Friday, January 19, 2018

அரசுப்பேருந்து கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியது தமிழக அரசு...! நாளை முதல் அமலுக்கு வருகிறது...!



அரசு பேருந்துகளின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு பேருந்துகளின் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கட்டணங்கள் நாளை முதல் அமலுக்கு வருகின்றன.
மாநகர சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 3 இருந்து ரூ. 5 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர சாதாரண பேருந்தில் 20 ஆவது நிலைக்கு கட்டணம் ரூ. 12 லிருந்து ரூ.19 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
28 நிலைகள் கொண்ட தொலைவுக்கு பேருந்து கட்டணம் ரூ. 14 லிருந்து ரூ. 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வெளியூர் பேருந்துகளின் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரணப் பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ. 5 ஆக இருந்த கட்டணம் ரூ.6 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
30 கி.மீட்டர் வரை ரூ. 17 ஆக இருந்த விரைவு பேருந்து கட்டணம் ரூ. 24 ஆக உயருகிறது. அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீ.க்கு ரூ. 18 லிருந்து ரூ. 27 ஆக உயருகிறது.
அதி நவீன சொகுசு பேருந்தில் 30 கி.மீ.க்கு ரூ. 21 லிருந்து ரூ. 33 ஆக உயருகிறது. குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ.க்கு கட்டணம் ரூ.27 ல் இருந்து ரூ.42 ஆக உயர்த்தப்படுகிறது.
வோல்வோ பேருந்தில் 30 கி.மீ.க்கு ரூ. 33 ஆக இருந்த கட்டணம் ரூ. 51 ஆக உயர்த்தப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...