Sunday, June 2, 2019

சபாநாயகர் பதவி யாருக்கு?

லோக்சபா சபாநாயகர் பதவி, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அது யாருக்கு கிடைக்கும் என்பதில், பா.ஜ., மூத்த எம்.பி.,க்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
புதுடில்லி , சபாநாயகர், பதவி, மூத்த, எம்.பி., அமளி, சுமித்ரா மகாராஜன்


விதிமுறை ஆளும் கட்சியில் உள்ள அனுபவம் வாய்ந்த, மூத்த, எம்.பி., சபாநாயக ராக நியமிக்கப்படுவது வழக்கம். எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு, அமளிகளை சமாளித்து, சபையை நடத்தும் திறமை, பார்லிமென்ட் விதிமுறைகள் அனைத்தையும் கரைத்து குடித்திருக்கும் அனுபவம் உடையவர், இந்த பதவிக்கு தேர்வு செய்யப்படுவார். 

கடந்த லோக்சபாவில் சபாநாயகராக இருந்த, சுமித்ரா மகாஜன், நீண்ட காலம் லோக்சபாவில், எம்.பி.,யாக இருந்த அனுபவம் உள்ளவர். பார்லிமென்ட் நடை முறைகள் அவருக்கு நன்கு தெரியும்.அதனால், லோக்சபாவை திறமையாக கையாண்டார். சமீபத்தில், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், வயது மூப்பு காரண மாக, சுமித்ரா மகாஜன் போட்டியிட வில்லை.


இந்நிலையில், லோக்சபா சபாநாயகராக யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ., - எம்.பி.,க் களிடம் ஏற்பட்டுள்ளது. சபையை திறமையாக நடத்துவது தவிர, வேறு சில முக்கியமான அம்சங்களும், சபாநாயகருக்கு தேவைப்படுகின்றன. சர்வதேச நாடுகளின், பார்லிமென்ட் தலைவர்கள் அல்லது சபாநாயகர்கள் பங்கேற்கும் மாநாடுகள், அடிக்கடி நடக்கும். இதில், நம் நாட்டின் சார்பில் பங்கேற்கும் சபாநாயகர், நம் அரசின் கொள்கைகளை பற்றி, நன்கு அறிந்தவராக இருக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுஉள்ளது. 


மவுனம் 


இந்தாண்டு மட்டும், இதுபோல், நான்கு முக்கிய மான மாநாடுகள் நடக்கவுள்ளன. எனவே, சபாநாயகரை தேர்வு செய்யும் விஷயத்தில், அரசு தரப்பு, மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பா.ஜ., மூத்த தலைவரான, மேனகாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டாலும், பா.ஜ., மேலிட தலைவர்கள், இந்த விஷயத்தில் மவுனம் காக்கின்றனர்.


லோக்சபாவில், எதிர்க்கட்சிகளுக்கு போதிய எண்ணிக்கை இல்லை. ஆளும், தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., மட்டுமே, 300க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது. எனவே, எதிர்க்கட்சிகள் சார்பில், சபாநாயகர் தேர்தலில் போட்டியிட, வேட்பாளரை நிறுத்துவதை தவிர்க்க திட்ட மிடப்பட்டுள்ளது. எனவே, ஆளும் கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர், போட்டியின்றி, சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...