வர்ற, செப்டம்பர் 15 முதல் ஜெ அரசு மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்ற பொருட்களை மகளிருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளது. அதே போல மாணவ மாணவியர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமும செப்டம்பர் முதல்ஆரம்பிக்க உள்ளது. மேலும் முதியோர்களுக்கான ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.
கலைஞர் காப்பீடு திட்டம் நிறுத்தப்பட்டு, புதிய பொது மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இவை தவிர, அரசு பெண் ஊழியர்களுக்கு கூடுதலாக மகப்பேறு விடுப்பு காலம், 20 கிலோ இலவச அரிசி திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. ஜெ அரசால் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன இலவச திட்டங்களும், சொல்லாத திட்டங்களும் படிப்படியாக மக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இந்த திட்டங்கள் எல்லாம் நாம் பெறவேண்டுமானால் நம்முடைய குடும்பத்திற்கான ஆவணங்கள் சரியாக வைத்திருக்க வேண்டும். அதிலும் முக்கியமாக ரேசன் கார்டு சரியான முகவரியில் வைத்திருக்க வேண்டும். நம் பெயரிலோ, முகவரியிலோ தவறிலாமல் வைத்திருக்க வேண்டும். ஏதேனும் மாற்றங்கள் தேவைப்படின் தகுந்த அதிகாரிகளை பார்த்து சரி செய்ய வேண்டும்.
புதிதாக திருமணம் செய்தவர்கள் தங்களுக்கென தனியாக ரேசன் கார்டு வாங்க வேண்டும். புது ரேசன் கார்டு விண்ணப்பிக்கும் போது பெற்றோர்களிடம் சேர்ந்து இருக்கும் பெயரை முதலில் நீக்கம் செய்து ஒரு சான்றிதழ் வாங்க வேண்டும். அந்த சான்றிதழை நம் புதிய ரேசன் கார்டுக்கான விண்ணப்பத்தில் இணைத்து வினப்பிக்க வேண்டும்.
ஆக மக்களே, ரேசன் கார்டு இல்லாதவர்கள் புது ரேசன் கார்டுக்கு விண்ணப்பம் செய்யுங்க. ரேசன் கார்டில் பிழைகள் இருப்பவர்கள் சீக்கிரமா திருத்தம் செஞ்சுக்கங்க. அப்ப தான் அரசு வழங்கும் எல்லா இலவசமும் நம் வசம் ஆகும்.
No comments:
Post a Comment