Friday, November 11, 2022

பணம் #என்ற #மாயப்பேயை #ஓட்ட #மனதை #பூசாரியாய் #மாற்று...

 பணம் இருந்தால் போதும் நம்மை அறியாமல் நமக்கு ஒரு தெம்பு வந்து விடும்.

எதையும் எதிர் கொள்ள தயங்காத மனம் வந்து விடும். உண்மை தான்.
கையில் பணம் இல்லை யென்றால் மனதில் துணிவு என்பதே காணாமல் போய் விடும். நம்மை அறியாது பயம் வந்து சேர்ந்து விடும்.
இது நிஜம் தானா?.
இதை நிஜம் என்றே நானும் நீண்ட காலம் நம்பி வந்தேன்.
என் அனுபவத்தில் நான் அப்படித் தான் உணர்ந்தேன்.
நம் அனுபவத்தில் அறிவது உண்மை யாகத் தானே இருக்க முடியும்.
காணல் நீர் உண்மை போலவே இருக்கிறது. அது பொய் என்பது நமக்கு நன்கு தெரியும்.
கண் முன் தண்ணீர் இருப்பது போல தோன்றினாலும்
அது உண்மை அல்ல பொய்யான தோற்றம் என்று நாம் அதை கடந்து செல்கிறோம்.
வாழ்க்கையிலும் இப்படித் தான் நமக்கு பலவிதமான அனுபவங்கள்.
அந்த அனுபவங்கள் மூலம் நமக்கு பல்வேறு விதமான நம்பிக்கைகள்.
நாம் நமக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் நம்பிக்கைகளை வைத்து எதையும் எடை போடுகிறோம்.
இது இப்படித் தான். எனக்கு தெரியாதா? என்று எண்ணுகிறோம்.
அப்படித் தான் பணம் இருந்தால் நம்மால் எதையும் சாதிக்க முடியும். எதையும் எதிர் கொள்ள முடியும்.
பணம் பதவி அதிகாரம் இருந்தால் போதும்.அவர்களே உயர்ந்தவர்கள் என்றும் எண்ணுகிறோம்.
பணம் இருப்பவர்கள் துன்பப் படுவதையும் பணம் இல்லாதவர்கள் நன்கு சந்தோசமாக இருப்பதையும் நம் கண் முன்னால் காணத்தான் செய்கிறோம்.
நாம் எண்ணுவதெல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.
நாம் கண்ணால் காண்பதுவும் பொய்யாக இருக்கலாம்.
வாழ்க்கை என்பதே ஒரு கானல் நீரை போன்றது தான்.
இருக்கு ஆனா இல்லை என்பது போல் ஒரு மாயம். அதுவே மாயை.
புத்தரில் இருந்து விக்டர் ப்ராங்கல் வரை எல்லோருமே நம் மனம் தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி சென்று விட்டார்கள்
நம் மகிழ்வுக்கும் துயரத்திற்கும் நம் மனதில் தோன்றும் உணர்வுகளே காரணம் என்று நமக்கும் தெரிகிறது.
நாமும் மகிழ்வாக இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம். ஆனால் துயரம் நம்மை தொடர்ந்து துரத்திக் கொண்டே வருவது தானே நிஜமாக இருக்கிறது.
"அப்பாடா.... ஒரு வழியா முடிஞ்சது!என்று அண்ணனின் 13 நாள் காரியம் முடிந்து சுபஸ்ரீ செய்து முடிந்து சென்னையிலிருந்து
திருச்சி திரும்பி.....
பெருமூச்சு விடுவதற்குள் அடுத்த துயரம் வாசல் வந்து காலிங் பெல்லை அழுத்தும் போது என்ன செய்வது?.
இங்கு பால்ய நண்பனின் துயரத்தில் துணை இருக்க
இதோ சமயபுரம் ஓடுகிறேன்....
பணம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி.பதவி அதிகாரம் செல்வாக்கு எல்லாம் இருந்தாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது.
இருந்தாலும் நாம் இதெல்லாம் இருந்தால் எதையும் சமாளித்து விட முடியும் என்று நம்பிக் கொண்டே இருக்கிறோம்.
என்னிடம் பணம் இல்லை. பதவி இல்லை. செல்வாக்கும் இல்லை. எந்த அதிகாரமும் இல்லாத வெறும் டம்மி பீஸ் தான்.
ஆனாலும் என்னிடத்தில் பயம் இல்லை.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்கின்ற தைரியம் உள்ளது.
விக்ரம் படத்தில் கமல் சொல்வது போல "பாத்துக்கலாம் வா!"
டைப் தில் வந்துவிடுகிறது.
இது எப்படி நிகழ்ந்தது என்பது எனக்கு தெரியவில்லை.
படிக்கும் போது பிராக்டிக்கல் கிளாஸ் லேட்டானால் சில சமயம் தனியாக பஸ் ஸ்டாப்பில் நிற்க வேண்டி வரும்.
அப்போது ஏதேனும் அழகிய பெண் வந்து விட்டால் கமல் ரஜினியாய் மாறி கல்லூரியையே மறந்துவிடுவேன் கை காலெல்லாம் பரபரக்கும்
அன்று கல்லூரி பெண்கள் எல்லோரும் என் கண்களுக்கு அழகிகளாகவே தோன்றினார்கள்.
அப்படி இருந்த நான் எப்படி இன்று எதற்கும் ஆசைப்படாதவனாக மாறிப் போனேன் என்று நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது.
வயது காரணமல்ல அப்டி நினைத்தால் அது தவறு மனமே மாயம் செய்கிறது
எனது ஆர்வமான வாசிப்பில் நான் தொடர்ந்து ஈடுபட்டதும்
அதன் மூலம் எனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை பற்றி அதிகம் படித்து தெரிந்து கொண்டதும் தான் காரணம்.
எனது சுதர்மத்தில் இருந்து இன்று வரைவிலகாமல் நான் தொடர்ந்து அதிலேயே செல்வது தான் காரணம்.
அதுவே என்னை மெல்ல மெல்ல மாற்றியது என்று நான் அறிந்து கொண்டேன்.
நான் யார் என்பதையும் எனது இயல்பு என்ன என்பதனையும் முதலில் அறிந்து கொண்டேன்.
நான் எப்படி இருக்கிறேனோ அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.
அதற்காக வருந்தவோ புலம்பவோ இல்லை.
அதனை எதிர்த்து போராடவும் இல்லை. முதலில் போராடி தோற்றுப் போனேன்.
"முதுகெலும்பில்லாத மூடர்களுடன் மோதுவது காணல்நீரை கை நிறைய்ய அள்ளிக் குடிப்பது போன்றது!"
என உணர்ந்து போராடுவதை கைவிட்டு விட்டேன்.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என்று அந்த திருவரங்கத்து மாயவனின் திருவடியில் சரணடைந்து விட்டேன்.
அவன் அடித்தாலும் சரி உதைத்தாலும் சரி கூப்பிய கரம் கூப்பியது தான்.
அவன் என்ன மாயம் செய்தான் என்பது எனக்கு தெரியாது.
ஆனால் என்னுள் மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது மட்டும் நிஜம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...