Wednesday, January 31, 2018

இந்தப் பதிவு யாரைப் பற்றியும் அல்ல. யாராவது உங்கள் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல.

எனக்கு தெரிந்த ஒருவர் சிறந்த ஆன்மீகவாதி. நித்திய பூஜையும், தினசரி கர்ம அனுஷ்டானங்களையும் முறையாக கடைபிடித்தவர். அவருக்கு 8 குழந்தைகள். தன்னுடைய எல்லா குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்து நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். நிறைய தான தர்மங்கள், அந்தணர்களுக்கு நிலம், (பூதானம்), கோதானம், இப்படி பல தானங்களை மனமுவந்து செய்து வந்தார். இறைவனும் அவருக்கு எந்த குறையும் வைக்காமல் நல்ல நிலையில் வைத்திருந்தார். தினமும் யோகா, காயத்ரி ஜெபம் செய்யத் தவறியதில்லை. தன்னுடைய வயதான காலத்தில் தன் பொறுப்புகளை தன் பிள்ளைகளிடம் ஒப்படைத்து ஆயாசமாக தன் பேரக்குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடி, நல்ல கதைகள், இராமாயணம் மகாபாரதம் போன்ற புராணங்கள், ஸ்லோகங்கள், நல்ல மந்திரங்கள் சொல்லிக் கொடுத்து அமைதியாக வாழ்ந்து வந்தார். முதுமையிலும் இளமை ததும்ப அவர் இருக்கக் காரணம் அவரது ஒழுக்கமான வாழ்க்கை, அவர் பூஜித்த தெய்வானுக்ரஹம் , காயத்ரி மந்திரம் என்று அனைவரும் செல்வார்கள்.
திடீரென்று ஒரு நாள் அவர் தன் மகனை அழைத்து, தனக்கு இறுதி காலம் வந்து விட்டதாகவும், இனிமேலும் இந்தப் பூமிக்கு பாரமாக நான் இருக்கக் கூடாது, எனவே எனது இறுதி காரியத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள் என்று சொன்னார். அனைவரும் அப்படி பேசாதீர்கள் என்று கண் கலங்கினர். அடுத்த 2 நாட்களுக்குள், மதியம் உணவருந்தி சாய்வு நாற்காலியில் சாய்ந்தார், கண்மூடி தூங்கினார், மீளாத்துயில் கொண்டார்.
துக்கம் விசாரிக்க வந்தவர்கள், ஒவ்வொருவரும் அவரது குணத்தை, பக்தி சிரத்தையை . தயாள குணத்தை, அடுத்தவரிடம் அவர் பழகும் மாண்பை சிலாகித்ததோடு, சே... என்ன அருமையான சாவு? சாப்பிட்டு கண்மூடியவர், படுக்கையில் விழவில்லை, நோய் நொடின்னு ஒரு நாள் படுத்ததில்லை, பழுத்த இலை தானாக உதிர்வது போல் இயற்கை மரணம் வாய்ப்பது பூர்வ ஜென்ம புண்ணியத்தோடு, இந்த ஜென்மத்திலும் நிறைய பண்ணியிருக்கார். அதனால் தான் அவருக்கு இப்படி ஒரு நல்ல சாவு கிடைத்தது, கொடுத்து வைத்த புண்ணிய ஆத்மா என வாயார சொன்னது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
மாறாக, இன்று சிலருக்கு நோய்வாய்ப்பட்டு, கேன்சர் கட்டி வந்து, தொண்டையில் ஓட்டை போட்டு, சிறுநீர் பையை கையில் தூக்கிக் கொண்டு அலைவது, பேச முடியாமல் போவது, பத்து தலைமுறைக்கு பணம் சேர்த்திருந்தாலும், அந்தப் பணத்தால் போன வாலிபம் திரும்ப வரல, போன பேச்சு திரும்ப வரல, போன எகத்தாளம் திரும்ப வரல, போன நடை திரும்ப வரல, போன பதவி திரும்ப வரல, எல்லாம் இருந்தும் எதுவுமே இல்ல. தான் விரும்பும் எமனும் கிட்ட வரல.
நரக வாழ்க்கை கிடையாது என்பவனுக்கு நரகம் என்றால் என்ன இங்கேயே அனுபவித்துப் பார் என்று சொல்லாமல் சொல்லி நடக்கிறது -
இதெல்லாம் பார்க்கும் போது,
தோன்றுகிறது
"கடவுள் இருக்கான்  "

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...