Monday, January 15, 2018

இறந்தவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுப்பது கிரிமினல் குற்றமா?

இறந்தவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுப்பது கிரிமினல் குற்றமா?

இறந்தவரின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுப்பது கிரிமினல் குற்றமா?
வங்கிக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர், இறந்து விட்டார். அவர் வைத்திருந்த
வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தா ல் அது சரியானதா? அல்ல‍து கிரிமினல் குற்ற‍மா?
“வங்கிக்கணக்கு (Bank Account) என்பது ஒவ்வொருவருக்கும் தனி ப்பட்டது. எனவே ஒருவரின் கணக்கிலிருந்து வேறு ஒருவர் பண த்தை எடுப்பது சட்டப்படி தவறு. எனவே, அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும். இவரின் குடும்பத்தில் அவரைத் தவிர்த்து வேறு வாரிசு யாராவது இருந்து, அவர்கள் பிரச்னை செய்தால், வங்கி யானது அவர் மீது நடவடிக்கை எடுக்கும். ஒருவேளை அவர்கள் இதைப் பெரிதுபடுத்த வேண்டாம். இனிவரும் காலத்தில் யாரும் இப்படி செய்யமாட்டோம் என எல்லா வாரிசுகளும் நாமினிகளும் எழுதி வங்கி கிளை மேலாளரிடம் (To Branch Manager) ஒப்படைத்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க மாட்டோம்.
பொதுவாக, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் (Bank Account Holder) இறந்தவுடன், அவரது நாமினி (Nominee) மற்றும் வாரிசுதாரர்கள் (Legal Heirs) அதை உடனடியாக வங்கிக்கு தெரிவிப்பது அவசியம். கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டதற்கான இறப்பு சான்றிதழ் (Death Certificate), ஏ.டி.எம். கார்டு (A.T.M. Card), பாஸ்புக் (Passbook), காசோலை புத்தகம் (Cheque Book) ஆகியவற்றுடன் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் ஒப்படைக்கவேண்டும் என்பதையும் குறிப்பி ட்டு கடிதம் எழுதி தரவேண்டும்.
அதாவது, வங்கிக் கணக்கில் நாமினி (Nominee) குறிப்பிடப்பட்டிருந்தா ல், அவருடைய பெயருக்கு மாற்றித்தருவார்கள்.
நாமினி பெயர் (Nominee Name)குறிப்பிடப்படாமல், ஒன்றுக்கும் மேற்ப ட்ட வாரிசுகள் (Legal Heirs) இருக்கும்போது அதில் யாரிடம் பணத்தை ஒப்படைக்க வே ண்டும் என்பதையும், அதற்கு மற்ற வாரிசுகள்(Other Legal Heirs) ஒப்புதல் தெரி வித்து கடிதம் எழுதி கையெழுத்திட்டு வங்கியில் ஒப்படைக்க வேண்டும்.
அதற்கு பிறகுதான் உரியவரிடத்தில் பணம் ஒப்படைக்கப்படும். மேலும், இந்த வாரிசுதாரர்களில் யாராவது நடைமுறையை சரி யாகப் பின்பற்றாமல் பணத்தை எடுப்பாரெனில், வங்கி அவர் மீது சட்டப்படி நடவடி க்கை எடுக்கும்.
இது முறைகேடாக பணத்தை கையாள்வதற்கு நிகரானது. என்றாலும், இதில் வங்கி நேரடியாக தலையிடாது. ஏனெனில், ஏடிஎம் கார்டு மற்றும் பின்நம்பர் (ATM Card Pin Number) ஒருவரின் தனிப்பட்ட விஷயம்.
இதுவே, வங்கிக் கணக்கு வைத்திருப்பவர் ஜாயின்ட் அக்கவு ன்ட் (Joint Account Holders (கணவன் – மனைவி, அப்பா-மகன் – (Husband & Wife, Father & Son)என்று வைத்திருந்தால், தனித்த னி ஏடிஎம் கார்டு (ATM Card) இருக்கும். அந்தசமயத்தில் ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்திருப்பவரில் ஒருவர் இறந்துவிட்டால், இன்னொருவர் ஏடி எம் கார்டு (ATM Card) மூலமாக பணத்தை எடுத்துக் கொ ள்ளலாம். ஏனெனில் இருவருக்கும் அப்பணம் உரிமையான து. என்றாலும் கணக்கு வைத்திருப்பவர்களில் ஒருவர் இறந்த செய்தியை வங்கிக்குத் தெரிவிப்பது முக்கியம்’’ என்றார்.
இதுபோன்ற சமயங்களில் ஏடிஎம், நெட் பேங்கிங் (ATM, Net Banking) உள்ளிட்ட அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் சட்டப்படியான செய ல்களை மேற்கொள்வதே சிறப்பாக இருக்கும்.
=> இந்திரா பத்மினி, பொதுமேலாளர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (நாணயம் விகடன் இதழுக்காக) – Indra Padmini, General Manager, Indian Overseas Bank for Nanaiyam Vikatan)

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...