ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால் தான் தொடங்கும் காரியத்தில் வெற்றி கிடைக்க வேண்டும். அப்பொழுது தான் அவன் வாழ்க்கையில் ஒரு சிறந்த நிலையை அடைய முடியும். எந்த காரியம் எடுத்தாலும் தோல்வியிலே முடிந்தால், எந்த ஒரு செயலும் தொடங்கினாலும் பாதியிலே நின்றால் அந்த மனிதனின் வாழ்க்கை எப்படி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவர்களின் குடும்பம் எந்த மாதிரியான ஒரு வேதனைக்கு ஆளாகும் என்பதை எல்லாம் சொல்ல வார்த்தைகள் கிடையாது. இது போல பிரச்சனைகளுக்கு சில ஆன்மீக பரிகாரங்களை முன்னோர்கள் நமக்கு கூறி இருக்கிறார்கள் அதில் மிக எளிமையான ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம். யாராக இருந்தாலும் எந்த ஒரு தொழிலாளாகட்டும்,வியாபாரம் ஆகட்டும், வீடாகட்டும் தொடங்கும் போது அதை நல்ல முறையில் முடித்து அதன் மூலம் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் தான் என்று எண்ணத்தில் தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு ஏனோ எதைத் தொட்டாலும் நஷ்டம் ஆகிக்கொண்டே இருக்கும்.எந்த தொழில் செய்தாலும் அதில் நஷ்டம் தான் கிடைக்கும். வீடு கட்ட வேண்டும் என்று ஆரம்பித்தால் அதுவும் பாதியிலே நின்று விடும் வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எல்லாம் தள்ளி போய் கொண்டே இருக்கும். கையில் உள்ள பணம், நகை எல்லாம் எப்படி போகிறது எதற்காக செலவாகிறது என்று தெரியாமல் போய்க் கொண்டே இருக்கும். இப்படி ஆன பிரச்சினை அடுக்கிக் கொண்டே போகும் அளவிற்கு இருந்தால் அவர்களும் என்னதான் செய்வார்கள். இது போல பிரச்சனைகளில் உள்ளவர்கள் அதில் இருந்து வெளிவர செய்யக் கூடிய மிக எளிய சாதாரணமான ஒரு பரிகாரம் தான் இந்த மஞ்சள் அருகம்புல் பரிகாரம்.இந்த பரிகாரத்திற்கு தேவையானது மூன்றே பொருள் தான். அருகம்புல், மஞ்சள் கிழங்கு, மஞ்சள் நூல். இந்த பரிகாரத்தை செய்வதற்கு, காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் விளக்கேற்றி உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொண்டு, இந்த மஞ்சளையும் அருகம்புல்லையும் ஒன்றாக வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள் போதும்.எந்த ஒரு மங்கள காரியங்களிலும் இந்த மஞ்சள் இல்லாமல் இருக்காது. அதே போல் எந்த காரியம் தொடங்கினாலும் அதற்கு முழுமுதற் கடவுள் விநாயகர் அவருக்கு இஷ்டமான ஒரு பொருள் இந்த அருகம்புல் இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்து இப்படி வைக்கும் பொழுது உங்களின் எந்தக் காரிய தடைகளையும் இது உடைத்து விடும். இதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அருகம்புல் காய்ந்து விட்டால் மட்டும் அருகம்புல்லை மாற்றி வேறு அருகம்புல் வைத்துக் கொள்ளலாம். மஞ்சள் பூச்சி அடைந்து விட்டால் மட்டும் மாற்றுங்கள் இல்லை என்றால் அதை மஞ்சளிலே வைத்து கட்டலாம் இந்த அருகம்புல்லை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள் மஞ்சளை நீங்கள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த எளிய பரிகாரத்தை நீங்கள் செய்து வைத்தாலே போதும் உங்களின் தடைபட்ட சுபகாரியங்கள், தொழில், வியாபாரம் அனைத்துமே சிறந்து உங்களுக்கு கை மேல் பலன் அளிக்கக்கூடிய தாக இருக்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்து நீங்கள் தொடங்கும் அனைத்து காரியத்திலும் வெற்றி அடைந்து நல்ல ஒரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment