Sunday, November 13, 2022

செய்யக்கூடாதை செய்வது சொல்லக்கூடாததை சொல்லுவது. இதுவே திராவிட மாடல்.

 கடந்த சில நாட்களுக்கு முன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

"கல்லூரி விழாவில் கவர்னர் அரசியல் பேசுவது சரியல்ல" என்று பேசியிருந்தார்.
இன்று காந்தி கிராம பல்கலை கழக விழாவில் பிரதமர் மோடி பேசுவதற்கு முன்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அந்த உரையில் அரசியல் கலப்பு இல்லாமல் இல்லை.
தமிழக முதல்வர் ஸ்டாலின் உரையும், நமது கேள்விகளும் :
முதல்வர் ஸ்டாலின் :
காந்தி தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்து இட்டவர். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர்.
வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியைக் கற்க வேண்டும், அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள்.
நாம் :
உண்மை தான். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக, வட இந்தியர் ஒரு தென்னிந்திய மொழியான தமிழை கற்க வேண்டும் என்றார் காந்தி.
அதோடு
இந்தியாவை வலிமையான தேசமாக ஒருங்கிணைக்கும் விதமாக தென்னிந்திய மக்கள் அனைவரும் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளுடன் 1918 ல் தக்ஷிண பாரத இந்தி பிரச்சார சபையை ஆரம்பித்து, தனது மகன் தேவதாஸ் காந்தியை முதல் பிரச்சாரகராக நியமித்து சிறப்பாக நடத்தி வந்ததோடு,
அவர் உயிரிழக்கும் வரை நிர்வாக தலைவராக தொடர்ந்தார்.
அது மட்டுமல்ல உங்களது திராவிட மாடல் வழிகாட்டியான பெரியார் அவர்கள்
தமிழகத்தில் இந்தி பிரச்சார சபை கல்லூரிக்காக தனது இல்லத்தை 1927 ல் தானமாக வழங்கி ஆதரவு தந்தார்.
ஆனால் தங்களது கட்சி, இந்தி எதிர்ப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து ஆட்சியை பிடித்து விட்டது. இன்று வரை நீங்களும் அதே எதிர்ப்பினை தொடர்கிறீர்கள்.
காந்தி வட இந்தியர்களை தமிழ் கற்றுக்கொள்ள சொன்னார் என்று பெருமை கொள்ளும் நீங்கள்,
அதே காந்தி தென்மாநில மக்கள் இந்தி கற்று கொள்ள வேண்டும் என்று சொன்னார் என்பதனை மறைத்துவிட்டு,
இந்தி திணிப்பு என்று அரசியல் செய்வது ஏன்?
உண்மையில் உங்களுக்கு காந்தியின் 'ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்க இந்தி அவசியம்' என்ற கொள்கை மீது நம்பிக்கை இல்லையா?
முதல்வர் ஸ்டாலின் :
இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண்.
நாம் :
உண்மை தான். ஆனால் இது உங்கள் விஷயத்தில் தலைகீழாக நடந்து உள்ளதே.
முதல்வர் ஸ்டாலின் :
அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தபோது கல்வி மாநிலப் பட்டியலில் தான் இருந்தது. அவசர நிலை காலத்தின்போது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. பிரதமர், கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாம் :
உண்மை தான். ஆனால் அந்த நிகழ்வுக்கு பிறகு பல்வேறு காலகட்டங்களில் திமுக கூட்டணி கட்சியாக
மத்திய அரசில் பங்கேற்று, அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த போது
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற நெருக்குதல் தராதது ஏன்?
கிட்டத்தட்ட திமுக இருபதாண்டு காலம் மத்திய அரசு கூட்டணியாக இடம்பெற்றிருந்தது. இந்த காலம் உங்களுக்கு காரியமாற்ற போதவில்லையா?
முதல்வர் ஸ்டாலின் :
உண்மை, ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் ஆகியைவகள்தான் காந்தியத்தின் அடிப்படைகள்.
இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள்! இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.
நாம் :
இந்த வரிகளை உளமார படித்திருந்தால் ...
சரி. நமக்கு சம்பந்தம் இல்லாத விஷயம், அடுத்த கருத்தினை பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலின் :
காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர்களாக, பரப்புரை செய்பவர்களாக, நடந்து காட்டுபவர்களாக இளைய சமுதாயம், மாணவர்கள் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனை நீங்கள் சாதித்துக் காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்.
நாம் :
உங்களது எதிர்பார்ப்பு நியாயமானது தான்.
ஆனால்
காந்தி ஜியின் முக்கியமான கொள்கை 'மது விலக்கு'. நீங்கள் அதை பற்றி பேசாமல் காந்தியின் கொள்கைகள் குறித்து பேச முடியாது..
ஆனால் தமிழக அரசு மதுவை இலக்கு நிர்ணயம் செய்து விற்கிறது.
ஒரு மாதத்திற்கு தமிழர்கள் குடித்து காலி செய்வது 51 கோடி பாட்டில்கள் மது.
'மது அருந்தி விட்டு பள்ளியில் ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்'
என்று டிஜிபி எச்சரிக்கை விடுக்கிறார்.
மாணவிகள் பள்ளி சீருடையில் மது அருந்தும் பல நிகழ்வுகள் தினசரிகளில் வெளியாகிய வண்ணம் உள்ளது.
பல்வேறு இடங்களில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைதாகி உள்ள அவலங்கள் நடந்து வருகிறது.
இப்படி போதையில் தடுமாறி வரும் மாணவர்களிடம் பொறுப்பினை சுமத்தி விட்டு,
அரசாங்கம் தனது கடமையை கைகழுவி ஒதுங்கி கொண்டு
மாணவர்களிடம் காந்தி சிந்தனையை எதிர்பார்ப்பது நியாயமா?
மது விற்பனை கடந்த ஆண்டு 35,000 கோடிக்கு மேல்
ஆனால்
மதுவிற்கு எதிரான பிரச்சாரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை வெறும் நாலரை கோடி.
காந்திய சிந்தனை எப்படி பரவும்?
"இதையெல்லாம் முன்னமே அறிந்து தான்,
ரூபாய் நோட்டுகளில் காந்தி சிரிக்கின்றாரோ என்னவோ?""

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...