:""உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரேகுடும்பம், கருணாநிதிகுடும்பம் தான்,'' என,சட்டசபையில் அ.தி.மு.க., உறுப்பினர் வைகைச் செல்வன் குற்றம் சாட்டினார்.
கவர்னர் உரை மீதானவிவாதத்தில், அ.தி.மு.க., உறுப்பினர் வைகைச் செல்வன் பேசியதாவது:முன்னாள் முதல்வர்கருணாநிதி, தமிழ் மொழியின் வளர்ச்சிக்கென எதையும்செய்யவில்லை. ஆனால்,இந்த மொழியை வைத்து, அவர் குடும்பத்தினர்வளர்ந்தனர்.
கோவையில், தமிழ்ச் செம்மொழி மாநாடு என்று, ஒரு மாநாட்டை நடத்தினார். அந்த மாநாடு, முழுக்க முழுக்க அவரைப் பற்றி புகழ் பாடும் மாநாடாகத் தான் அமைந்தது. முதல் மூன்று வரிசையிலும், அவரது குடும்பத்தினர் தான் அமர்ந்திருந்தனர். அந்தளவிற்கு, அவரது குடும்பம் மிகவும் பெரியது. உலகத்தில் மொழியை வைத்து பிழைத்த ஒரே குடும்பம், கருணாநிதி குடும்பம் தான்.வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதை விட, வரலாற்று சுவர்களில் தங்களின் பெயர்களை செதுக்குவதில் தான், அவர்கள் குறியாக இருந்தனர்.
புதிதாக கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தில், தமிழகத்தின் தொன்மையான கட்டடக் கலை எதுவும் தென்படவில்லை. மாறாக, பன்னாட்டு வணிக நிறுவனத்தின் கட்டடம் போல் கட்டியுள்ளனர். இந்தப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பதற்காக, வட இந்திய ஊழியர்களை சக்கையாக கசக்கிப் பிழிந்தனர். தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்பட்டது.கேபிள், சினிமா, நடிப்பு, கான்ட்ராக்ட் என, ஒரு துறையையும் விட்டு வைக்காமல், அனைத்து துறைகளிலும் கருணாநிதி குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினர். இதன் காரணமாகத் தான், நடந்து முடிந்த தேர்தலில், தி.மு.க.,விற்கு மக்கள் சரியான பாடம் புகட்டினர்.இவ்வாறு வைகைச் செல்வன் பேசினார்.

No comments:
Post a Comment