ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் கனிமொழி ஜாமீனை ரத்து செய்து பரபரப்பான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு நிச்சயம் தி.மு.க தோல்வியைவிட மிக்க மகிழ்ச்சியை தமிழக மக்களுக்கு கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அடுத்தடுத்த தொடர் தோல்விகள், இன்னல்கள் தி.மு.க வை துரத்திக்கொண்டிருப்பது என்னைப்போன்ற தி.மு.க தொண்டர்களுக்கு வருத்தத்தை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதில் இருந்து கழகம் நிச்சயம் மீண்டு வரும் என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்குமுன் தி.மு.க வில் இருக்கும் குறைகளையும், கறைகளையும் நீக்கவேண்டியது அவசியமே. அதற்காக இந்த கனிமொழி கைது விவகாரத்தை மகிழ்ச்சியுடனே வரவேற்கலாம்.
ஸ்வீட் எடு கொண்டாடு
இன்னும் நிறைய குள்ளநரிகளும், கொள்ளை நரிகளும் கழகத்தில் உள்ளனர், அவர்களையும் கைது செய்து கழகத்தை சுத்தப்படுத்தும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். எல்லாம் நன்மைக்கே!.
"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.."
No comments:
Post a Comment