
வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி… ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி’ என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச் சொல்கிறது.

மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரிய ஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, பலர் மொட்டை மாடிக்கு செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக் கூடாதென சன்ஸ்கிரீன் லோஷனைப் பூசிக்கொள்கிறார்கள்.

இதன் விளைவாக இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து அதாவ து வெயிலில் இருந்து கிடைக்கக்கூடிய விட்டமின் டி குறைபாடு ஏற்படுகிறது. அதனால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டி, என்னதான் ஆரோக்கியமாக வளர்த்தாலும் கூட பின்நாட்களில் அக்குழந்தைகளின் கால்கள் வளைந்த நிலையில் அமைந்து விடுமாம். இந்தப் பாதிப்பை `ரிக்கட்ஸ்’ என்பர்.

ஆகவே குழந்தைகளை காலைநேர வெயிலிலிலோ அல்லது மாலை நேர வெயிலிலோ சிறிதுநேரம் விளையாட விடுங்கள். அப்படி விளையாடும் போது குழந்தைக்ளுக்கு தானாகவே வெயிலில் இருக்கும் வைட்டமின்-D, கிடைக்கப்பெறுபவர். இதனால் மேற்சொன்ன பாதிப்புக்ளில் இருந்து உங்கள் குழந்தைகளை காப்பாற்ற முடியும். நீங்களும் கூட உங்க குழந்தைகளோடு வெயிலில் விளையாடுங்கள் உங்களுக்கும் ஆரோக்கியமே.
No comments:
Post a Comment