Thursday, April 13, 2023

முற்றிலும் உண்மை.

திமுக முதல், இடதுசாரிகள், நக்சலைட்டுகள், விசிக, மற்றும் நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த கமால்ஹசனின் மய்யம் வரை பாஜக வந்துவிடக்கூடாது என்று துடிப்பது ஏன்?
இந்த நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அவரவருக்கான இடம் இருக்கிறது.... ஒவ்வொருவரும் மாறிமாறி வெற்றி பெறுகிறார்கள்.. இருந்தும் பாஜக என்ற ஒரு கட்சியை கண்டு மட்டும் ஏன் இத்தனை பயம் ?
இதோ, இதுதான் காரணம்...
வங்கதேசம் சென்றிருந்த பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் அங்கு உள்ள காளி கோயிலுக்குச் சென்று விழுந்து வணங்கும் காட்சி...
இலங்கைக்கு சென்றால் அங்குள்ள சீதாதேவி கோயிலுக்குச் செல்கிறார்... சிங்கப்பூருக்குச் சென்றால் அங்குள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார்... அமெரிக்காவுக்குச் சென்றாலும், ரஷ்யாவுக்கு சென்றாலும் எங்கெல்லாம் இந்து ஆலயங்கள் இருக்கின்றனவோ அங்கு சென்று வழிபடுகிறார் பிரதமர்... இதுதான் இவர்களுக்கு வலிக்கிறது..
நினைத்துப் பாருங்கள்..
சமீப காலம் வரை, சுமார் 20 வருடங்களுக்கு முன்பு கூட நாம் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பெரிய கோயிலுக்கு செல்வதைத் தான் வழக்கமாக வைத்திருப்போம்... வீட்டுக்கு விருந்தாளிகள் வந்தால் அவர்களை முதலில் அழைத்துச் செல்வது கோயிலாகத் தான் இருக்கும்... எனக்கு இன்றுமே இதுதான் வழக்கம்... எங்கு சென்றாலும் அந்த ஊரில் உள்ள மிக முக்கியமான கோயில் எது என்று கேட்பேன்.. முடிந்தவரை அங்கு சென்று தரிசிப்பேன்... இதெல்லாம் நாம் மறந்து போன நம்முடைய பண்பாட்டுக் கூறுகள்... அதாவது நாமாக மறக்கவில்லை .. மறக்கடிக்கப்பட்டோம்.
சினிமாக்களும், மால்களும், தீம் பார்க்குகளும், இதர பொழுதுபோக்குச் சாதனங்களும் நம்மீது திணிக்கப்பட்டு நம் மரபார்ந்த பழக்க வழக்கங்கள் மறக்கடிக்கப்பட்டன... இவையெல்லாம் திடீரென இல்லாமல் மெல்ல மெல்ல செயல்படுத்தப்பட்டன... இவற்றின் பின் உலகளாவிய சதி உண்டு...
இதையெல்லாம் தான் பாஜக மீண்டும் வழக்கத்துக்குக் கொண்டுவருகிறது... எதிரிகளுக்கு இது தான் வலிக்கிறது... அவர்கள் இத்தனை காலம் அரும்பாடுபட்டு மறக்க வைத்த நம் பண்பாட்டுக் கூறுகளை, நம் பழக்க வழக்கங்களை பாஜக மீட்டு எடுத்து விடுமோ, அதனால் மீண்டும் ஒரு ஹிந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.. அப்படி ஏற்பட்டுவிட்டால் மதச்சார்பின்மையின் பெயரால் ஹிந்துக்களின் மண்டையைக் கழுவி வயிறு வளர்க்கும் தங்கள் பிழைப்புக்கே ஆபத்தாகிவிடுமே. அதற்குத்தான் கதறுகிறார்கள்.... கதறிக் கொண்டே இருக்கட்டும்...
நாம் தொடர்ந்து பாஜகவை ஆதரிப்போம்....

15

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...