Saturday, January 20, 2018

பல்லியும் காவியும்....

பல்லி : கடவுள் இல்லை..! கடவுள் இல்லை..!! கடவுள் இல்லை..!!!
காவி : இதை ஏன் மூணு தடவை கூவற..? உங்கப்பன் கோர்ட்ல டவாலி வேலை பார்த்தப்ப உன்னை பெத்தானா...?
பல்லி : ஹீம்.., நான் பகுத்தறிவு நாத்திகன்...! நீ ஆத்திகன்..!! நான் கடவுள் இல்லைனு சொல்றேன். உன்னால முடிஞ்சா இருக்கார்னு சொல்லு பார்க்கலாம்...!!!
காவி : கடவுள் இருக்கார்.
பல்லி : என்னால கடவுள் இல்லைன்னு நிரூபிக்க முடியும்.
காவி : நிரூபி பார்க்கலாம்.
பல்லி : நீ இப்படி சொல்வேன்னு தெரியும். அதனால் தான் இந்த பிள்ளையார் சிலையை வாங்கிட்டு வந்தேன். இதை உன் முன்னாலேயே உடைச்சி கடவுள் இல்லைன்னு நிரூபிக்கிறேன்.
காவி : அப்படி நீ உடைச்சிட்டா, இந்த பிள்ளையாரை வச்சே கடவுள் இருக்கார்னு நான் நிரூபிக்கிறேன்.
( பல்லி பிள்ளையாரை உடைக்கிறது )
பல்லி : உடைச்சிட்டேன். இப்ப சொல்லு கடவுள் இருக்காரா...இல்லையா...?
காவி : உடைச்சிட்டியா...? எதை உடைச்ச...?
பல்லி : பிள்ளையாரை உடைச்சேனே பார்க்கலையா...?
காவி : சத்தமா சொல்லு, எதை உடைச்ச...?
பல்லி : ( சத்தமாக ) பிள்ளையாரை உடைச்சேன்.
காவி : மறுபடியும் ஒரு தடவை தெளிவா சொல்லு, எதை உடைச்ச..?
பல்லி : நீ என்ன செவிடா...? பி...ள்..ளை..யா..ரை உடைச்சேன்.
காவி : பார்த்தியா நீயே பிள்ளையாரை உடைச்சேன்னு தான் சொல்ற..! கல்லை உடைச்சேன்னு சொல்லலியே...( ? ) அப்ப பிள்ளையார் இருக்கார்ல. அதனால் கடவுள் இருக்கார்னு நீயே ஒத்துக்கிட்ட பார்.
பல்லி : ஏய், என்னைய ஏமாத்தறியா...? பத்து நிமிசம் வெயிட் பன்னு கடவுள் இல்லைன்னு இன்னொரு பிள்ளையார்...தப்பு...தப்பு...கல்லை வாங்கிட்டு வந்து உடைச்சி கடவுள் இல்லன்னு ப்ரூப் பன்றேன்.
காவி : சரி, வெயிட் பன்றேன். ஒரு கல் வாங்கிட்டு வா...!
( பத்து நிமிடங்களுக்கு பிறகு )
பல்லி : இதோ பார் இது என்ன..?
காவி : நீயே சொல்லு !
பல்லி : இது ஒரு கல்.
காவி : ஆமா, உடைச்சி நிரூபி.
பல்லி பிள்ளையார் சிலையை உடைக்கிறது.
பல்லி : ( உஷாராக ) கல்லை உடைச்சிட்டேன். இப்பவாவது கடவுள் இல்லைன்னு நம்பறியா...?
காவி : முடியாது.
பல்லி : ஏன் முடியாது...? நான் தான் கல்லை உடைச்சிட்டேனே..!
காவி : எதை உடைச்ச...?
பல்லி : கல்லை உடைச்சேன்.
காவி : மறுபடியும் சத்தமா சொல்லு.
பல்லி : ( சத்தமாக ) கல்லை உடைச்சேன்.
காவி : நீ என்ன லூசா...? கல்லை உடைச்சேன்னு நீயே சொல்லுற. அப்புறம் ஏன் சம்பந்தமில்லாம பிள்ளையாரை உடைச்ச மாதிரியே பினாத்தற...?
பல்லி : போடா காவி தீவிரவாதி. உன்கிட்ட பேசறதுக்கு பேசாம நாலு கழுதைகள்ட்ட பகுத்தறிவை பேசி புரிய வைச்சிடலாம்.
காவி : அப்போ, கழுதைங்களால மட்டும் தான் உங்க பகுத்தறிவை புரிஞ்சிக்க முடியும்னு சொல்லுங்க...!
பல்லி : ஐயா, சொறியாரே..., இந்த காவிகளிடம் இருந்து எங்களை காப்பாத்துங்கய்யா...

இந்த கதை கொஞ்சம் கருத்தாகவும் கமொடியகவும் இருந்ததாள் இங்கு பதிவிட்டேன்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...