Friday, June 3, 2011

கலாநிதி, தயாநிதி மாறன் கைது எப்போது?

இம்மென்றால் நோட்டீஸ், அம்மென்றால் நஷ்ட ஈடு கேட்கும் தயா நிதி மாறானின் நேற்றைய பேட்டியைப் பார்க்க வேண்டுமே, முகம் சிவந்து அஷ்ட கோணலாகி, என்னவோ இவரு தாத்தா இப்போதும் முதலமைச்சராய் இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டிருப்பார் போல. கடுகடுவென்று ஆத்திரம் கொப்பளிக்க பேட்டி கொடுத்தார். அந்தக் காட்சியை கீழே இருக்கும் இணைப்பில் பாருங்கள். நித்தியானந்தாவைக் கிழி கிழியென்று கிழித்த போது, அவரு என்ன உங்களை மாதிரியா கோபம் கொப்பளிக்க பேட்டி கொடுத்தார்? இப்போது வலிக்குது. சிபிஐ அக்குவேறு ஆணி வேராக நோண்டி நொங்கெடுத்து ரிப்போர்ட் கொடுத்து விட்டார்கள். எக்ஸ்பிரஸ் அதை ஆதாரமாய் வைத்து கட்டுரை வெளியிட்டிருக்கிறார்கள். நான் தவறே செய்யவில்லை என்று உதார் விடுபவர் சிபிஐயின் மீது வழக்கொன்றினைப் போட வேண்டியதுதானே?
யாருக்கு கோபம் வரும்? இயலாமை, கண்டுபிடித்து விட்டார்களே என்பவர்களுக்குத் தான் கோபம் வரும். இவரு தரப்பு உண்மையை சிபிஐ கண்டுபிடித்து விட்டார்கள். கோபம் வருகிறது.


டெலிபோன் துறைக்கு 400 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்தி விட்டார்கள் என்று மீடியாக்களில் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
சிபிஐ கூடிய விரைவில் இரண்டு வழக்குகளை தயா நிதி மாறன் மீது தாக்கல் செய்யவிருப்பதாக மீடியாக்கள் செய்திகளை வெளியிடுகின்றன. தொடர்ந்து இரண்டு மாறன்களையும் திஹார் சிறையில் பார்க்கலாம் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.
ஊரான் வீட்டுக்காசைக் கொண்டு தொழில் நடத்தினால் எல்லோரும் சும்மாவே வேடிக்கையா பார்த்துக் கொண்டிருப்பார்கள்?
திமுக தலைவரின் குடும்பம் இந்தியாவைக் கொள்ளையடித்த விஷயங்கள் ஒவ்வொன்றாய் அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.
தமிழன் என்றுச் சொல்லவே “ படுகேவலமாய்” இருக்கிறது இவர்கள் செய்த தவறினால்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...