Saturday, June 1, 2019

தில்லு முல்லு க்கு சொந்தக்காரர்கள்..

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை' - திமுக 2.0
தமிழிசை Vs நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் பிராமணிய சித்தாந்தம் இருக்கிறது.
வைகோ Vs முரசொலி மாறன் விவகாரத்திலுமா பிராமணியம் இருக்கிறது?!
1989 - நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுக '0' வாங்குகிறது. ஆனாலும் திமுக அங்கம் வகித்த தேசிய முன்னனி நாடு முழுவதும் வெற்றி பெற்று வி.பி.சிங் பிரதமராகிறார்.
தமிழ்நாட்டில் தோற்றுப்போனாலும் திமுகவிற்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுக்க விரும்புகிறார் வி.பி.சிங். அதிலும் குறிப்பாக திமுகவின் ராஜ்யசபா எம்.பி வைகோவிற்கு அமைச்சர் பதவியை கொடுக்க விரும்புகிறார்.
ஆனால் கதையில் திடீர் திருப்பமாக திமுகவின் இன்னொரு ராஜ்யசபா எம்.பியும், ஆர்ட்டிஸ்டின் மருமகனுமான முரசொலி மாறன் மத்திய அமைச்சராகிறார்.
மாறனுக்கும் வைகோவிற்கும் என்ன வேறுபாடு? இங்கு பிராமணிய சித்தாந்தம் உள்ளதா?
ஒன்றும் கிடையாது.
வைகோவைவிட மாறனிடம் கூடுதலாக இருக்கும் தகுதி தலைவரின் சொந்தக்காரன் என்பது மட்டும்தான்.
வரலாறை மறைத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் சமூகநீதி போராளியாகிவிட முடியாது உடன்பிறப்பே!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...