எம்.ஜி.ஆர். படங்களில் நடிக்க நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆர்வம் காட்டுவார்கள். காரணம், மற்ற படங்களில் கிடைப்பதை விட, அவர் நடிக்கும் படங்களில் கூடுதலான சம்பளம் கிடைக்கும். அதோடு, பேசியபடி சக கலைஞர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுவிட்டதா என்பதை எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள்வார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, November 16, 2022
எம்.ஜி.ஆர். உறுதிப்படுத்திக் கொள்வார்.
எம்ஜிஆர் நடித்த ஒரு படத்தில் நடிக்க வி.எஸ்.ராகவனுக்கு குறிப்பிட்ட தொகை சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு தயாரிப்பு தரப்பில் இருந்து வி.எஸ்.ராகவனுக்கு கோரிக்கை விடப்பட்டது. அவருக்கோ தர்மசங்கடம். தனது நிலையை கவிஞர் வாலியிடம் கூறினார். உடனே, வாலி ஒரு யோசனை கூறினார்.
அந்த யோசனையை வி.எஸ்.ராகவன் செயல்படுத்தினார். வாலியின் யோச னைப்படி தயாரிப்பு தரப்பிடம் வி.எஸ்.ராகவன் ஏவிய அஸ்திரம் இதுதான். ‘‘என் சம்பளம் எம்.ஜி.ஆரின் ஒப்புதலோடு முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முடிவு செய்த தொகையைவிட குறைவாக நான் வாங்கிக் கொண்டால் அவர் வருத்தப்படுவார். அவருக்கு நான் என்ன பதில் சொல்வது?’’ என்றார். மறுபேச்சு இல்லாமல் ஏற்கெனவே பேசிய சம்பளமே அவருக்கு கிடைத்தது.
வி.எஸ்.ராகவனின் தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டிருந்தார். தாயாரை கவனித்துக் கொள்வதற்காக மருத்துவமனையில் வி.எஸ்.ராகவன் இருந்தபோதுதான் இயல், இசை, நாடக மன்றத்துக்கு கவுரவச் செயலாளராக அவரை எம்.ஜி.ஆர். நியமித்தார்.அந்த சமயத்தில் எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஒருநாள் திடீரென வி.எஸ்.ராகவன் வீட்டுக்கு வந்து அவரிடம் ஒரு பெரும் தொகையை கொடுத்து, ‘‘உங்கள் தாயாரின் மருத்துவ செலவுக்காக எம்.ஜி.ஆர். கொடுக்கச் சொன்னார்’’ என்றார். அதை ஏற்க மறுத்த வி.எஸ்.ராகவன், ‘‘இந்தப் பணத்துக்கு இப்போது அவசியம் இல்லை. என்னோட நன்றியைத் தெரிவித்து பணத்தை திருப்பி அவர்கிட்ட கொடுத்துடுங்க’’ என்றார்.
‘நாம் கொடுக்கும் பணத்தை மறுக்கிறாரே? நம்மை வி.எஸ்.ராகவன் நெருக்கமாக நினைக்கவில்லையோ? ’ என்று எம்.ஜி.ஆருக்கு அவர் மீது வருத்தம். அரசின் இயல், இசை, நாடக மன்றத்தின் செயலாளர் என்ற முறையில் முதல்வர் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வி.எஸ்.ராகவன் தனது நிலையை விளக்கினார்.
‘‘உங்களுக்குத் தெரியாதது இல்லை. என் தாயாரின் மருத்துவ செலவுக்கு நான் கேட்காமலேயே பெரிய தொகையை கொடுத்து அனுப்பினீர்கள். என் தாயாருக்கு உடல்நிலை சரியாகிவிட்டது. வீட்டுக்கு வந்துவிட்டார். இனி மருத்துவ செலவு கிடையாது. அப் படியிருக்கும்போது, தாயாரின் மருத்துவ செலவுக்காக என்று நீங்கள் அனுப்பிய பணத்தை நான் ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது என்பதால்தான் திருப்பி அனுப்பினேன்’’ என்று வி.எஸ். ராகவன் கூறினார்.
அவரது விளக்கத்தை பொறுமை யாகக் கேட்ட எம்.ஜி.ஆர்., அவரை மனதார பாராட்டினார். உணர்ச்சிவசப்பட்ட ராகவன், ‘‘எனக்கு ஏதாவது கஷ்டம் என்றால் உங்களிடம்தான் வருவேன். வேறு யாரிடம் போவேன்?’’ என்றதும் எம்.ஜி.ஆர் அவரை ஆதரவாக அணைத்துக் கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment