'' 'அன்னக்கிளி’ படத்தின் பாடல்கள் வெளிவந்தப்ப, அதைக் கேட்டதும் உங்க மனசுல என்ன நினைப்பு ஓடுச்சு?''
'' சிவகுமார் நடிச்ச பல படங்களுக்கு நான் மியூஸிக் போட்டிருக்கேன். 'அன்னக்கிளி’ பட வேலைகள் ஆரம்பிச்சப்பவே புது மியூஸிக் டைரக்டரை அறிமுகப்படுத்துறாங்கனு பேசிக்கிட்டாங்க. படத்தின் பாடல்களைக் கேட்டுட்டு, 'ரொம்பப் பிரமாதமா... இருக்கே’னு நினைச்சேன். அப்போ எங்கே போனாலும் இதே பேச்சாதான் இருந்துச்சு. தம்பி இளையராஜாவைப் பாராட்டினேன். 'அன்னக்கிளி’ வர்றதுக்கு முன்னயே அவரை எனக்குத் தெரியும். என் ட்ரூப்புல கீபோர்டு வாசிச்சிருக்கார். அற்புதமான மேதை. அவரும் என் மேல் அலாதி அன்பு வைத்திருந்தார். இன்னொரு விஷயம், யாரையும் நான் பொறாமையோட பார்த்தது இல்லை. ஆனா, போட்டி இருக்கும்.''
No comments:
Post a Comment