Wednesday, January 17, 2018

எம்ஜிஆரின் நாட்டுப்ப‌ற்று.............

1962 ஆம் ஆண்டில்
சீனா இந்தியா மீது போர் தொடுத்த நேரம். பிரதமராக இருந்த நேரு ரேடியோவில் நாட்டுமக்களுக்கு உரையாற்றும்போது ' ராணுவத்தினருக்கு உதவுவதற்காக யுத்த நிதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார்.அதைக்கேட்டவுடன் எம்ஜிஆர் ரூ.75000 தருவதாக அறிவித்தார். நாட்டிலேயே யுத்த நிதி தருவதாக அறிவித்த முதல் மனிதர் எம்ஜிஆர் தான்.. அந்த காலத்தில் ரூ.75000 என்பது இன்றைய மதிப்பில் கோடியைத் தாண்டும்..! தனிநபராக அன்று இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே..
முதல் தவணையாக ரூ.25000 க்கான செக்கை எடுத்துக் கொண்டு அன்றைய முதல்வர் காமராஜரின் இல்லம் சென்றார் எம்ஜிஆர். ஆனால் வெளியூர் செல்வதற்காக காமராஜர் எழும்பூர் ரயில் நிலையம் சென்று விட்டதாக தகவல் கிடைத்தது..
வெளியூர் பயணம் முடிந்து காமராஜர் திரும்பும் வரை காத்திருக்காமல்...
எம்ஜிஆர் ரயில் நிலையம் நோக்கி விரைந்தார்..
எம்ஜிஆர் வந்திருப்பதை அறிந்ததும் எழும்பூர் ரயில் நிலையம் பரபரப்பானது.
காமராஜருக்கும் எம்ஜிஆரைக் கண்டதும் வியப்பு..
எம்ஜிஆர் ' நேருவின் வேண்டுகோளை ஏற்று யுத்த நிதியாக ரூ.75000 தர விரும்புகிறேன். முதல் தவணையாக ரூ. 25000 காசோலையைப் பெற்றுக் கொள்ளுங்கள் ' என்றார்.
பெரும் மகிழ்ச்சியுடன் செக்கைப் பெற்றுக்கொண்ட காமராஜர் எம்ஜிஆரின் கைகளைப் பிடித்து நன்றி சொல்லி விட்டு தன் உதவியாளரிடம் பத்திரிகைகளுக்கு உடனே இந்த தகவலைத் தரும்படி கூறினார். காரணம் எம்ஜிஆர் நிதி கொடுத்த தகவல் வெளியானால் பொது மக்கள் ஆர்வத்துடன் நிதி தர முன்வருவார்கள் என்பது காமராஜரின் எண்ணம்...
வெளியூர் பயணம் முடிந்து திரும்பிய காமராஜரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது ஒருவர் ' விளம்பரத்திற்காகத்தான் எம்ஜிஆர் நிதி தந்தாரா' என்று காமராஜரை கேட்க...வந்ததே கோபம் காமராஜருக்கு...
' என்னையா பேசறே நீ...அவ்ளோ பணத்தை நீ கொடுப்பியா..
உனக்கு மனசிருக்கா..? எப்படி முடியும்கிறேன்..? நேரு ரேடியோவில் பேசினதை கேட்ட உடனே முதல் ஆளா ஓடோடி வந்து ரயில்வே ஸ்டேசன்ல என்கிட்ட ரூ. 75000 தர்றேனு எம்ஜிஆர் சொல்றாரு...அந்த நல்ல மனசையும் தேசத்தின் மேல அவர் வச்சிருக்கிற பற்றையும் பாராட்டாம குறை சொல்றதுக்கு உனக்கு எப்படியா மனசு வந்திச்சு ' காமராஜரின் கோபமான பதிலில் எல்லோரும் ஆடிப்போய் விட்டனர்...கேள்வி கேட்ட நிருபருக்கு முகத்தில் ஈயாடவில்லை.!
எம்ஜிஆர் யுத்தநிதி அளித்த விசயம் பிரதமர் நேருவுக்கு தெரிய வந்தது...
பரபரப்பான யுத்த நெருக்கடியில் தன் உதவியாளர்களையோ..அல்லது அலுவலக ஊழியர்களையோ விட்டு நன்றிக் கடிதம் அனுப்பியிருக்கலாம்... ஆனால் நாட்டிலேயே முதல் குடிமகனாக தனிநபராக யாரும் தராத பெரும் தொகையை அள்ளித்தந்த வள்ளலுக்கு நேரு தானே நேரடியாக கையெழுத்திட்ட நன்றிக்கடிதத்தை அனுப்பினார்.
எம்ஜிஆரின் நாட்டுப் பற்றுக்கும் நேருவின் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தக் கடிதத்தை சென்னை எம்ஜிஆர் நினைவில்லத்தில் இன்றும் காணலாம்!Image may contain: 3 people, people smiling

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...