என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
கடந்த 2-ம் தேதியன்று 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகள் வெளியிட்ட தயாநிதியின் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் ஊழல் பற்றிய செய்திக்கு பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் பணி புரியும் மீனலோசனி என்ற உயரதிகாரி ஒருவர் மறுப்பு அறிக்கை வெளியிட்டார்..!
தயாநிதி மாறனின் வீட்டில் ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தொலைபேசி இணைப்பு இருந்தது என்றும், அந்த இணைப்பின் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உச்சக்கட்ட அளவை விடவும் குறைவாகத்தான் தயாநிதி மாறன் பேசியிருப்பதாகச் சான்றிதழ் வழங்கியிருந்தார்.
இச்செய்தி வெளியான பின்பு 2-ம் தேதி காலையில் இருந்தே தயாநிதியை விரட்டிப் பிடிக்க முயற்சி செய்த டெல்லிவாலா டிவிக்கள் அவர் கையில் சிக்காததால் "தயாநிதி தலைமறைவு" என்றெல்லாம் நியூஸ் போட ஆரம்பிக்க, வேறு வழியில்லாமல் அன்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது 'தினமணி'யில் வந்த செய்தி முற்றிலும் தவறு என்று மறுத்தார் தயாநிதி.

“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் வீண் பழி சுமத்துவதற்காக பொய்யான குற்றச்சாட்டை மீண்டும் சுமத்தி இருக்கிறார்கள். 2008-ம் ஆண்டு தொலைத் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்த பிறகு, அப்போது விசாரணை நடத்தி இருக்க முடியும். அந்த சமயத்தில் நான் அரசியலில் தீண்டத்தகாதவனாக இருந்தேன். நான் மந்திரி பதவியில் இல்லாத அந்த சமயத்தில், யாரும் என்னுடன் தொடர்பு கொள்ள விரும்பவில்லை.
யாருக்கும் நான் ஒரு போதும் எந்த உதவியும் செய்தது கிடையாது, எந்த சலுகையும் பெற்றது கிடையாது. அரசியல் வட்டாரத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டு இருந்தேன். நான் ஏதாவது தவறு செய்து இருப்பதாக கருதினால் எந்த விசாரணைக்கும் தயாராக இருக்கிறேன்.
எனது குடும்ப தொழில் சம்பந்தமாக எனது சென்னை இல்லத்துக்கு 300-க்கும் அதிகமான பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் பெற்றதாக கூறப்படுவது உண்மைக்கு மாறானது ஆகும். இது தொடர்பாக எழுப்பும் கேள்விகள் மூலம் எனது நேர்மையை மட்டு-ன்றி எனது குடும்பம் மற்றும் எனது கட்சியின் நேர்மையையும் பற்றி சிலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.
எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் இருந்தது. எனக்குள்ள குறிப்பிட்ட தொகையை காட்டிலும் குறைவான தொகைக்குத்தான் நான் பேசினேன். இதை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திடம் இருந்து எனக்கு வந்துள்ள கடிதம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
எனது போட் கிளப் இல்லத்தில் எத்தனை தொலைபேசி இணைப்புகள் உள்ளன என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கோரி பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளருக்கு நான் கடிதம் எழுதினேன். மந்திரி என்ற முறையில் எனது இல்லத்துக்கு ஒரேயொரு தொலைபேசி இணைப்புதான் (எண் 24375100) வழங்கப்பட்டு இருந்தது.
நான் ஏதாவது தவறு செய்து இருந்தால் எந்த தண்டனையையும் ஏற்க தயாராக இருக்கிறேன். யாருடைய தயவையும் நான் எதிர்பார்க்கவில்லை. என் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் சட்டப்படி சந்திப்பேன். நான் ஒரு அப்பாவி. என்னையும் எனது நேர்மையையும் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையும் எனக்கு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு தயாநிதி மாறன் கூறினார்.
இந்த விளக்கத்தை அளித்துவிட்டு கூடவே 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளுக்கு வக்கீல் நோட்டீஸும் அனுப்பியிருக்கிறார் தயாநிதி மாறன்..!
ஏற்கெனவே 'ஏர்செல்' கம்பெனி சன் டி.டி.ஹெ.ச்சில் முதலீடு செய்தது சம்பந்தமாக செய்தியை வெளியிட்ட தெஹல்கா மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். (கவனிக்க : வெறும் நோட்டீஸ்தான். கோர்ட்டில் வழக்குத் தொடரவில்லை)
தயாநிதி அளித்த நோட்டீஸுக்கு பதில் அளிக்கும்விதமாக இன்றைய 'தினமணி' மற்றும் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்திரிகைகளில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அது இங்கே பாலோ அப்புக்காக..!
"தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐ.எஸ்.டி.என். இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.
தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சி.பி.ஐ. அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சி.பி.ஐ.-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சி.பி.ஐ. தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.
மூன்றாவதாக, மத்திய அரசின் சி.பி.ஐ. அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட 'தினமணி' மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.
தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.
இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பி.எஸ்.என்.எல். கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐ.எஸ்.டி.என்.-பி.ஆர்.ஏ. என்றும், வேறு எந்த பி.எஸ்.என்.எல். இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள்வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் 'தினமணி'யில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.
சி.பி.ஐ. அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பி.எஸ்.என்.எல்., ஐ.எஸ்.டி.என். இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.
சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய அதன் இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம்.
ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.
இதே இணைய பக்கத்தில் சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பி.எஸ்.என்.எல். இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரிய வருகிறது.
24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சி.ஜி.எம். சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடிதத் தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.
24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சி.பி.ஐ. பட்டியலிட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் சி.பி.ஐ. மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் கொண்ட தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சி.பி.ஐ. ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.
மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையத்தளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி..? ஏனெனில் இந்த எண் குறித்து சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா..? மேலும் பார்க்கலாம்.
"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சி.பி.ஐ. முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.
சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது…? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.
அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.
மேலும் சி.பி.ஐ. அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.
ஆனால் அவை எங்கே இருக்கின்றன..? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி..? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.
இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சி.பி.ஐ. குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.
இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.
நன்றி: எஸ். குருமூர்த்தி. , தினமணி-04-06-2011
இதற்கிடையில் அன்றைய தினமே தி.மு.க. தலைமையில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது.
அதில், “நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் காரணமாக, அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகி, சட்ட நடவடிக்கைகளை சந்திக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகாவிட்டால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
ஜெயலலிதா இன்றும் அவர் மீது பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு, ஊழல் வழக்குகளின் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இவர் தன்னுடைய முதல்வர் பொறுப்பை ராஜினாமா செய்து விட்டுத்தான் நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தாரா? என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்காக, அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்க மாட்டார்.
ஆனால் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மட்டும் ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்திக்க வேண்டுமா? மக்கள் இந்த விதண்டாவாதத்தை நிச்சயம் புரிந்து கொள்வார்கள். தமிழகத்தில் ஒரு பழமையான முதுமொழி உண்டு. அதுதான் ‘தன்னைப் பார்த்து பின்னே பேசு...’ என்பதாகும். ஜெயலலிதா இதுபோன்ற கருத்துக்களை தெரிவிக்கும் முன், தன்னை பற்றியும் தன் மீது உள்ள ஊழல் வழக்குகள் பற்றியும் சிந்திக்காமல் பேட்டியளிப்பது அறிவுடைமையாகாது..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆக.. வழக்கம்போல இந்தப் பிரச்சினை தீர்வு வேண்டி கோர்ட்டுக்கு போவதற்கு முன்பாகவே அவதூறு வழக்குகளுக்காக கோர்ட் படியேறும்போல தோன்றுகிறது..!
மீனலோசனி என்ற அந்த ஜெனரல் மேனேஜர் வெளியிட்ட தகவலே பாதி பொய்யாக இருக்கிறதே..! டெலிபோன் டைரக்டரியிலும், இணையத்தளத்திலும் பொய்யான எண்களையா வைத்திருப்பார்கள்...? இப்போதும் பொதுமக்கள் அதைத்தானே உண்மை என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.. பின்பு எப்படி இது பொய்யாகும்..?
இந்த ஒரேயொரு நம்பர்தான் தயாநிதி மாறனின் வீட்டில் உள்ளது திரும்பத் திரும்ப மீனலோசனி பொய்யை உரைத்திருக்கிறாரே..? அவரை இப்படி பொய் சொல்ல வைத்திருப்பது யார்? எது..? ஏன்..? எதனால்..?
ஒரே மாதத்தில் 48 லட்சம் யூனிட் பேசியிருக்கிறார்கள் என்றால் இதனை எப்படி கணக்கில் எடுத்துக் கொள்வது. அதுவும் வீட்டில்.. அந்த வீட்டில் இருப்பதே 4 பேர். ஒரு யூனிட் என்பது 3 நிமிடங்கள். 48 லட்சம் யூனிட்டுகள் என்றால் 1 கோடியே 44 லட்சம் நிமிடங்கள் வருகின்றன. இவைகளை நேரக் கணக்கில், நாள் கணக்கில் வகுத்தால்..? ம்ஹும்.. தலை சுற்றுகிறது..!
இந்த ஒரு துப்பை வைத்துதான் சி.பி.ஐ., தோண்டித் துருவி சன் டிவி தனது ஒளிபரப்புகளுக்காக தயாநிதியின் வீட்டில் அமைக்கப்பட்டிருந்த இந்த தனி டெலிபோன் எக்சேஞ்சின் உயர்தர கேபிள் கனெக்ஷனை பயன்படுத்தியிருக்கிறது என்று கண்டறிந்து அறிக்கையாக சமர்ப்பித்திருக்கிறது..!
தன்னைப் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டுவிட்டார்கள் என்று இன்று கதறும் தயாநிதி மாறன் 'தினமணி', 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது கோபப்படும் முன் வேறு சில வேலைகளை அவர் செய்தாக வேண்டும்..!
1. தன் மீது இந்தப் புகாரை எழுப்பி சி.பி.ஐ. மூலமாக விசாரிக்கச் சொன்ன தனது சக அமைச்சர்களில் ஒருவராக இருந்த ஆ.ராசா மீதுதான் முதலில் வழக்குத் தொடர வேண்டும்..!
2. அடுத்து சி.பி.ஐ. தன்னைப் பற்றி அவதூறாக, தப்புத் தப்பாக அறிக்கையைத் தயார் செய்து கொடுத்திருக்கிறது என்று சி.பி.ஐ. மீதுதான் தயாநிதி மாறன் வழக்குத் தொடர வேண்டும்..! இந்த அறிக்கையை மையமாக வைத்துதான் இப்போது தினமணியும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையும் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளன..!
3. மூன்றாவது, 2009-ம் ஆண்டே இச்செய்தியை தனது கட்சிப் பத்திரிகையான நமது எம்.ஜி.ஆரிலும், ஜெயா டிவியிலும் ஒளிபரப்பி, வெளியாகச் செய்து பல கூட்டங்களில் இது பற்றிப் பேசிய ஜெயலலிதா மீதுதான் மான நஷ்ட வழக்கு போட வேண்டும்..!
4. சி.பி.ஐ. பதில் அளிக்கவில்லையெனில் அதற்குப் பொறுப்பான பிரதமர் மீதுதான் தயாநிதி மாறன் குற்றம் சுமத்த வேண்டும்..!
5. தனது ஆதரவை வைத்துக் கொண்டு ஆட்சியில் அமர்ந்திருந்தும் தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்திய சி.பி.ஐ.யை கண்டிக்கத் தவறிய பிரதமர் மன்னமோகனசிங்கை தயாநிதி மாறன் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும்..!
6. தங்களது கட்சியின் ஆதரவினால் வாழ்ந்து கொண்டு லீகலாக நீங்களே கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று எகத்தாளத்துடன் கூறியிருக்கும் பிரதமர், இந்தியாவின் அன்னை சோனியா ஆகிய இருவரையும் தனது கட்சி ஏன் கண்டிக்கவில்லை என்று தனது கட்சித் தலைவரான தாத்தாவின் சட்டையைப் பிடித்து உலுக்க வேண்டும்..!
7. தனது கூட்டணி கட்சியை இப்படி மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தும் சர்வாதிகார காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்து தி.மு.க. கழகம் விலக வேண்டும் என்று தயாநிதி மாறன் அக்கட்சித் தலைவர்களிடம் போராட வேண்டும்..!
8. தாத்தாவும் கண்டு கொள்ளவில்லையெனில் தன்னை தேர்ந்தெடுத்த கட்சியே தன்னை கைவிட்டுவிட்டது. தாத்தாவே புறந்தள்ளுகிறார். தனக்கு மரியாதை இல்லை. தான் திருடன் என்று தனது கட்சியை மறைமுகமாக ஒத்துக் கொள்கிறது என்று பத்திரிகைகளிடம் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்..!
இவைகளைச் செய்து முடித்துவிட்டு பின்பு கடைசியாக 'தினமணி,' 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மீது பாய்வதுதான், தயாநிதி மாறனின் நேர்மையான செயலாக இருக்கும்..!

No comments:
Post a Comment