Tuesday, November 15, 2022

“நமக்கு கூட்டாளிங்களை விட்டுக்கொடுக்க முடியாது. அவங்க தயவில வந்தவங்க இருக்கறவங்க. கண்டும் காணாத போங்கப்பா”

 சென்னை ராயபுரம் கல்மண்டபம் அருகே நேற்று முன்தினம் இரவு போக்குவரத்து போலீஸார் வாகனச்சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களை போலீஸார் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் தட்டி விட்டு தப்பிச் சென்றனர்.

அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பை ஒன்று அறுந்து கீழே விழுந்தது.அந்தப் பையில் ஒரு நோட்டு இருந்தது. அந்த நோட்டில் இஸ்லாமிய மொழியில் அந்த நோட்டு முழுவதும் வெடிகுண்டுகளை எப்படி தயாரிப்பது என்ற ஃபார்முலா (சூத்திரம்) எழுதப்பட்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். உடனே காசிமேடு சிக்னலில் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்கு இருசக்கர வாகன எண்ணை அனுப்பி உஷார்படுத்தினர்..
இதனையடுத்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிய மூவரையும் காசிமேடு சிக்னலில் வைத்து போக்குவரத்து போலீஸார் மடக்கி பிடித்தனர். பின்னர் மூவரையும் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், தண்டையார்பேட்டை புது வினோபா நகரை சேர்ந்த ஜாகிர் உசேன்(20), நவாஸ் (19) மற்றும் நாகூர் மீரான் (22) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர்களின் வீடுகளில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோயம்புத்தூரில் சிலதினங்களுக்கு முன்புதான் சில தீவிரவாதிகள் பிடிப்பட்டனர்.இப்பொழுது சென்னையில் என,தமிழகத்தில் மிக சாதாராணமாக இவர்களின் செயல்கள் தொடர்க்கின்றன.இதை தமிழக காவல்துறையோ, மீடியாக்களோ பெரிதாக எடுத்துக் கொள்வதில்லையே ஏன்.?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...