கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலில், மிக குறைந்த தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனால், லோக்சபாவில், பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து, அந்த கட்சிக்கு கிடைக்கவில்லை. லோக்சபா, காங்., தலைவராக, கர்நாடகாவைச் சேர்ந்த, மல்லிகார்ஜுன கார்கே, தேர்வு செய்யப்பட்டார்.
இந்த தேர்தலிலும், காங்கிரசால், எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியவில்லை. இந்த தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே தோல்வி அடைந்தார். இதையடுத்து, புதிய லோக்சபாவின் காங்கிரஸ் தலைவராக, யார் தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பதவியை ஏற்க, காங்., தலைவர் ராகுலுக்கு விருப்பமில்லை. மணீஷ் திவாரி, சசி தரூர், கேரள, எம்.பி.,யான, கே.சுரேஷ் ஆகியோரில், யாராவது ஒருவர், காங்., லோக்சபா தலைவராக தேர்வு செய்யப்படுவர் என, தெரிகிறது.
சசி தரூர், சுரேஷ் ஆகியோருக்கு, ஹிந்தியில் சரளமாக பேச தெரியாது என்பதால், திவாரிக்கே, அதிக வாய்ப்பிருப்பதாக, காங்., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment