Tuesday, June 7, 2011

சிபிஐ அடுத்த அட்டாக் தயாநிதி மாறன்.... பரபரப்பு தகவல்..


தயாநிதி மாறனுக்கு எதிராக சிவசங்கரன் அளித்துள்ள வாக்குமூலம் முக்கிய சாட்சியமாக மாறுகிறது. இதை வைத்து ஏர்செல் நிறுவனத்திற்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தரப்பட்ட விவகாரத்தில் எப்ஐஆர் பதிவு செய்ய சிபிஐ தயாராகி விட்டது. பிரதமரின் அனுமதிக்காக தற்போது சிபிஐ காத்துள்ளதாக தெரிகிறது.

தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டு இதுதான் - சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்தபோது 2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் கோரி அவர் விண்ணப்பித்தார். ஆனால் தயாநிதி மாறன் லைசென்ஸ் தரவில்லை. மாறாக அவரை, மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திடம் ஏர்செல் நிறுவன பங்குகளை விற்குமாறு தயாநிதி மாறன் நெருக்கினார், மிரட்டினார். இதையடுத்து வேறு வழியில்லாமல் சிவசங்கரன், ஏர் செல் நிறுவனத்தை மேக்ஸிஸ் நிறுவனத்தின் ஆனந்தகிருஷ்ணனிடம் விற்று விட்டார்.

இந்த ஆனந்தகிருஷ்ணன், சன் டிவியின் நிறுவனரான கலாநிதி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். ஏர்செல் நிர்வாகம் மாறிய உடனேயே 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டது.

அடுத்த சில மாதங்களில் சன் டிவியின் சன் டைரக்ட் நிறுவனத்தில் ரூ. 800 கோடியை முதலீடு செய்தது ஆனந்தகிருஷ்ணனின் மேக்ஸிஸ் நிறுவனம். இதுதான் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை டெஹல்கா இணையதளம் செய்தியாக வெளியிட்டது. இதைத்தான் தற்போது சிபிஐ தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சிவசங்கரனிடம் நேற்று சிபிஐ நீண்ட நேரம் விசாரணை நடத்தியது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து வாக்குமூலம் அளித்தார் சிவசங்கரன்.

சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் எனக்குக் கொடுத்த நெருக்கடியால், என்னை கழுத்தை நெரிப்பது போல உணர்ந்தேன். தயாநிதி மாறனின் செல்வாக்கு காரணமாக எனது விண்ணப்பங்களை மத்திய தொலைத் தொடர்புத்துறை நிராகரித்து விட்டது. இதையடுத்து வேறு வழியில்லாமல் நான் ஆனந்தகிருஷ்ணனிடம் ஏர்செல்லை விற்க முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார். (தட்ஸ் தமிழ்)

சிவசங்கரனின் வாக்குமூலத்தை முக்கிய சாட்சியமாக பதிவு செய்துள்ளது சிபிஐ. இந்த விவகாரம் குறித்து தற்போது பிரதமர் அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பியுள்ளது சிபிஐ. பிரதமர் ஒப்புதல் கிடைத்தவுடன் தயாநிதி மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து அவரை நேரில் வரவழைத்து சிபிஐ விசாரணை நடத்தும் என்றும் தெரிகிறது.
நெருப்பில்லாம் புகையாது என்ற ப‌ழமொழியைப்போல் உள்ளிருக்கும் விஷயங்கள் கண்டிப்பாக வெளிவரும் என நம்புவோம்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...