டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி., கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் கடந்த மாதம் 20-ந்தேதி கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கனிமொழி சார்பில் முதலில் சி.பி.ஐ. சிறப்பு நீதி மன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்யப்பட்டது.
கனிமொழிக்காக பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆஜராகி வாதாடினார். ஆனால் நீதிபதி ஒ.பி. சைனி அவரது வாதத்தை ஏற்க மறுத்து கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். உடனடியாக கனிமொழி கைது செய்யப்பட்டார்.
இதை எதிர்த்து கனிமொழி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அஜீத்பாரிகோகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதே போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமாரும் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இவர்கள் சார்பில் மூத்த வக்கீல் அல்டாப் அகமது ஆஜராகி வாதாடினார்.
கடந்த மே மாதம் 30-ந்தேதி இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் மனு மீதான உத்தரவை நீதிபதி ஒத்திவைத்தார். இன்று கனிமொழி ஜாமீன் மனு மீது தீர்ப்பு வழங்கப்படும் என்று அறி விக்கப்பட்டது. அதன்படி நீதிபதி அஜீத்பாரிகோகே இன்று காலை 11.15 மணிக்கு ஜாமீன் மனு மீதான தீர்ப்பை வாசித்தார். அப்போது கனிமொழியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதே போல் கலைஞர் டி.வி. நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
கனிமொழி குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் உள்ளதால் அவரது ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இன்று தீர்ப்பு வழங்குவதையொட்டி கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லி ஐகோர்ட்டுக்கு வந்திருந்தனர். ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அறிவித்ததும் ராஜாத்தி அம்மாள் அதிர்ச்சியில் கண்கலங்கினார். தி.மு.க. எம்.பி.க்களும் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கனிமொழி எம்.பி. திகார் ஜெயிலிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கனி அக்கா நீ கொஞ்ச வெய்ட் பண்ணு உன் உறவினர் மாமா வெகு விரைவில் திகார் ஜெயிலை நோக்கி வந்து கொண்டு இருக்கிறார்.அதற்குபிறகு எல்லாரும் சேர்ந்து பேட்மிண்டன் விளையாடுங்க.லஞ்சம்,ஊழல் செய்பவர்களுக்கு முக்கியமா இந்தியர்களுக்கு நீங்கள் எல்லாரும் ஒரு பாடமாக விளங்கிவிட்டீர்கள்.நமது நாட்டில் நீதி உண்மையாக யாருடைய தொந்தரவு இல்லாமல் வேலை செய்கிறது.அறிஞர் அண்ணா உயிரோடு இருந்திருந்தால் அவர் உருவாக்கிய தி.மு.க இப்படி இருந்திருக்காது.
பணம் கொள்ளை அடித்தவர்கள் ஜெயிலில் மட்டும் இருந்து போவது, அவர்களுக்கு சிறிது காலம் ரெஸ்ட் எடுப்பது போல் தான். ஜெயிலில் இருக்கும் இவர்களுக்கு நல்ல சாப்பாடு கிடைகிறது. பொழுது போக்க டிவி இருக்கிறது. எல்லா சீரியல், மானாட மயிலாட, சூப்பர் சிங்கர், ஜாக்பாட் போன்ற நிகழ்சிகளை பார்த்தால், நேரம் போவதே தெரியாது. இவர்கள் திருடிய பணத்தை சிபிஐ மீட்க வேண்டும். அந்த பணத்தை, நம் நாடு முழுவதும் நல்ல ரோடு வசதிக்கும், ஹாஸ்பிடல் கட்டி மருத்துவ துறையில் முன்னேற்றத்தை கொண்டு வர வேண்டும்.
ரொம்பவும் ஆடினா அப்படித்தானே நடக்கும். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்ற பழமொழி பொய் . தெய்வம் இன்றே கொல்லும். உள்ள போயி சாவுங்கடா எல்லோரும்.
இனிமேல் சென்னை சங்கமம் மற்றும் தமிழ் மையம் நிகழ்சிகள, சன் டிவி, கலைஞர் டிவி இரண்டையும் முடக்கவேண்டும்
No comments:
Post a Comment