனை, தமிழ் செம்மொழி இப்படி இன்னும் பல (கலைஞர்).
ஒரு குலத்துக்கொரு நீதியை ஏற்காத மனநிலையை உருவாக்குதல், குலத்தில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லுவதை தடுத்தல், சூத்திரப்பட்டத்தை நீக்குதல், குறிப்பிட்ட இனத்தவரை பூலோக தேவர்களாக கருதும் மனநிலையை மாற்றுதல், இடஒதுக்கீட்டை முழுமூச்சாக ஆதரிக்கும் மனநிலையை உருவாக்குதல், கடவுளின் பெயரால் ஏமாற்றுவதை தடுத்தல் கடவுளை மறுத்தல் அல் ) ஆகிய குணங்களை உருவாக்குதல் (பெரியார், அண்ணா, கலைஞர்) ஆகியவையே உண்மையில் மேற்சொன்ன சாதனைகளை விட பெரியவை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...