Tuesday, November 15, 2022

அஞ்சலி!

 தெலுங்கு நடிகர் கிருஷ்ணா இறந்துவிட்டார். பாலிவுட்டுக்கு அடுத்ததாக இந்தியாவின் மிகப்பெரிய சினிமா சந்தை டோலிவுட் .

இத்தகு பெருமையுடைய தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுள் ஒருவர்தான் கிருஷ்ணா.
என்.டி.ஆர், கிருஷ்ணம் ராஜூ போன்றோர் கோலோச்சிய காலத்தில், இளம் நடிகராக நுழைந்தார் கிருஷ்ணா.
நம்மூர் ஜெமினிகணேசன், முத்துராமன், ஜெய்சங்கர் போன்றோரின் சமகாலத்தவர். 70, 80, 90 என மூன்று தசாப்தங்களை, தெலுங்கு பாக்ஸ் ஆஃபீஸை, கிருஷ்ணா ஆண்டார் என்றே சொல்ல வேண்டும்.
ஜெய்சங்கர் போல கவ்பாய் மற்றும் ஜேம்ஸ்பாண்ட் வகை படங்களில்
நடித்து தனக்கென தனி இடம் பிடித்தார்.
புதிய தொழில் நுட்பங்களை தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகப்படுத்தினார் கிருஷ்ணா. இவரது 'அல்லூரி சீதாராமராஜு' படம்தான் தெலுங்கின் முதல் (1974) சினிமாஸ்கோப் படம். 1982 இல் ஈஸ்ட்மேன் வண்ண சினிமாவை (ஈநாடு) எடுத்தவரும் கிருஷ்ணாதான்.
முதல் 70 எம்.எம் தெலுங்கு படமான சிம்ஹசனம் கிருஷ்ணா நடித்ததுதான். 1995 இல் இவரது வீர லெவரா திரைப்படத்தில்தான் dts முதன்முதறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
அதுபோல், துப்பறியும் ஜானரில்,
(Spy genre thriller) உருவான தெலுங்கு படங்களான குடாச்சாரி 116 (1966), ஜேம்ஸ் பாண்ட் 777 (1971), ஏஜென்ட் கோபி (1978), ரகசிய குடாச்சாரி (1981) மற்றும் குடாச்சாரி 117 (1989) போன்றவை கிருஷ்ணா நடிப்பில் உருவானவையே.
25 திரைப்படங்களில் இரட்டை வேடங்களிலும், 7 முறை மூன்று வேடங்களும் ஏற்றும் நடித்தார்.
இவரது மொசகல்லகி ஒரு பேன் வேர்ல்ட் படமாக அமைந்து பல நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்பட்டது.
விஜயநிர்மலா, ஜெயப்பிரதா,ஸ்ரீதேவி போன்ற நாயகியர் அதிக படங்களில் இவரோடு இணைந்து நடித்தார்கள்.
(என்டிஆர், சிவாஜியோடு ஸ்ரீதேவி நடனம் ஆடியபோது என் இதயத்திலிருந்து ஸ்ரீதேவியை அப்புறப்படுத்தியிருந்தேன்) .
ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த கட்டமனேனி சிவ ராம கிருஷ்ண மூர்த்தி என்கிற இளைஞன், ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவானதற்குப் பின்னால் நிறைய ஏற்ற இறக்கங்கள், கடினமான தருணங்கள் இருந்திருக்கின்றன. அவற்றை தன் புதுமை விழைவால் கடந்து, 350 படங்கள் வரை நடித்தார் கிருஷ்ணா.
காங்கிரஸில் இணைந்து எம்.பி
ஆகவும் வென்றார்.
தந்தையின் புகழில் குளிர் காயாமல்,
தனி அடையாளத்தோடு, இன்று டோலிவுட்டின் புதிய சூப்பர் ஸ்டாராக, இளைஞர்களின் மனம் கவர்ந்திருக்கிறார் அவரது மகன் மகேஷ் பாபு.
கிருஷ்ணா தன் 79 வயதில் மறைந்துவிட்டார். வாழ்வதைப் போலவே அழகாக சாவதும்
ஒரு கலைதான். சினிமாவை வாழ்வாகக் கொண்டவர்தான் கிருஷ்ணா. ஆனாலும், நிச்சயமாக
இது நடிப்பாக இருக்காது!
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...