Saturday, June 1, 2019

இதை வளரவிட்டால் தமிழகத்திற்கும் பேராபத்து!

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங் கூட்டணி அதிக இடங்கள் பெற்றதை வைத்து அங்கு ஈவிஎம் மோசடியால் பாஜக வென்றது என பல பதிவுகள் வருகின்றது.
* கர்நாடகாவில் மத்திய ஆட்சிக்கு மோடி என்பதில் மக்கள் தெளிவாகவே இருந்தனர். நான் அங்கு இருப்பதால் இதை கண்கூடாக பார்த்துவிட்டு கூறுகிறேன்.
* 1980 ல் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங் கூட்டணி வென்றது. உடனே அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது அதிமுகவே வென்றது. மத்திய ஆட்சிக்கு இந்திரா மாநிலத்திற்கு எம்ஜிஆர் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருந்தனர்.
* எம்ஜிஆர் காலத்தில் அதிமுக சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவே வென்றது. அதன்காரணமாக தேர்தல் நிறுத்தப்படது என்பதும் வரலாறு
* 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு வந்த நாடாளுமன்றதேர்தலில் ராஜீவ் ஜெயா கூட்டணி 39 தொகுதியையும் கைபற்றியது. மாநிலத்திற்கு கலைஞர் மத்திய ஆட்சிக்கு ராஜீவ் என மக்கள் அப்போதே தெளிவாக வாக்களித்திருந்தனர்.
கடந்த இருபது வருடமாக மாற்றி மாற்றி ஒரே போல முடிவுகளை தமிழகம் பார்த்துவருதால்தான் இது போன்ற குழப்பம் வருகிறது. 80களில் தமிழகத்தில் நடந்தது தான் இப்போது மற்றமாநிலங்களில் நடக்கிறது.
ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களே தோல்வியை ஒப்புகொண்டுள்ள போது இதுபோன்ற கருத்துருவாக்கம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும்.
இங்கே ஆதாரம் இல்லாமல் பேசுவதை விடுத்து தலைவர்கள் மூலம் வழக்கு தொடுப்பது நிருபிப்பது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவது நலம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...