சேலம் மாவட்டத்தில் கலெக்டராக ரோகிணி பதவி ஏற்ற நாள் முதலே பல்வேறு சிறப்பான செயல்களை செய்து வருகிறார். இவரது செயல்பாடுகள் தமிழகத்திற்கே முன்னோடியாக உள்ளது.
மேலும் சேலம் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டங்கள் எல்லாம் சில குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட நாளில் மட்டுமே நடக்கும்.

இந்த நிலையில் அந்த வளர்ச்சி பணிகள் தடையில்லால் நடக்க சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனனங்களின் பங்களிப்பு அவசியம். எனவே எனது சேலம் எனது பெருமை என்ற பெயரில் ஒரு வங்கி கணக்கை தொடங்கினார்.
அந்த வங்கி கணக்கில் பொதுமக்கள் உள்பட அனைவரும் பணம் செலுத்தி வருவதால் நிதி குவித்து வருகிறது. வரும் பணம் அனைத்தையும் வளர்ச்சி பணிகளுக்கே செலவிட்டு வருகிறார்.

மேலும் தமிழ் நாட்டிலேயே ஒரு மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இப்படி ஒரு திட்டத்தை கொண்டு வந்தது முதல்முறையாகும். இதன் மூலம் கலெக்டர் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
வாழ்த்துக்கள் .
தமிழ் மண்ணே வணக்கம்.
No comments:
Post a Comment